தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 november 2014

கொஸ்லாந்த பேரனர்த்தம்! அமெரிக்கா, இந்தியா நிதியுதவி - பாகிஸ்தான் நிவாரண உதவி!



தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் மரண தண்டனை! மோடி - மஹிந்த விரைவில் பேச்சு
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 12:59.42 AM GMT ]
இலங்கையில் இந்திய மீனவர்கள் ஐந்து பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இடம்பெற்று வரும் போராட்டங்களுக்கு மத்திய அரசாங்கம் உடனடியான தீர்வை காண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் சட்டமுறைப்படி 1976ஆம் ஆண்டு முதல் மரணதண்டனை நிறைவேற்றம் மேற்கொள்ளப்படுவதில்லை. எனினும் இந்திய மீனவர்களின் நிலை தொடர்பில் இந்தியா ஏற்கனவே சில முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக, இந்திய அதிகாரிகள் ஏற்கனவே இலங்கையின் ஜனாதிபதி காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி காத்மண்டுவில் சார்க் மாநாடு நடைபெறவுள்ளது. இதன்போது மீனவர் மரணதண்டனை தொடர்பில் இந்திய பிரதமர், இலங்கை ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவார் என்று இந்திய அரசாங்கத்தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை மற்றும் ஒருநாட்டின் சட்டத்துறை தொடர்பில் இந்தியாவுக்கு தெளிவாக தெரிந்திருக்கும் என்று இலங்கையின் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 2010ஆம்; ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட கைதிகளை பரிமாற்றதின் அடிப்படையில் இலங்கையில் சிறைப்பட்டுள்ள இந்திய கைதிகளை இந்தியாவுக்கு மாற்றம் செய்து அங்கு சிறைப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கையில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்கும் வாய்ப்பை அவர் நிராகரித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjsz.html

கொஸ்லாந்த பேரனர்த்தம்! அமெரிக்கா, இந்தியா நிதியுதவி - பாகிஸ்தான் நிவாரண உதவி
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 01:23.36 AM GMT ]
கொஸ்லாந்த மீரியபெத்தை தோட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இந்தியா முதற்கட்ட உதவியாக 50 இலட்சம் இந்திய ரூபாய்களை ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர இந்த மக்களுக்கு நீண்ட காலத்தில் உதவக்கூடிய ஏதுநிலைகள் குறித்து இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அமெரிக்கா 50 ஆயிரம் டொலர்களை ஒதுக்கியுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கையில் உள்ள தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்களின் ஊடாக, நிவாரண உதவிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தூதரகம் அறிவித்துள்ளது.
அமெரிக்க தூதரக உதவிகளின்படி உணவு, உடை மற்றும் உறையுளுக்கான பொருட்கள் அடங்குகின்றன.
மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் நிவாரண உதவி
கொஸ்லாந்தை மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பாகிஸ்தானின் நிவாரண உதவிகள் விரைவில் இலங்கைக்கு வரவுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காசிம் குரேசி இதனை அறிவித்துள்ளார்.
இதேவேளை பாகிஸ்தானின் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ரஹீல் சரீப் இலங்கையின் இராணுவ தளபதி தயா ரட்நாயக்கவுடன் தொடர்பு கொண்டு மண்சரிவு பாதிப்பு குறித்து தமது கவலையை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjs2.html

Geen opmerkingen:

Een reactie posten