[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 02:04.09 AM GMT ]
இவர்கள் ஹட்டன் பண்டாரநாயக்க விகாரையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்பகமுவ பிரதேச செயலாளர் தெரிவிக்கின்றார்.
குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதனால் தேசிய கட்டிட நிர்மாண ஆய்வு நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைய இவர்கள்; தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அம்பகமுவ பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.
குறித்த மக்களுக்கு அத்தியவசிய பொருட்களையும் உணவு வகைகளையும் நுவரெலியா மாவட்ட செயலகம் வழங்கி வருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjs6.html
மீரியபெத்த மக்களுக்கு தேவையான வீடுகளை அமைத்துக் கொடுக்க இந்தியாவுடன் பேச்சு: செல்வம் எம்.பி
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 02:38.42 AM GMT ]
எனவே அதனை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்ள பேச்சு நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்க தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இதனை இலங்கையின் இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடக்கு மக்களிடம் சேகரிக்கப்பட்ட நிவாரணங்களுடன் அங்கு செல்லவுள்ளதாகவும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjty.html
நாட்டில் உள்ள அனைவரும் மனித நேயத்தை மதித்து வாழப்பழக வேண்டும்: கலையரசன்
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 03:19.20 AM GMT ]
இச்சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலையரசன்,
வட்டமடு மேச்சல் தரை தொடர்பாக அண்மைக்காலங்களாக இரண்டு சமூகங்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள நாவையடிச்சந்தியில் நடைபெற்ற சம்பவமானது மிகவும் கீழ்த்தரமானதும், மோசமானதுமான நிகழ்வாகும்.
1974ம் ஆண்டு தொடக்கம் சட்ட ரீதியாக கால்நடை பண்னையாளர்களுக்கான மேச்சல் தரையாக ஒதுக்கப்பட்ட வட்டமடு மேச்சல் தரை மேட்டு நிலக் காணியில் கடந்த கால அசாதாரண நிலைமையை பயன்படுத்தி நன்கு திட்டமிட்டு அத்துமீறி அந்த காணியை கூறு போட்டு போலி உரிமத்துடன் உரிமை கொண்டாட சிலர் முயற்சிக்கின்றனர்.போலி உரிமத்துடன் வயல் காணியில் மேட்டுநிலப் பயிர் செய்கை பண்ண முற்பட்டோரிடையேயும், ண்ணையாளர்களுக்கிடையேயும் முரன்பாடுகள் வலுப்பெற்று வந்தது.
இந்த பிரச்சினைக்கு நீதியான தீர்வு வேண்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அது விசாரிக்கப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் மிலேச்சத்தனமான முறையில் பிராணிகளின் தலையை வெட்டி எச்சரிக்கை பிரசுரத்தினை வெளியிட்டவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறான கீழ்த்தரமான செயல்களைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும், எந்த இனத்தினை சேர்ந்தவர்களாக இருந்தாலும் மனித குலத்திற்கு பொருத்தமான செயல்களை செய்ய வேண்டும், யாரும் யாருக்கும் பயந்து ஓடிவிடுவார்கள் என்று மாத்திரம் நினைக்க வேண்டாம்.
மற்றவர்களை தூண்டிவிட்டு அதில் குளிர்காய விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டியவர்கள், அவர்களை புகழ்ந்து பாடி அவர்கள் செய்த செயல் நியாயமானது என்று யாரும் நியாயம் கற்பிக்க முற்படக்கூடாது.
அவ்வாறானவர்கள் அந்தச் சமூகத்திலிருந்தே ஒதுக்கப்படவேண்டியவர்கள்.
ஆறறிவு படைத்த மனிதர்கள் உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கப்பட வேண்டியவர்கள் ஆனால், ஐந்தறிவு கொண்ட மிருகத்தின் உடலை வேறாக்கி அதன் தலையை கொண்டு எச்சரிக்கை பிரசுரம் செய்யும் ஆறறிவுபடைத்தவர்கள் மிருகங்களுக்கு இருக்கும் ஐந்தறிவினை விட குறைவானவர்கள் என்றே பார்க்கப்பட வேண்டும்.
வாய்பேச முடியாத இரண்டு பிராணிகளை வதைத்து இப்படி எச்சரிக்கை பிரசுரங்களை வெளியிட்ட மிருகங்கள் முதலில் மனிதர்களாக வாழப்பழக வேண்டும், இதைவிடுத்து மிருகங்களை விடவும் மோசமாக நடப்பதற்கு முயற்சிப்பது ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் வெட்ககேடான விடயமாகும்.
இந்த நாட்டில் வாழ்கின்ற எல்லோருமே மனித நேயத்தை மதித்து மனிதனாகவே வாழ விரும்புகின்றோமே தவிர இப்படியான காட்டு மிராண்டிதனமான செயல்களை செய்வதற்கு யாரும் முன்வரக்கூடாது எனவும் இதனை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjtz.html
பதுளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உலகமெங்கும் வாழும் தமிழர்கள் முன்வரவேண்டும்: மட்டு.தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 03:50.26 AM GMT ]
என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் அனர்த்தங்களின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் மையப்பகுதியில் எமது உறவுகள் இன்று நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்து துன்பக்கடலில் மூழ்கியுள்ளனர்.
இந்த வேளையில் அந்த மக்களுக்கு கைகொடுத்து ஆறுதல் கூறி அவர்களுக்கு உதவ வேண்டியது மனிதநேயமிக்க ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
அந்த வகையில் அந்த மக்களுக்கு இனமத,பேதமின்றி உதவுவதற்கு உலகமெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்கள் முன்வரவேண்டும்.
கடந்த காலத்தில் சொல்லொண்ணா துன்பங்களை சுமந்து நிற்கும் அந்த மக்களின் வாழ்வில் அடிக்கடி பல்வேறு அனர்த்தங்கள் நிகழ்ந்து அந்த மக்களின் வாழ்வினை சூறையாடிவருகின்றது.
இவ்வாறான நிலையில் பதுளை மாவட்டத்தில் உள்ள கொஸ்லாந்தை, மீரியபெத்தைத் தோட்டப் பிரதேசங்களில் பாரிய உயிர் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அதில் இருந்து தப்பியவர்கள் நிர்க்கதியான நிலையில் உள்ளனர்.
அப்பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தவேளையில் குறித்த மீட்பு பணிக்கு உதவும் வகையில் நாட்டில் உள்ள விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பொது அமைப்புகள் முன்வரவேண்டும் எனவும் இந்த சந்தர்ப்பத்தில் வேண்டிக்கொள்கின்றோம்.
இந்த நாட்டில் கடந்த காலத்தில் யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தங்களினால் பாரிய அழிவுகள் ஏற்பட்டதுடன் அதில் அதிகளவில் தமிழர்களே பாதிக்கப்பட்டனர்.
இந்த நாட்டில் இடம்பெறும் அனைத்துவிதமான அனர்த்தங்களிலும் தமிழ் மக்களே அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுவருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjt0.html
Geen opmerkingen:
Een reactie posten