[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 03:47.46 PM GMT ]
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மலையக விஜயம் குறித்து, மலையகத்திலுள்ள அரசியல் தரப்புக்கள் கூறியிருக்கும் கருத்து தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதுளை, கொஸ்லாந்தைக்கு போனதென்பது, இயற்கை அனர்த்தத்தினால் பாரியளவில் பாதிக்கப்பட்டு, தமது உறவுகள், உடமைகளை இழந்த மக்களுக்கு வட கிழக்கு தமிழ் மக்களின் அனுதாபங்களையும், அவர்களது துன்பங்களில் நாங்களும் பங்கெடுக்கின்றோம் என்பதையும் தெரிவிப்பதே நோக்கமாக இருந்தது.
வடக்கு கிழக்கில் பல்வேறுபட்ட கால கட்டங்களில் ஏற்பட்ட கலவரங்களின் காரணமாக இடம்பெயர்ந்து வந்து வடக்கு கிழக்கில் குடியேறிய பல்லாயிரக்கணக்கான மலையக மக்கள் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கின்றார்கள்.
பாதிக்கப்பட்டவர்களில் அவர்களுடைய உறவுகளும் இருப்பார்கள் என்பதும், அவர்கள் தொடர்பாக அக்கறைப்பட வேண்டிய கடமைப்பாடு அம்மக்களால் தெரிவு செய்யப்பட்ட எமக்கு இருக்கின்றது என்பதையும் செந்தில் தொண்டமான் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
2005 ஆம் ஆண்டிலும், 2011 ஆம் ஆண்டிலும் மண்சரிவுகள் ஏற்படக் கூடிய அபாயங்கள் இருக்கின்றது என்பதை இலங்கை அரசாங்கம் தெரிவித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரசே தெரிவித்துள்ளது.
அப்படி கூறப்பட்டிருப்பின் ஊவா மாகாண அமைச்சாராக இருக்கும் செந்தில் தொண்டமான் சரி, ஏனைய அமைச்சர்களும் சரி இந்த மக்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை இதுவரை எடுத்திருக்கின்றீர்கள்.
பாரிய அழிவுகள் ஏற்பட்ட பின்பும் ஆளும் கட்சியில் இருக்கின்றோம் என்பதற்காக ஏனையோரில் குற்றம் காணுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை.
அது மாத்திரமல்ல மலையகத்திற்கான எங்களுடைய பயணம் என்பது எந்தவித அரசியல் நோக்கம் கொண்டதுமல்ல. மலையக மக்களிடம் நாங்கள் வாக்கு கேட்டு வரப்போவதுமில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்பது அடக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக செயற்படுபவர்கள். ஆகவே அடக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்கள் மலையகத்தில் இருந்தாலும், வேறு எங்கிருந்தாலும் குரல் கொடுக்க வேண்டியது எங்கள் கடமை.
ஆகவே அவ்வாறு பேசக் கூடாதென்று யாரும் எமக்கு தடையுத்தரவு போடமுடியாது. செந்தில் தொண்டமான் கண்டனம் தெரிவிக்கும் அளவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றும் பிழையாக நடக்கவில்லை.
ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மலையக தமிழ் மக்களுக்கு காணிகள் வழங்கி அவர்கள் நிரந்தர குடிகளாக இருப்பதை உறுதிப்படுத்தியவர்கள் நாங்கள்.
யுத்தத்தினால் நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றோம் என்பதும், எமது மக்களின் காணிகளை இராணுவம் பறித்தெடுக்கின்றது என்பது உண்மை. ஆனால் அவற்றை நாங்கள் பெற்றுக் கொள்ள இறுதிவரை போராடுவோம் என்பதையும், மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்ற மாற்றுத் திட்டங்களை அரசு முன்னெடுக்காவிட்டால், அவர்களுக்கு வட கிழக்கில் இடம் இருக்கின்றது என்பதையும் மீண்டும் வலியுறுத்தி கூற விரும்புகின்றேன்.
தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் மலைய தமிழ் மக்களுக்கு மாத்திரமல்லாமல் வட, கிழக்கு தமிழ் மக்களுக்கும் அவர் தலைவராக இருந்தார் என்பதையும் அவரது பேரனாக இருக்ககக் கூடிய செந்தில் தொண்டமான் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன், அவரது பாதையில் பயணிப்பார் எனவும் எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhuy.html
வடமாகாணசபைக்கு 5831 மில்லியன் ஒதுக்கப்பட்டாலும் திறைசேரிக்கு 1876 மில். மட்டுமே வருகின்றது!- சி.வி.கே
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 03:35.31 PM GMT ]
ஐ.தி.சம்பந்தனின் நீங்காத நினைவுகள் நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கூறியதாவது,
வடக்கு மாகாண சபை என்பது இலங்கைத் தமிழர் வரலாற்றில் முதலாவதாக கிடைத்த பெரும்பான்மைத் தமிழ் பேசுவர்களைக் கொண்ட கட்டமைப்பு. அது தமிழ் தேசிய இலக்கின் சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் என்றோ அல்லது இனப்பிரச்சினைக்கான தீர்வு என்றோ எப்போதும் நாம் கூறவில்லை. ஆனால் அது ஒரு பலமாகும்.
வடக்கு மாகாணசபை எதனையும் செய்யவில்லை என குறை கூறுகின்றார்கள். அதனை நாம் ஆரோக்கிய விமர்சனமாக எடுத்துக் கொள்கின்றோம். அவ்விடத்திலிருந்து முன்னகர முயற்சிக்கின்றோம்.
அத்திசையில் எமது பயனத்தை திருப்பியிருக்கின்றோம். இந்நாட்டில் காணப்படும் எட்டு மாகாணசபைகளுக்கும் எமக்கு வேறுபாடு காணப்படுகின்றது.
இந்த அரசாங்கம் எதிராக பார்க்கும் மாகாணசபையாக வடக்கு மாகாணசபை உள்ளது. ஆகவே எதுவும் எமக்கு இலகுவாக இருக்கப்போவதில்லை என நம்புகின்றேன்.
வடக்கு மாகாணத்திற்கான இந்த வருட நிதி ஒதுக்கீடு 5,831மில்லியன் ரூபாவாகும். இதில் வடமாகாணசபையின் திறைசேரிக்கு வரும் நிதியின் அளவு 1876மில்லியன் ரூபா மட்டுமே. எஞ்சியுள்ள 3856மில்லியன் ரூபா எங்களுடைய பெயரில் இருந்தாலும் கூட எமது திறைசேரி அல்லது அதிகாரிகள் ஊடாக செலவிடப்படுவதில்லை.
அதனை மத்திய அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் வேறு திணைக்கள அதிகாரிகளே செய்கின்றார்கள்.
இந்நிலையில் குறித்த அதிகாரிகளிள் செலவிடாத தொகையையும் உள்ளடக்கி வடமாகாணசபை 20வீதமே செலவிடுகின்றது எனக் கூறுகின்றார்கள்.
உதாரணமாக தற்போது இரணைமடு திட்டத்தை எடுத்தால் 1280 கோடி ரூபாவும் அதுபோன்றே மத்திய அரசாங்கத்தின் கீழே உள்ளடங்குகின்றது.
ஆகவே எமக்கு வழங்கப்பட்ட 1876 மில்லியன் ரூபாவையும் இந்த வருட முடிவுக்குள் பயன்படுத்துவோம்.
நாம் பல பிரேரணைகளை நிறைவேற்றினோம் என விமர்சிக்கின்றார்கள்.
முதலாவதாக எமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய தேவையிருக்கின்றது.
குறிப்பாக காணி என்பது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பமாக இருந்திருக்கின்றது. தமிழரசுக் கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் தோற்றப்பாடு நில உரிமையும் அதன் பாதுகாப்பினையும் அடிப்படையாகவே கொண்டிருக்கின்றது.
பண்டா- செல்வா, டட்லி- செல்வா, இந்திய – இலங்கை ஒப்பந்தம், சந்திரிக்காவின் முன்மொழிவுகள் எப்பொழுதும் நிலஉரிமை, பாதுகாப்பு, அந்நிலத்திலுள்ள சனத்தொகையின் பாதுகாப்பு ஆகிய எண்ணங்கள் விரும்பியோ விரும்பாமலோ இருந்திருக்கின்றன.
13வது அரசியல் யாப்பில் காணி மாகாணசபையின் விடயம் என தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
முதல் முறையாக மாகாண சபை என்ற வகையில் முறைப்படியான தீர்மானத்தை இயற்றி இருக்கும் அதிகாரங்களை முறைப்படியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளோம்.
அவ்வாறிருக்கையில் மாகாணசபைக்கு காணி அதிகாரமில்லை பொய் கூறுகின்றார்கள் என எம்முடன் இருப்பவர்களே கூறுவதானது எமது சமூகம் சார்ந்த மிகவும் துன்பமானதொரு நிலையாகும்.
அதேநேரம் தற்போது ஒரு சில வார்த்தைகளைப் பயன்படுத்த நாம் தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அது தவறானதொன்றாகும்.
ஆசியாவில் புகழ்பெற்ற யாழ்.நூலகம் எரிக்கப்பட்ட போது சென்சோனிக் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டது. அதன் முன்னிலையில் நூலக எரிப்பானது ஒரு கலாசார இனவழிப்பு எனப் பகிரங்கமாகவே குறிப்பிட்டிருந்தோம்.
ஆகவே வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு நானோ அல்லது என் சார்ந்த வட மாகாணசபையோ தயங்கவில்லை. ஆனால் பொருத்தமான நேரங்களில் பயன்படுத்தப்படவேண்டும் என்றே கருதுகின்றோம்.
மேலும் யார் எல்லாம் எமக்காகவும் எமது மண்ணுக்காகவும் அர்ப்பணிப்புச் செய்து பணியாற்றினார்களோ அவர்கள் அனைவரையும் கௌரவிக்கும் கடமை எமது மாகாண சபைக்குள்ளது. அக்கடமையை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXht7.html
இராணுவத்தின் தலைமைத்துவப் பயிற்சியில் மாணவியுடன் சிப்பாய் தவறாக நடக்க முயற்சி?
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 03:31.59 PM GMT ]
இச்சம்பவம் கடந்த செப்டம்பரில் நடைபெற்றிருந்த போதும் இதுவரை காலமும் இராணுவத்தினரால் மூடி மறைக்கப்பட்டிருந்ததாக சிங்கள ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
கடந்த செப்டெம்பர் மாதம் கண்டி கண்ணொருவை இராணுவ முகாமில் பயிற்சியில் கலந்து கொண்ட பல்கலைக்கழக மாணவியொருவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த மாணவி தூங்கிக் கொண்டிருந்த நிலையில் ஜன்னல் ஊடாக செலுத்தப்பட்ட கையொன்று அவரை தப்பான முறையில் ஸ்பரிசிக்க முயன்றுள்ளது.
மாணவி திடுக்கிட்டு எழுந்து கூக்குரலிட்டபோது குறித்த மர்ம நபர் தப்பியோடியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முகாமிலுள்ள இராணுவப் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் சந்தேக நபர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த மாணவி தூங்கிக் கொண்டிருந்த ஜன்னல் அருகே சேற்றுக் கால் தடங்கள் இருப்பதை கவனித்த இராணுவப் பொலிசார் அதனை வைத்து விசாரணைகளை மேற்கொண்டபோது கோப்ரல்தர படைச்சிப்பாய் ஒருவர் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
எனினும் இந்தச்சம்பவம் இதுவரை காலமும் இராணுவம் மற்றும் உயர்கல்வி அமைச்சினால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. தற்போது சிங்கள ஊடகங்களில் இந்தச் செய்தி குறித்த தகவல்கள் பரபரப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த செய்தி தொடர்பாக கொழும்பு டுடே செய்திச் சேவை இராணுவ ஊடக மையத்தின் பணிப்பாளர் ஜயநாத் ஜயசேனவை தொடர்பு கொண்ட போது இது ஒரு சாதாரண விடயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த படைச்சிப்பாய் தண்டனையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXht6.html
Geen opmerkingen:
Een reactie posten