[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 02:30.51 PM GMT ]
அரசாங்கத்தின் திட்டமிடப்படாத அபிவிருத்தித் திட்டங்களினால்தான் மண் சரிவு அபாயங்கள் ஏற்பட்டுள்ளன.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைப்பதற்கு கடல் ஆழமாக தோண்டப்பட்டமையும், மத்தல சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுமே மீரியபெத்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டமைக்கு காரணம் என சில புவியியலாளர்கள் கூறுவதாக சண்.குகவரதன் கூட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் இந்த முறையற்ற அபிவிருத்தித் திட்டங்களினால் உறவினர்களின் உயிர்களையும் இருப்பிடங்களையும் இழந்து நிற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்ய வேண்டும்.
75 சிறுவர், சிறுமியர்கள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். அவர்களை உரிய முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுப்பதுடன் இது தொடர்பான வேலைத் திட்டங்களை பாராளுமன்றத்திலும், ஊவா மாகாண சபையிலும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.
பொது மக்களும், பொது அமைப்புகளும் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் தங்களால் இயன்றளவு நிவாரண உதவிகளை செய்கின்றன. இதனால் அரசாங்கம் தங்களுக்குரிய நிவாரண பணிகளை தட்டிக்கழிக்க முடியாது.
கொஸ்லாந்த, மீரியபெத்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்படும் என ஏற்கனவே மக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் மக்கள் அதனை அலட்சியப்படுத்தியதாகவும் அரசாங்கம் கூற முடியாது.
ஏனெனில் மாற்று இடங்களை கையளிக்காமல் வேறு இடங்களுக்குச் செல்லுமாறு எவ்வாறு கூற முடியும் என கேள்வி எழுப்பிய குகவரதன், மக்களுக்கான, பொறுப்பில் இருந்து அரசாங்கம் விலகிச் செல்வதாகவும் குற்றம் சுமத்தினார்.
மேலும், திருகோணமலை சம்பூர் பிரதேசத்திலும் மக்களை பாதிக்கும் வகையில் அணல் மின் நிலையம் நிறுவப்படவுள்ளது.
மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் புத்தளம் நுரைச் சோலையில் அணல் மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களுக்கு ஏற்பட்ட மற்றும் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் பாதிப்புகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.
அதேபோன்று காலி முகத்திடலுக்கு அருகில் 233 ஹெக்ரேயர் பரப்பளவு கடற்பரப்பை முடி துறைமுக நகரம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் சீனாவுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
அதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் சூழவுள்ள பிரதேசங்களில் ஏற்படப்போகும் பாதிப்புகள் தொடர்பாக அரசாங்கம் ஆய்வு செய்ததா? மக்களைப் பற்றி அக்கறைப்படாத அபிவிருத்தித் திட்டங்கள் யாருக்காக எனவும் சண்.குகவரதன் கேள்வி எழுப்பினார்.
மக்கள் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத முறையில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
வெளிநாடுகளின் நிதி கிடைக்கின்றது என்பதற்காக சாதாரண குடிமக்களை பாதிக்கும் அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் ஏற்கக்கூடாது. அது அழிவுக்கே வழிவகுக்கும்.
இது தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXht3.html
சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல் தொடர்பில் இந்தியாவுடன் பேச்சு இல்லை!- அரசாங்கம்
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 02:48.25 PM GMT ]
அமைச்சர் அநுர யாப்பா பிரியதர்சன இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக டீசல் மற்றும் அணுஆற்றலில் இயங்கக்கூடியதும் போல்ஸ்டிக் ஏவுகனைகளை ஏவக்கூடியதுமான சீனாவின் நீர்மூழ்கி கப்பல்; கடந்த செப்டம்பர் 15ஆம் திகதியன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்தது. மற்றும் ஒன்று கொழும்புக்கு வருவதற்காக பாக்குநீரிணையில் காத்திருந்தது.
இந்தநிலையில் தற்போது சீனாவின் மற்றும் ஒரு நீர்மூழ்கிக்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது.
இதேவேளை இது குறித்து இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து தகவல்தந்த அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பாääசீனாவின் நீர்மூழ்கிக்கப்பல் போர் நடவடிக்கையின் நிமித்தம் இலங்கைக்கு வரவில்லை.
எனவே அது தொடர்பில் இந்தியாவுடன் பேச்சு நடத்தப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXht4.html
கொஸ்லாந்தையில் மீண்டும் மண்சரிவு அபாயம்!
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 02:59.19 PM GMT ]
கொஸ்லாந்தையில் பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில் திடீரென்று நீரோட்டம் ஒன்று மேலெழும்பியுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் மீண்டும் ஒரு திடீர் மண்சரிவுக்கான அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மீட்புப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு பாதுகாப்புப் படையினர் அங்கிருந்து விரைவாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்புப் பணிகளின் 7வது நாளான இன்று ஒரு சடலமும் மீட்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXht5.html
சர்வாதிகார ராஜபக்சேவே உன் பாறாங்கல் திமிரை சர்வதேசம் உடைத்தெறியும்: மமக ஆர்ப்பாட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 02:26.02 PM GMT ]
இதனிடையே தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இன்று மதியம் 3 மணியளவில் நுங்கம்பாக்கத்தில் அமைந்திருக்கும் இலங்கை துணைத்தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு பாமக சட்டமன்றக் குழு தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், இளந்தமிழகம் இயக்கத்தின் சார்பில் பரிமளா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXht2.html
Geen opmerkingen:
Een reactie posten