யாழ்.சுன்னாகம் -சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்தில் தங்கிருக்கும் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்களை கொரிய நாட்டின் உயர்ஸ்தானிகர் ஷாங்வோன் ஷாம் இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டுள்ள நிலையில், எங்களை எங்கள் சொந்த மண்ணில் குடியேற்றுங்கள் என மக்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இன்றைய தினம் 3 மணியளவில் மேற்படி பகுதிக்கு அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் கொரிய உயர்ஸ்தானிகர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது மேற்படி முகாமின் சில பகுதிகளுக்கு மட்மே செல்வதற்கு அனுமதித்த அரசாங்க அதிகாரிகள், மற்றைய பகுதிகளுக்குச் செல்லவும், மக்களை சந்தித்து கலநதுரையாடவும் அனுமதி மறுத்துள்ளனர்.
எனினும் சில பகுதிகளுக்கு சென்று அவர் பார்வையிட்டிருந்த போது மக்கள் தாம் 90ம் ஆண்டு தொடக்கம் சொந்த மண்ணை பார்த்துக் கொண்டு அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
தினசரி ஒரு வெளிநாட்டவரும், அரசியல் தலைவர்களும் வந்து போகின்றார்கள். ஆனால் எமக்கு விடிவு கிடைக்கவில்லை. எங்களை எங்கள் சொந்த மண்ணில் வாழ விடுங்கள். என உருக்கமான வேண்கோளை விடுத்திருக்கின்றனர்.
இதேவேளை யாழ்.குடாநாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக முகாமிற்குள் வெள்ளம் தேங்கி நிற்கும் நிலையில், உயர்ஸ்தானிகர் மக்களுடைய அவல நிலையினை நேரில் ஒரு அளவுக்கு பார்த்திருந்தார்.
எனினும் முழுமையாக பார்க்க விடாமல் அரசாங்க அதிகாரிகள் தடுத்ததுடன், மேற்படி விஜயம் தொடர்பாக முன்னதாகவே அறிந்து பெருமளவு படையினரும், புலனாய்வாளர்களும் அந்தப்பகுதியில் கூடியிருந்தமையினை அவதானிக்க முடிந்தது.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhuz.html
Geen opmerkingen:
Een reactie posten