[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 05:39.41 AM GMT ]
சின்னத்திரை நடிகர் மற்றும் வளர்ந்து வரும் பாடகருமான பிரசாத் தெனெத் என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவரது அம்மா ஒரு சிங்களப் பெண் என்பதுடன், அப்பா தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசாத்தின் தாயார் கிறிசாந்தி மீரியபெத்த தோட்ட குடும்ப சுகாதார தாதியாக கடமையாற்றியுள்ளார்.
அதன் காரணமாக அங்குள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் தான் இவரது குடும்பம் குடியிருந்துள்ளது.
பிரசாத் மற்றும் அவரது பெற்றோர் ஆகியோருடன் திருமணமான மூத்த சகோதரன், மனைவி, ஒரு குழந்தை ஆகியோரும் ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.
பிரசாத் சின்னத்திரை நடிப்பு மற்றும் பாடகராக வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த காரணத்தினால் கொழும்பிலேயே வசித்துள்ளார்.
எனினும் மண்சரிவுக்கு முந்திய தினம் தன் குடும்பத்தினரைப் பார்த்து வர மீரியபெத்தைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் மண்சரிவில் பிரசாத்தின் தகப்பனார் தவிர அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
பிரசாத்தின் தகப்பனார் யோகராஜா அன்று அதிகாலை எழுந்து வேலைக்குச் சென்றுவிட்டதால் அவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXit4.html
ஆஸி.யிலிருந்து 22 ஆயிரம் கறவை மாடுகள்! வட-கிழக்கிலும் பகிர்ந்தளிப்பு
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 04:01.36 AM GMT ]
இதற்காக சுமார் 1152 கோடி ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் வெலாட் நிறுவனம் மூலம் இந்தப் பசுக்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தருவிக்கப்படும் கறவை மாடுகளில் சுமார் ஐயாயிரம் மாடுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளன.
இலங்கையின் பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதை குறிக்கோளாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது இலங்கையின் பால் தேவையில் 42 வீதம் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றது.
எனினும் இந்தக் கொடுக்கல் வாங்கலின் பின்னால் பாரிய பொருளாதார மோசடி இருப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அவுஸ்திரேலிய கறவை மாடுகளுக்கு உகந்த பசுமைப் புல் வெளிகள் இலங்கையில் மிகவும் குறைவாகவே இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய மலைநாட்டின் பிரதேசங்களில் கூட போதுமான பசுமைப் புற்தரைகள் இல்லாத நிலையில் இந்தக் கொடுக்கல் வாங்கல் தனிப்பட்ட ஒருவரின் பொருளாதார நன்மை கருதி இது மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXit3.html
முஸ்லிம் காங்கிரஸ் பதவி அரசியலைக் கைவிட முடிவு! அமைச்சர் ஹக்கீம்
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 03:22.51 AM GMT ]
நேற்று அம்பாறை மாவட்டம், பொத்துவில், பசறிச்சேனையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவிகள் உள்ளிட்ட பதவி அரசியல் மூலம் முஸ்லிம்களின் அரசியல் இருப்பு, உரிமைகள், எதிர்பார்ப்புகள் என்பவற்றை நிறைவேற்றுவதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
எனவே எதிர்காலத்தில் பதவி அரசியல் நிலைப்பாட்டிலிருந்து வெளியே வர முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. பதவிகளை எதிர்பார்த்து அரசியல் முடிவுகளை எடுக்கும் நிலையை கைவிட கட்சி முடிவெடுத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தேசிய தேர்தலில் யாரும் எதிர்பார்த்திராத முக்கியமான நகர்வு ஒன்றை கட்சி மேற்கொள்ளவுள்ளது என்றும் அமைச்சர் ரவூப் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் சார்பில் ஒருவரை ஜனாதிபதித்தேர்தலில் களமிறக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் வாக்குகள் எதிரணிக்குச் சென்று விடுவதைத் தடுக்கும் நோக்கில், அரசின் ஆலோசனை மற்றும் அனுசரணையில் இந்த நகர்வு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXit2.html
பாதிப்புக்குள்ளான மக்களை நிரந்தர குடியேற்றம் செய்ய வேண்டும்: கூட்டமைப்பு- நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பதுளை மக்களுக்கு மனித நேய உதவிகள்
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 03:22.49 AM GMT ]
அத்துடன் பாதிப்புகளை எதிர்நோக்கவுள்ள பகுதிகளில் உள்ள மக்களை நிரந்தரமாக குடியேற்றம் செய்யப்படுவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கையினையும் எடுக்க வேண்டும் என த.தே.கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பதுளை மாவட்டத்தில் அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட கொஸ்லாந்த, மீரியபெத்த பகுதிகளுக்கு விஜயம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அப்பகுதிகளை பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கும் விஜயம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து பதுளை மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து மக்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராந்துள்ளதுடன் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள்,பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையிலான வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் இதன்போது இணைந்திருந்ததுடன் மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் இராதாக்கிருஸ்ணன், மேல்மாகாண மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் இதன்போது இணைந்திருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,
பதுளை மாவட்டத்தில் அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட கொஸ்லாந்த, மீரியபெத்த பகுதிகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தோம்.
அத்துடன் குறித்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கும் விஜயம் செய்தோம்.
அங்கு சுமார் 2000பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒரு முகாமுக்குள் ஆண்களும், பெண்களும் ஒன்றாக அடைக்கப்பட்ட நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக பெண்கள் பெரும் கஸ்ட நிலைக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்தது. அத்துடன் குடிநீர், மின்சாரம் இல்லாத நிலையிலேயும் மிகவும் கஸ்டமான நிலையில் அந்த மக்கள் உள்ளதை அவதானித்தோம்.
இது தொடர்பில் பதுளை மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்துக்கும் கொண்டுவந்தோம்.
அப்பகுதிகளில் எதிர்காலத்தில் பல இடங்களில் மண் சரிவு ஏற்படக்கூடிய அபாய நிலையுள்ளது.
இதன் காரணமாக 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படக்கூடிய நிலை அங்கு உள்ளது.
இந்த மக்களை வேறு பகுதிகளில் குடியேற்றம் செய்வதற்குரிய நடவடிக்கையினை அரசாங்கம் உடனடியாக செய்யவேண்டும்.
அவர்களை குடியேற்றம் செய்வதற்கு உரிய இடங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்கள் குடியேற்றம் செய்யப்படவேண்டும்.
இவர்களில் பலர் கூலித்தொழில் செய்பவர்களாகவும், தோட்டங்களில் வேலைசெய்பவர்களாகவும் உள்ளனர்.
இவர்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்காத வகையிலும் அல்லது அவர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் குடியமரச் செய்யப்பட வேண்டும்.
அத்துடன் அவர்கள் நிரந்தர வீடுகள் அமைக்கப்பட்டு குடியேற்றம் செய்யப்படவேண்டும் என்பதை மாவட்ட அரசாங்க அதிபரிடம் வலியுறுத்தினோம்.
இந்த பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 100 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் மக்கள் இன்று இந்த மக்களுக்கு அதிகளவில் உதவிசெய்து வருகின்றனர்.
எதிர்காலத்தில் இந்த மக்களுக்கு உதவுவதற்கு பெருமளவான பணங்களை அனுப்புவதற்கும் தயாராகவுள்ளனர் என்பதை அரசாங்க அதிபரிடம் தெரிவித்தோம்.
இவ்வாறான உதவிகளை ஒருங்கிணைத்து அவற்றினை பாதிக்கப்பட்ட மக்கள் சிறந்த முறையில் பெற்றுக்கொள்ளும் வகையில் மலையக பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து சிறந்த திட்டமிடலை மேற்கொண்டு இந்த செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என நான் அவரிடம் தெரிவித்தேன்.
அப்பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் பகிரங்கப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவை சரியான முறையில் சென்றடைய வேண்டும்.
அவை தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் சென்ற பகுதிகளில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் போது யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சரவணபவன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், சிறீதரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், மலைய மக்கள் முன்னணியின் மாகாணசபை உறுப்பினர்கள், சிறிதுங்க விஜயசிங்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வாழைச்சேனை வர்த்தகர்களால் பதுளை மக்களுக்கு மனித நேய உதவிகள்
வாழைச்சேனை கோறளைப்பற்று தமிழ் வர்த்தக சங்கமும், தமிழ் வர்த்தகர்களும் இணைந்து மண்சரிவினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு வழங்குவதற்காக ஒரு இலட்சம் பெறுமதியான சாரம், துவாய், போர்வைகள், பெண்களுகான சோட்டிகள் குழந்தைகளுக்கான பிளாஸ்ரிக் பால் போத்தல்கள் போன்ற பொருட்களை வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ரீ.தினேஸிடம் ஒப்படைத்தனர்.
இதன்போது வாழைச்சேனை கோறளைப்பற்று தமிழ் வர்த்தக சங்கத்தினர் மற்றும் தமிழ் வர்த்தகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
பதுளை மக்களுக்கு வாகரை மக்களால் அத்தியாவசிய பொருட்கள் வழங்கிவைப்பு
பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண் சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் வாகரை பிரதேச சபையினால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் உள்ளுராட்சி ஆணையாளர் கா.சித்திரவேலிடம் கையளிக்கப்பட்டது.
வாகரை பிரதேச சபை செயலாளர் சி.இந்திரகுமார் தலைமையிலான உத்தியோகத்தர்களினால் வாகரை பிரதேச மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் எழுபது ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை உள்ளூராட்சி ஆணையாளர் கா.சித்திரவேலிடம் பிரதேச சபை செயலாளர் சி.இந்திரகுமாரால் கையளிக்கப்பட்டது.
பிரதேச சபை உத்தியோகத்தர்களினாலும், வாகரை பிரதேச மக்களிடமிருந்தும் சேகரிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பால்மா, மெழுகுவர்த்தி, நூடில்ஸ் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கான பொருட்களும் சேகரிக்கப்பட்டு, பொதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
தங்களால் முடிந்த உதவிகளைச் செய்த வாகரை பிரதேச மக்களுக்கும், பிரதேச சபை உத்தியோகத்தர்களுக்கும் வாகரை பிரதேச சபை செயலாளர் சி.இந்திரகுமார் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXit1.html
Geen opmerkingen:
Een reactie posten