தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 november 2014

மீரியபெத்த மண்சரிவு! சத்திய வாக்குமூலம்- மண்சரிவுக்கான காரணம் கண்டுபிடிப்பு!



மலையகத்தின் இன்றைய அழிவு மகிந்த அரசுக்குத் தெரியும்!- திடுக்கிடும் ஆதாரத்துடன் டி.எம்.சுவாமிநாதன் பா.உ
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 11:27.26 PM GMT ]
இன்று மலையகத்தில் நடந்தது என்ன என்பது பற்றி எமக்குத் தெரியும் என நடந்தவற்றை ஆதாரத்துடன் விபரிக்கின்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன்.
இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ முன்னெச்சரிக்கை என்பது வளர்ச்சியடைந்தது போதாது.
அதுமட்டுமல்லாது, நாம் தேர்தலை எதிர்கொள்ளும் காலங்களில் எல்லாம் எம்மீது விடுதலைப் புலிச் சாயங்கள் பூசுவது வழமை என்றும் லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXir7.html
மீரியபெத்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை கொண்டு வர வேண்டாம்!- அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 01:51.59 AM GMT ]
மீரியபெத்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை கொண்டு வர வேண்டாம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடவோ உதவிகளை வழங்கவோ வேண்டாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட வரும் மக்களை கட்டுப்படுத்த மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மக்கள் தொடர்ச்சியாக அனர்த்தம் இடம்பெற்ற இடங்களை பார்வையிட செல்வதனால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
பிரதேசத்தில் இன்னமும் மண் சரிவு அபாயம் நீடித்து வருகின்றது.
மீண்டும் இவ்வாறான அனர்த்தம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு போதியளவு உதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கிடைக்கப்பெறும் பொருட்களையும் முகாம்களில் வைத்துக் கொள்ள வேண்டியிருப்பதனால் அவற்றை வைத்துக் கொள்வதில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, ராகலை தோட்டத்திலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் எடுத்துச் சென்ற பெருந்தோட்டத் தொழிலாளர்கள். பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட அனுமதிக்கவில்லை.
சொகுசு வாகனங்களில் வருவோரை பார்வையிட அனுமதிக்கும் அரசாங்கம் நீண்ட தூரம் பொருட்களையும் சுமந்து நடந்து வந்த தம்மை, பாதிக்கப்பட்ட எமது மக்களை பார்வையிட அனுமதிக்கவில்லை என ராகலை தோட்ட மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXity.html
மீரியபெத்த மண்சரிவு! சத்திய வாக்குமூலம்- மண்சரிவுக்கான காரணம் கண்டுபிடிப்பு
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 02:52.20 AM GMT ]
கொஸ்லாந்த, மீரியபெத்த மண்சரில் புதையுண்ட மக்களை மீட்க இராணுவத்தினர் கடந்த 6 நாட்களாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மண்சரிவில் 400 பேர் வரை காணாமல்போனதாக கூறப்பட்டாலும், இதுவரையில் 6 சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிடுகையில்,
2005ம் ஆண்டிலிருந்து மலை வெடித்து இருந்தது. வேறு இடத்திற்கு எழும்புமாறு கூறியிருந்தார்கள். ஆனால் வீடு கொடுக்காமல் இந்த மக்கள் எங்கே போவது.
மக்கள் புதையுண்ட இடத்தை விட்டு இராணுவத்தினர் வேறு இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
5 அடி ஆழத்தில் தான் புதையுண்டு இருப்பார்கள் என அவர் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
மண்சரிவு ஏற்பட பிரதான காரணம் ஆய்வு மூலம் கண்டுபிடிப்பு
கொஸ்லாந்த மீரியபெத்தயில் மண்சரிவு ஏற்பட பிரதான காரணம் அங்கு வசித்த மக்கள் அப்பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் மரக்கறி உற்பத்தி செய்தமையே என ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.
இற்றைக்கு எட்டு வருடங்களுக்கு முன்னர் இப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டிய ஓரிடம் என எல்லையிடப்பட்டு தூண்களும் நடப்பட்டு இலக்கமிடப்பட்டதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட பேராதனை பல்கலைக்கழக புவியியல் விஞ்ஞானப் பேராசிரியர் கபில தஹநாயக்கா, மேல் நீர்பரப்பு பாதுகாப்பு திட்ட முன்னாள் பணிப்பாளரும் சுற்றாடல் ஆய்வாளருமான டி. ரீ. முனவீர ஆகியோர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இப்பகுதியில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட கூடாதென எட்டு வருடங்களுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகத்துக்கும் அறிவிக்கப் பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இவ்விடயமாக அதிகாரிகளும், தோட்ட மக்களும் கவனம் செலுத்தவில்லை இப்பகுதியில் மரக்கறி உற்பத்தி வியாபித்து உள்ளதாகவும் முனவீர தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXitz.html

Geen opmerkingen:

Een reactie posten