[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 05:47.08 AM GMT ]
முச்சக்கர வண்டி சாரதி ஒருவரிடமிருந்து கந்தானை மோட்டார் போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி லஞ்சம் பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை குறித்த பொலிஸ் அதிகாரியை லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த பொலிஸ் அதிகாரி நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
குற்றச் செயல் ஒன்று தொடர்பில் வழக்குத் தொடராமல் இருப்பதற்காக இவ்வாறு லஞ்சமாக 7000 ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
லஞ்ச ஊழல் தவிர்ப்பு விசாரணைப் பிரிவினரும் பொலிஸாரும் இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சட்டவிரோதமாக தங்கம் கடத்திய இரு இந்தியர்கள் கைது
சட்டவிரோதமாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கத்தை கடத்திச் செல்ல முயற்சித்த இரண்டு இந்திய பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் யு.எல்.172 என்ற விமானத்தில் கட்டுநாயக்கவில் இருந்து பெங்களூர் செல்லும் நோக்கில் இன்று அதிகாலை 1 மணியளவில் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் குத வழியில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்திச் செல்ல முயற்சித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
400 கிராம் தங்கத்தை இவர்கள் கடத்திச் செல்ல முயற்சித்துள்ளதுடன் அதன் பெறுமதி 20 லட்சம் ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
தங்கத்தை கைப்பற்றிய சுங்க அதிகாரிகள் அதனை அரசுடமையாக்கியுள்ளதுடன் சந்தேக நபர்களுக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து விடுலை செய்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXit5.html
காணாமல் போன கணவரை மீட்டுத் தருமாறு கோரிய சிங்களப் பெண்ணுக்கு துப்பாக்கிதாரிகள் அச்சுறுத்தல்
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 05:47.35 AM GMT ]
அனுராதபுரம் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தாயான மயூரி இனோகா குமாரி ஜயசேன என்பவரே இவ்வாறு இனந்தெரியாத நபர்களினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை இரவு பிள்ளைகளுக்கு பால் வாங்குவதற்காக கடைக்குச் சென்றிருந்த போது இனந்தெரியாத நபர்கள் என்னை துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி கடத்திச் சென்றனர் என மயூரி தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டிக்குள் நுழைந்த வாட்டசாட்டமான நபர் ஒருவர் என் கைகளையும் கண்களையும் கட்டி கடுமையாக திட்டினார். என்னை மற்றுமொரு வாகனத்தில் ஏற்றி ஒன்றரை மணித்தியாலம் பயணித்தனர்.
கணவர் பற்றி பேசுவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என இனந்தெரியாத நபர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
“உனக்கு வாய் கூட, உயிருடன் வாழ வேண்டுமா இல்லையா என்பதனை தீர்மானித்துக் கொள் மேடைகளில் ஏறி பேசுவதன் மூலம் கணவரை மீட்க முடியாது.” என அவர்கள் எச்சரித்தனர்.
பின்னர் வாகனத்தை விட்டு இறக்கிவிட்டு சென்று விட்டனர். அச்சுறுத்திய நபர்கள் தங்களை பாதுகாப்பு தரப்பினர் என அடையாளப்படுத்திக் ண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் சிவில் உடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் என்னை பாலியல் தொழிலாளியா எனக் கேட்டு விசாரணை நடத்தினார். என்னை அகௌகரியத்தில் ஆழ்த்தம் வகையிலான கேள்விகளை கேட்டு விசாரணை செய்தார் என மயூரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மதுஸ்க ஹரிஸ் சில்வா என்ற தமது கணவரை கடந்த செப்டம்பர் மாதம் முதல் காணவில்லை எனவும் அவரை மீட்டுத் தருமாறும் கோரியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXit6.html
Geen opmerkingen:
Een reactie posten