[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 02:23.38 PM GMT ]
முக்கியமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளில் மழை காணப்படும்.
சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளைகளிலும் மழை காணப்படலாம்.
இந்த தாழமுக்க பிரதேசமானது அடுத்த 24 மணித்தியாலத்தில் மேலும் வலுவடையலாம் என எதிர்பாரக்கப்படுகிறது.
அவ்வாறு அது வலுவடைந்து சூறாவளியாக உருவாகும் சந்தர்ப்பத்தில் இதற்கு இலங்கையினால் பிரேரிக்கப்பட்ட ‘பிரியா’ எனும் பெயர் சூட்டப்படும்.
கடல் பிராந்தியங்களுக்காக வானிலை முன்னறிவிப்பு
இலங்கையின் கிழக்கு கடல் பகுதிகளில் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.
ஏனைய கடல் பிராந்தியங்களில்கூட மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படலாம்.
வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள தாழமுக்க பிரதேசம் காரணமாக யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடான காலி வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் திடீரென அதிகரிக்கலாம்.
இதனால் இக்குறிப்பிடப்பட்ட கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
க.சூரியகுமாரன்,
வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம்.
வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXix1.html
நீர்மூழ்கிக் கப்பல் குறித்து இந்தியா கலவரமடைய தேவையில்லை: சீனா
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 02:14.58 PM GMT ]
சீனாவின் நீர்மூழ்கி கப்பல் மற்றும் போர்க்கப்பல்கள் வெளிநாடுகளின் துறைமுகங்களுக்கு நல்லெண்ண பயணங்களை மேற்கொள்வது வழமையான ஒன்று என சீன வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சீனாவின் நீர்மூழ்கி கப்பல் மற்றும் போர்க்கப்பல் இலங்கை வந்துள்ளமை குறித்து இந்திய ஊடகங்கள் விசேட கவனத்தை செலுத்தியுள்ளன.
சீனாவின் நீர்மூழ்கி மற்றும் போர்க்கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வந்துள்ளமை குறித்து இந்திய அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளதாக இந்திய உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அதேவேளை சீன ஜனாதிபதி இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட போது சீனாவின் நீர்மூழ்கி கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் வந்திருந்தமை குறித்தும் இந்திய ஊடகங்கள் ஞாபகப்படுத்தியுள்ளன.
தொடர்புடைய செய்தி- இலங்கை துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி கப்பலை நிறுத்த அனுமதி: இந்தியா கடும் அதிர்ச்சி
http://www.tamilwin.com/show-RUmszBTXKXix0.html
Geen opmerkingen:
Een reactie posten