[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 03:17.11 PM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் இனிவரும் தேசிய தேர்தலில் எனது வியூகம் எனும் தலைப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அமைச்சர் பஷீர் சேகுதாவூதின் பெயருடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
'தோற்றால் நான் மட்டும் தோற்பேன், வென்றால் நானும் நம் மக்களும் வெல்வோம், நான் வெல்வதற்கோ தோற்பதற்கோ முன்பு என்னோடு வேலை செய்யும் என் ஆதரவாளர்கள் வென்று விடுவார்கள்.
அவர்களுக்கு தோல்வியே இல்லை, எவ்வாறு என்பதை காலம் வரும் போது கூறுகின்றேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் - முஸ்லிம் பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
இலங்கை கபடி சம்மேளனத்திற்கு சிறுதொகை நிதி வழங்கிய மட்டுநகர் மைந்தன்
இந்தியாவில் இடம்பெற்ற கபடி பிறிமியர் லீக் சுற்றுப் போட்டியில் கலந்து கொண்ட கணேசராஜா சினோதரன், தனக்கு கிடைத்த சிறு தொகை ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையினை இலங்கை கபடி சம்மேளனத்திற்கு வழங்கியுள்ளார்.
அண்மையில் இலங்கை கபடி சம்மேளனத்தின் தலைவரும், சப்பிரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை வழங்கினார்.
கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு புளியந்தீவு கல்லடித்தெருவினை சேர்ந்த கணேசராசா சினோதரன், மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் கல்வியினை பூர்த்தி செய்து 2010ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை கடற்படையின் கபடி அணியில் இணைந்து கொண்டார்.
இலங்கை கடற்படையின் ஊடாக உள்நாட்டில் இடம் பெற்ற கபடி போட்டிகளில் மட்டும் அல்லாது சர்வதேச ரீதியில் பல ஆசிய நாடுகளுக்கும் விஜயம் செய்து தனது தனி திறமையினை வெளிப்படுத்தி பல வெற்றிப் பதக்கங்களையும், வெற்றிக் கேடயங்களையும், வெற்றிச் சான்றுதல்களையும் தன் வசப்படுத்தியது மட்டுமல்லாமல் நமது நாட்டுக்கும் பெருமைகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இவ்வருடம் ஜூன் மாத காலப்பகுதியில் இந்தியாவில் இடம் பெற்ற கபடி பிறீமியர் லீக் போட்டிகளில் பெங்களுர் புள்ஸ் எனும் அணிக்கு பல சர்வதேச வீரர்களின் போட்டிகளின் மத்தியில் ஏலத்தின் மூலம் முதன் முறையாக தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு இலங்கை வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போட்டித்தொடர் முடிவடைந்து இலங்கை திரும்பிய சினோதரன் கடந்த மாத நடுப்பகுதியில் இலங்கை கபடி சம்மேளனத்தின் தலைவரும், சப்பிரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்ட சினோதரன், இலங்கை கபடி சம்மேளனத்தின் வளர்ச்சிக்காக ஒரு தொகை நிதியினை ஊக்குவிப்பாக வழங்கினார்.
இது தொடர்பாக சப்பிரகமுவ முதலமைச்சர் மஹிபால ஹேரத் பேசுகையில், இக்கால கட்டத்தில் சிறந்த விளையாட்டு வீரர்கள் பலதரப்பட்ட விளையாட்டுகளை வியாபாரமாக கையாளும் சந்தர்ப்பத்தில் தனக்கு கிடைத்த குறைந்தளவு ஊதியத் தொகையில் ஒரு தொகை பணத்தினை இலங்கை கபடி சம்மேளனத்தின் வளர்ச்சிக்காக அன்பளிப்புச் செய்த கபடி வீரன் கணேசராஜா சினோதரனின் இந்த செயற்பாடு இலங்கை கபடி விளையாட்டு வரலாற்றுச் சரித்திரத்தில் இதுவே முதன் முறை என்று வாழ்த்தி பாராட்டுகளை பெருமிதமாக தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXix4.html
வத்திக்கான் குழு இலங்கையில் பேச்சு
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 03:09.57 PM GMT ]
இவர்கள் மூவரும் கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் இலங்கையின் அதிகாரிகளை இன்று சந்தித்தனர்.
இந்தநிலையில் குறித்த மூவரும் பாப்பரசரின் விஜயத்துக்கு இலங்கையில் உகந்த சூழ்நிலை உள்ளது என்பதை வத்திக்கானுக்கு அறிவித்ததன் பின்னரே பாப்பரசரின் விஜயம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பாப்பரசர் ஜனவரி 13ம் திகதி முதல் 15ம் திகதி வரை இலங்கையில் விஜயத்தை மேற்கொள்கிறார்.
இதேவேளை வத்திக்கானின் மற்றும் ஒரு குழு இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXix3.html
இலங்கை - இந்திய இராணுவ பயிற்சி இன்று ஆரம்பம்
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 03:06.27 PM GMT ]
இந்தப்பயிற்சி இலங்கையின் ஊவா குடாஓயா மித்ர சக்தி கொமாண்டோ பள்ளியில் ஆரம்பமானதாக இந்திய செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
இதில் இந்தியாவின் இராணுவ விசேட படையினர் இலங்கையின் கொமாண்டோ மற்றும் விமானப்படையினருடன் பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
இந்தப்பயிற்சிகள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
இதேவேளை இந்தப்பயிற்சிகள் இரண்டு நாடுகளுக்கும் இடையில் அரசியல் பதற்றதை ஏற்படுத்தும் என்ற கருத்தை இரண்டு நாடுகளும் நிராகரித்துள்ளன.
இந்தப்பயிற்சியில் 40 இந்திய விசேட படையினரும் 200 இலங்கைப்படையினரும் பங்கேற்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXix2.html
இந்த இந்தியா தமிழ் மீனவரை காக்குமாம்,இலவு காத்த கிளிகள் தமிழர்!
Geen opmerkingen:
Een reactie posten