தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 6 november 2014

அம்பாறையில் தமிழர்களின் காணிகளை தொல்பொருள் என்ற பெயரில் அபகரிக்க முயற்சி!


இந்தியா- சீனாவுக்கு இடையில் பிரச்சினையை ஏற்படுத்த அவசியம் இல்லை: இலங்கை
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 03:22.31 AM GMT ]
நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு இலங்கை காரணமாக இருக்காது என்று இலங்கையின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா தெரிவித்துள்ளார்
இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையில் பிரச்சினையை உண்டாக்குவதற்கு இலங்கைக்கு அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் நீர்மூழ்கி கப்பல் இலங்கைக்கு வந்துள்ளமை தொடர்பிலான செய்திக்கு மத்தியிலேயே ஜெயந்த பெரேராவின் கருத்து வெளியாகியுள்ளது.
சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பில் இந்தியா தமது கரிசனையை காட்டுவதை கொண்டே அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
சீனாவின் கப்பல் விஜயமானது போர் ஒன்றை நோக்கமாக கொண்டது அல்ல. அது எரிபொருள் நிரப்பவும், மாலுமிகளின் ஓய்வுக்காகவுமே இலங்கைக்கு வந்துள்ளது என்று பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgs2.html


சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல் தொடர்பில் அச்சம் இல்லை! தமிழக மீனவர்களின் மரண தண்டனை பிரச்சினை தீர்க்கப்படும்!- இலங்கை
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 03:26.21 AM GMT ]
இலங்கைக்கு சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல் வந்து செல்கின்றமை அச்சுறுத்தல் நிலையை ஏற்படுத்தவில்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது.
சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல் ஆபிரிக்காவில் இருந்து திரும்பும் போதே இலங்கைக்கு வந்துள்ளது.
எனவே அது அச்சநிலைக்கான காரணத்தை உண்டாக்கவில்லை என்று அமைச்சர் சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்றுள்ள அவர்,  செய்தியாளர்களிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் உதவியுடன் பாரிய எரிபொருள் குதம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இலங்கையில் மரண தண்டனை பெற்று ஐந்து தமிழக மீனவர்களின் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல வருடகாலமாக மரணதண்டனை நிறைவேற்றப்படுவதில்லை.
எனவே மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஐந்து மீனவர்களின் பிரச்சினையை இரண்டு நாடுகளும் உரிய வகையில் தீர்த்துக்கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgs3.html


அம்பாறையில் தமிழர்களின் காணிகளை தொல்பொருள் என்ற பெயரில் அபகரிக்க முயற்சி!
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 03:46.16 AM GMT ]
அம்பாறை மாவட்டத்தில் புதிய வளத்தாப்பிட்டி தமிழ்க் கிராமத்தில் அகழ்வாராட்சி எனும் பெயரில் காணிகளை அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
குறித்த கிராமத்திற்கு நேற்று மாலை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிசார் மற்றும் கிராமசேவை அதிகாரி ஆகியோர் சென்றுள்ளனர்.
அங்குள்ள பழவெளி கிராமத்தின் சிவனாலயத்தைச் சுற்றியுள்ள கிணறு, வீடுகள் அனைத்தையும் சுற்றி எல்லைக் கற்களை நாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், பெருமளவான இராணுவத்தினரும் பொலிசாரும் அவ்விடத்தில் கூடியிருப்பதாகவும் தங்களுடைய காணிக்குள் எல்லைகள் இடப்படுவதாகவும் மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரனுக்கு மக்கள் அறிவித்ததை அடுத்து, அப்பிரதேசத்துக்கு மாகாண சபை உறுப்பினர் உடனடியாக விஜயம் செய்தார். அங்கு நின்றிருந்த அகழ்வாராட்சி உத்தியோகத்தர்களுடன் இது தொடர்பாக முரண்பட்டதுடன், இராணுவம் மற்றும் பொலிசாரிடமும் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இங்கு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சோ.புஸ்பராஜாவும் விஜயம் செய்திருந்தார்.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் மன்சூரிடம் தொடர்பு கொண்ட இராஜேஸ்வரன் இவ்வத்துமீறல் பற்றி கேட்டபோது,
நாம் அரச அதிபரிடம் கூறியுள்ளோம்.அது வர்த்தமானிப் பிரகடனம் செய்யப்பட்டுவிட்டது என்றார்.
தொல்பொருள் திணைக்களத்திலிருந்து வந்த பெண் உயர் அதிகாரியிடம் கேட்டபோது, இது விடயத்தை பேசித்தீர்த்துக் கொள்ளலாம். தற்போது எமது பணியை செய்யவிடுங்கள் என கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவிடயம் தொடர்பாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளிடம் மாகாண சபை உறுப்பினர் அறிவித்துள்ளதாகவும், ஏழை மக்களின் நிலங்களை சூறையாடுவதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten