[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 03:16.28 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தக்கருத்தை நேற்று வெளியிட்டார்.
ரயில்வே ஊழியர்களின் நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்தவரை ராஜபக்ச அரசாங்கமே தோற்கடிக்கப்பட வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தோற்கடிக்கப்படக்கூடாது. அது ஜனநாயகத்தை பாதுகாக்கும் கட்சியாக திகழ வேண்டும் என்று ரணில் குறிப்பிட்டார்.
வழமையாக கட்சி ஒன்று நாட்டில் இரண்டு தவணைகளுக்கு மேல் ஆட்சி செய்யக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgs1.html
சாவகச்சேரியில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு! கொழும்பு பெண் உட்பட 6 பேர் கைது
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 03:41.21 AM GMT ]
விருந்தினர் விடுதியை சுற்றிவளைத்து, விபசாரத்தில் ஈடுபட்ட 32 வயதுடைய பம்பலப்பிட்டியை சேர்ந்த பெண், பெண்ணை விபச்சாரத்திற்காக அழைத்து வந்தவர், விடுதி முகாமையாளர், விடுதி உதவியாளர் மற்றும் இரண்டு வாடிக்கையாளர்கள் ஆகியோரையே கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சாவகச்சேரி பகுதியிலுள்ள விடுதியொன்றில் விபச்சார நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரத்தின் கவனத்திற்கு நேற்று புதன்கிழமை கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து, விருந்தினர் விடுதியில் சோதனை நடத்துமாறு கொடிகாமம் பொலிஸாரிற்கு நீதவான் உத்தரவிட்டார்
அதற்கமைய விருந்தினர் விடுதியை சுற்றிவளைத்த கொடிகாமம் பொலிஸார் மேற்படி நபர்களை கைது செய்தனர்.
இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgs4.html
Geen opmerkingen:
Een reactie posten