தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 november 2014

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க முடியாது: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால் ஆதரவளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.
பொது வேட்பாளராக ரணில் நிறுத்தப்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினை எதிர்பார்க்க முடியாது என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என மாதுளுவாவே சோபித தேரரும் தெரிவித்துள்ளார்.
இரண்டு தரப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேரடியாகவே இந்த விடயத்தை அறிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி வேறு ஓர் வேட்பாளரை நிறுத்தினால் ஆதரவளிக்கத் தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.
யாரை பொதுவேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பொது வேட்பாளார் தாமே என ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
ரணிலுக்கு ஆதரளிக்கப்படும் என சஜித் பிரேமதாசவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXio1.html

Geen opmerkingen:

Een reactie posten