[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 03:52.39 AM GMT ]
மீரியபெத்த மண்சரிவு காரணமாக தாய் தந்தையரை இழந்த பிள்ளைகள் எக்காரணம் கொண்டும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டார்கள். ஏனெனில் கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது பெற்ற அனுபவத்தைக் கொண்டே இந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதுவரை கணக்கெடுப்பின் படி 75 பிள்ளைகள் தாயையும் தந்தையையும் இழந்து நிர்க்கதியாகி நின்கின்றனர். இவர்களது உறவினர்கள் என்று சொல்வோரும், நெருங்கிய உறவினர்கள் என்று சொல்வோரும் இந்தப் பிள்ளைகளை கேட்கின்றனர். எனினும் அவர்களிடம் இப்பிள்ளைகளை ஒப்படைக்கப்படமாட்டார்கள்.
75 பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு தங்குமிட வசதிகள் உள்ளிட்ட எதிர்காலம் அனைத்துக்கும் அரசாங்கமே பொறுப்பேற்கும். எவரது அனுசரணையையும் பெற்றுக் கொடுக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. எனினும் இந்தப் பிள்ளைகளுக்காக உதவி வழங்க விரும்புகிறவர்கள் வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
53 வீடுகளிலுள்ள சுமார் 330 பேர் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனினும் எடுக்கும் சரியான தரவுகளை கூற முடியவில்லை என செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjt1.html
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மீது தாக்குதல்- மாலக்க சில்வா மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 04:48.35 AM GMT ]
இந்த தாக்குதல் சம்பவம் இன்று அதிகாலை கொழும்பு - டுப்ளிகேன் வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது சிறு காயங்களுக்கு இலக்கான மாலக சில்வா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதல் நடத்தியவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு
தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார்.
பம்பலப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் இன்று காலை அவர் தாக்குதலுக்கு உள்ளானார்.
சம்பவத்தில் தனது மகனுக்கு ஏற்பட்ட காயத்தை சிறிய சம்பவமாக கருத முடியாது என அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சனி பெயர்ச்சி முதல் நாள் எமக்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறப்பட்டிருந்தது. அது நடந்து விட்டது, எனது மகனுக்கு பெரிய காயம் ஏற்பட்டுள்ளது.
அவரை நான் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல போகிறேன். எம்மீது பொறாமை கொண்டவர்களுக்கு இந்த சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
எம்மை நேசிப்பவர்களுக்கு இந்த சம்பவம் சோகமானது எனக் கூறியுள்ளார்.
அதேவேளை இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளிநாட்டவர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அந்த வெளிநாட்டவர் ஸ்கொட்லாந்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் சம்பவம் இடம்பெற இரவு நேரக் களியாட்ட விடுதியில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கெமராக்களின் ஒளிப்பதிவுகளும் பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjt2.html
வரவு- செலவுத்திட்ட வாக்களிப்பு: முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 05:11.46 AM GMT ]
நேற்றிரவு கட்சியின் தலைமையகமான தாருஸ் ஸலாமில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதியுயர்பீட கூட்டம் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது வரவு செலவுத்திட்ட வாக்களிப்பில் அரசுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இப்போதே தமது ஆதரவைப் பகிரங்கப்படுத்துவதில்லை என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடி, கருத்தறிந்தே தீர்மானம் மேற்கொள்வதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஆழமான கருத்துப் பரிமாற்றம் மற்றும் அடிமட்டப் போராளிகளின் கருத்துக்கள் என்பவற்றின் அடிப்படையில் ஆதரவளிப்புத் தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று நேற்றைய கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக நாளை அம்பாறை மாவட்டத்தில் கட்சி ஆதரவாளர்களின் கருத்தறியும் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjt3.html
Geen opmerkingen:
Een reactie posten