அனந்தி குறித்து ஜீ.ஏ.சந்திரசிறி விசாரணையை ஆரம்பித்தார்
|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தொடர்பில் வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு மேலதிக கால அவகாசம் தேவை என ஆனந்தி கோரியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்ற போது ஆனந்தி சசிதரன் வட மாகாண சபையின் அனுமதியை பெற்றுக்கொண்டாரா என சந்திரசிறி கேள்வி எழுப்பியுள்ளார்.
மாகாணசபையின் தவிசாளர் சீ.வீ.கே. சிவஞானத்திடம் ஆளுனர் இந்த விளக்கத்தை கோரியுள்ளார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக பாதுகாப்பு தரப்பு அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பயன்படுத்தி யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான சாட்சியங்களை திரட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித பதில்களையும் இதுவரையில் அளிக்கவில்லை. |
01 Nov 2014 http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1414829390&archive=&start_from=&ucat=1&
காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஆணைக்குழுவிற்கு போதியளவு சட்ட அதிகாரம் வழங்கப்பட வேண்டும்
|
காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் ஆணைக்குழுவிற்கு போதயிளவு சட்ட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமை கமிட்டி அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கமிட்டி அண்மையில் இலங்கை தொடர்பான கால மீளாய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில், காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு உரிய அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
விசாரகைளை உரிய முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான மனித, தொழில்நுட்ப மற்றும் நிதி வளங்கள் உரிய வகையில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
பலவந்தமான கட்டத்தல்கள் காணாமல் போனவர்கள் தொடர்பில் துரித கதியில் விசாரணை நடத்தி, குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது. சுயாதீன பொறிமுறைமை ஒன்றின் மூலம் விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது |
01 Nov 2014 http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1414832527&archive=&start_from=&ucat=1& |
|
Geen opmerkingen:
Een reactie posten