[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 11:39.55 PM GMT ]
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை வலுப்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சி உறுப்பினாகள் விலைக்கு வாங்கப்பட மாட்டார்கள்.
தமது கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாத அளவிற்கு ஐக்கிய தேசியக்கட்சி வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.
டி.எஸ். சேனாநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்ட வலுவான கட்சியை தற்போதைய தலைவர் நிர்க்கதியான நிலைக்கு தள்ளியுள்ளார்.
பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட நபர் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்புரிமை பெற்றுக்கொள்ளாத ஒருவராகும்.
இதனால் அதிருப்தியடைந்த பலர் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர்.
ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்க எந்தவொரு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரும் வாக்களிக்க மாட்டார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஒருவரை நியமிக்கவில்லை.
தற்போது அதே நிலைமை நீடிக்கின்றது என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfv3.html
தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்யாது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியை ஏற்க முடியாது!– மாவை சேனாதிராஜா
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 11:27.45 PM GMT ]
நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் இனத்துவ அடையாளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கு வாழ் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
போரினால் பாதிக்கப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர் முகாம்களில் வாழ்ந்து வரும் மக்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம செலுத்தத் தவறியுள்ளது.
முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களின் அபிவிருத்தியை உறுதி செய்யவும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாவை சேனாதிராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfv2.html
Geen opmerkingen:
Een reactie posten