அவர் மீது அன் நாட்டில் வழக்கு இருந்தாலும், அது செல்லுபடியாகாது. ஏன் எனில் அவருக்கு ராஜதந்திர பாதுகாப்பு இருக்கிறது. ஆனால் மகிந்த நடைபெறவுள்ள தேர்தலில் தோல்வியை தழுவிக்கொண்டால், இந்த பாதுகாப்பு அனைத்தும் தகர்ந்துபோய் விடும். புலம்பெயர் நாடுகளில் உள்ள பல தமிழர்கள் மீண்டும் மகிந்தர் மீது வழக்குகளை போட்டு அதனை நிலுவையில் வைத்திருப்பார்கள். எச்சந்தர்பத்திலும் மகிந்தர் மீண்டும் அன் நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை தோன்றும். அவரது நட்பு நாடுகளான சீனா, மலேசியா, மற்றும் மாலை தீவு போன்ற நாடுகளுக்கு மட்டுமே மகிந்தரால் செல்ல முடியும்.
இலங்கையில் மைத்திரி ஜனாதிபதியாக வந்தால், அவர் தற்போது உள்ள மகிந்தரின் கட்சி அரசை நிச்சயம் கலைத்துவிடுவார். இதனால் மேலும் ஒரு தேர்தலை நாடு சந்திக்கவேண்டி வரும். இதேவேளை தாம் வெற்றிபெற்றால் எஞ்சியுள்ள புலிகளையும் அழிப்போம் என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது, K.P , கருணா, பிள்ளையான் போன்ற முன் நாள் புலிகள் வயிற்றில் புளியைக் கரைக்கும் விடையமாகும். K.P நிச்சயம் கைதுசெய்யப்படுவார். இதேவேளை கருணா மீது வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. புலிகள் இயக்கத்தை காட்டிக்கொடுத்து, மகிந்த ராஜபக்ஷவை பெரும் தலைவர் என்று வாயால் போற்றிய மனிதர்கள் எல்லோரும் தற்போது தலையில் துண்டைப் போடவேண்டிய நிலையில் உள்ளார்கள். அடுத்து என்ன நடக்குமோ என்று தெரியாத நிலையில் இவர்கள் ஒவ்வொரு இரவையும் கழிக்கவேண்டிய நிலையில் உள்ளார்கள்.
இதேவேளை நாம் ஒரு விடையத்தை மறந்துவிடக்கூடாது. இலங்கைக்கு சென்று அன் நாடு நல்ல நிலைக்கு திரும்பிவிட்டது என்றும், மகிந்தரின் உதவியின்றி இலங்கையில் எதனையும் செய்யமுடியாது எனவே அவரோடு ஒத்துப்போவதே நல்லது என்றும் சிலர் கதாப்பிரசங்கம் நடத்தி வந்தார்கள். அவர்களும் சற்று சிந்திக்கவேண்டும். அரசியல் என்பது நிலந்தரம் அல்ல. ஆனால் ஒருவர் கொண்ட லட்சியம் மட்டும் தான் நிலந்தரம் ஆகும். எனவே தமிழ் மக்கள் மனதில் கொண்ட லட்சியம் ! மாவீரர்கள் மண்ணில் மடியும்போது கொண்ட லட்சியத்தை எவராலும் அவ்வளவு எழிதில் அழித்துவிட முடியாது !
http://www.athirvu.com/newsdetail/1505.html
Geen opmerkingen:
Een reactie posten