ஜனாதிபதியின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு கோடிக்கணக்கான பணம் விரயம்- ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க தீர்மானித்துள்ள அரசாங்கம்
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 05:27.00 AM GMT ]
இது தொடர்பாக கொழும்பு டுடே செய்திச் சேவையை மேற்கோள்காட்டி சிங்கள இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதியின் பிறந்தநாள் ஆகும்.
இதற்காக அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விளம்பரங்களை அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிட சுமார் 26 கோடி ரூபா செலவிடப்படவுள்ளது.
தமிழ், சிங்களம், ஆகிய மொழிகளில் இந்த விளம்பரங்கள் வெளியிடப்படவுள்ளது.
இதற்காக நாளாந்த பத்திரிகைகளில் விசேட இணைப்பிதழ்கள் வெளியிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அனைத்து திணைக்களங்கள் மற்றும் அதிகார சபைகள், கூட்டுத்தாபனங்கள் என்பவற்றின் சார்பில் குறித்த பிறந்த நாள் வாழ்த்து விளம்பரங்கள் வெளியிடப்படவுள்ளன.
எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலை முன்வைத்து இந்த விளம்பரங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதில் கடும் பொருளாதார நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசாங்க அச்சு ஊடக நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனம் மட்டுமே ஐந்து கோடி ரூபாய் செலவழிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிந்தவுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு: ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க தீர்மானித்துள்ள அரசாங்கம்
மகிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு வருடங்கள் மீதமிருக்கும் நிலையில், சட்டவிரோதமாக எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் அவசர ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை அறிவிக்க தயாராகி வந்த நிலையில், தற்போது இந்த தீர்மானத்தை மாற்றிக்கொண்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோத ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகி வருவதற்கு எதிராக ஜே.வி.பி தலைமையில், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மற்றும் பொது அமைப்புகள் இணைந்து நாடு முழுவதும் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளன.
இந்த பிரசாரக் கூட்டங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் பிரதிநிதிகளும், கட்சிகளும், குழுக்களும் கலந்து கொண்டு வருகின்றமை அரசாங்கத்திற்குள் பரப்பரப்பாக பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கவோ, அதில் போட்டியிடவோ எவ்விதமான சட்டரீதியான வாய்ப்புகளும் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட சட்டவல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளாது ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்தினால், அவரை தோற்கடிக்க செய்ய வேண்டிய அனைத்தையும் செய்ய போவதாக ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு எதிராக நாட்டில் இப்படியான சூழ்நிலை உருவாகியுள்ளதால், அரசாங்கம் அண்மையில் இரகசியமான கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மக்கள் மத்தியில் காணப்பட்ட பிரபல நிலை வெகுவாக குறைந்துள்ளதுடன் அவருக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ளமை இந்த கருத்து கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
இதனால், குழம்பிபோயுள்ள அரசாங்கம், ஜனாதிபதித் தேர்தலுக்கான தயார்ப்படுத்தலை அவசரமாக ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjt4.html
மகிந்தவுக்கு ஆதரவு என்ற தீர்மானத்தால் இடதுசாரி கட்சிகளில் பிளவு
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 05:31.43 AM GMT ]
இதனால், புதிய இடதுசாரி அமைப்பொன்று உருவாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பது என லங்கா சமசமாஜக் கட்சியின் மத்திய செயற்குழுவில் மேலதிக வாக்குகளினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனால், அந்த கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் இடையில் பிளவு ஏற்பட்டுள்ளது.
மகிந்தவை ஆதரிக்கும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த லங்கா சமசமாஜக் கட்சியின் 13 உறுப்பினர்கள் கடந்த 29 ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியதுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மாதுளுவாவே சோபித தேரரை ஆதரிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து ஜனாதிபதித் தேர்தலை நடத்தாது பொதுத் தேர்தலை நடத்தினால் மகிந்தவுக்கு ஆதரவு வழங்கப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதேவேளை மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்வரும் 9 ஆம் திகதி கூடி ஆராயவுள்ளது.
அதேவேளை மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்வரும் 9 ஆம் திகதி கூடி ஆராயவுள்ளது.
இந்த கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மகிந்தவுக்கு ஆதரவு வழங்குவதை எதிர்ப்பதாகவும் தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjt5.html
பாரிய அழிவுக்குள்ளான மலையகத்திற்கு யோகேஸ்வரன் பா.உ ஊடாக சென்றடைந்தது சுவிஸ் அன்பே சிவம் உதவிகள்
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 05:52.09 AM GMT ]
மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண் சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடச் சென்ற மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனை அழுதவாறு மக்கள் சந்தித்தனர்.
இச்சம்பவத்தை கேள்வியுற்ற மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் வியாழக்கிழமை பிற்பகல் பாதிப்பு நடைபெற்ற இடத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
உறவுகளை இழந்து, சகல உடமைகளையும் இழந்து பரிதவித்துக் கொண்டிருந்த கொஸ்லாந்தை ஸ்ரீ கணேசா தமிழ் வித்தியாலய முகாம் மற்றும் பூணாகலை தமிழ் மகா வித்தியாலய முகாம் ஆகியவற்றில் வாழும் மக்களை நேரடியாக சென்று பார்வையிட்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார்.
இவ்வேளை அம்மக்களால், அவசியமாக தமக்கு தேவையாக உள்ளதாக குறிப்பிட்ட உடைகள், அவசிய உதவிகளையும் அம்மக்களின் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று பண்டாரவளை நகரில் வெள்ளிக்கிழமை கொள்வனவு செய்து இரு இடைத்தங்கல் முகாமில் உள்ளவர்களுக்கும் வழங்கி வைத்தார்.
இந்நிலச்சரிவு காரணமாக 54 குடும்பங்களின் குடியிருப்புக்கள் உட்பட்ட பல உயிர்கள் அழிவடைந்தது.
இந்நிகழ்வில் உயிர் இழந்தவர்களில் நான்கு பேரின் உடல்கள் மாத்திரம் மீளப்பெறப்பட்ட நிலையில் இன்னும் 70க்கும் மேற்பட்ட உடல்கள் நிலத்தில் புதையுண்டு கிடக்கின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வனர்த்த நிகழ்வில் முற்றுமுழுதாக 71 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதும் 54 குடும்பங்களே பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதை அறிய முடிந்தது.
ஏனைய குடும்பங்கள் அபாய எச்சரிக்கையின் நிமிர்த்தம் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெற்றோரை இழந்தவர்கள் கிட்டத்தட்ட ஆறு பேர் உள்ளதாக அறிய முடிந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
சில செய்திகள் மிகைப்படுத்தப்பட்டதாக வெளியிடப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
இம்மக்களின் இடைத்தங்கல் முகாம் பராமரிப்பு ஒழுங்கமைப்பு மிகவும் மந்தகதியில் நடைபெறுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்மக்கள் தங்களை மீண்டும் இவ்வாறான அனர்த்தம் நிகழாத பகுதியில் தனியான வீடுகளை அமைத்து குடியேற்ற உதவுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமது உறவுகளின் சடலங்களை கூட பெறமுடியாத நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் துன்புறுவதாக மிகவும் வேதனையுடன் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
முற்றாக மண் மூடி பாதிக்கப்பட்ட மீரியபெத்த கிராமத்தில் 54 வீடுகள், 300 வருட பழமையாக குலதெய்வ ஆலயம், பால் சேகரிக்கும் நிலையம் இரண்டு, வாகனங்கள் திருத்தும் இடம், கடைகள் இரண்டு, மருத்துவ மாது குடும்பம் தங்கியிருந்த விடுதி, சாரதியின் வீடு, சிகிச்சை நிலையம் போன்றவை முற்றாக மூடப்பட்டதுடன், 70க்கு மேற்பட்டோர் புதையுண்டு உள்ளனர் என அறிய முடிந்துள்ளது.
இதன்போது பார்வையிடச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம் தாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வருகை தந்து எங்களை பார்வையிட்டு, குறைகளை கேட்டு நிறைவேற்றித் தந்தமை தங்கள் வேதனைக்கு ஆறுதலாக உள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் அழுதவாறு தெரிவித்தனர்.
சுவிஸ்லாந்து அன்பே சிவம் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினரால் உதவி
மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண் சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக சுவிஸ்லாந்து அன்பே சிவம் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினரால் உடைகள் உதவி வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் கொஸ்லாந்தை ஸ்ரீ கணேசா தமிழ் வித்தியாலய முகாம் மற்றும் பூணாகல தமிழ் மகா வித்தியாலய முகாம் ஆகியவற்றில் வாழும் பாதிக்கப்பட்ட 54 குடும்பங்களுக்கு சிறுவர் முதல் பெரியோர் வரை இருபாலாருக்குமான அனைத்து வகையான உடைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வுதவி தங்களுக்கு பெரும் உதவியாக அமைந்ததாகவும், இவ்வுதவியை வழங்கிய சுவிஸ்லாந்து அன்பே சிவம் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினருக்கும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினருக்கும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் அழுதவாறு நன்றி தெரிவித்தனர்.
இம்மக்களுக்கு சுவிஸ்லாந்து அன்பே சிவம் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினரால் இரண்டு இலட்சத்து நாற்பத்தையாயிரம் ரூபாய் உடனடி உதவிக்காக வழங்கியிருந்தார்கள்.
இதன்போது இம்மக்களுக்கு மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியாக உடைகள் வழங்கி வைக்கப்பட்டது.
சுவிஸ்லாந்து அன்பே சிவம் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினர் கடந்த கால யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார ரீதியாகவும், பல்கலைக் கழக கல்வியை கற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், கணவனை இழந்த பெண்களின் சுயதொழிலுக்காகவும், அனர்த்தங்கள் ஏற்படும் போதும், தென்னை மரக் கன்றுகள் போன்ற பல உதவிகளை தமிழ் உணர்வு மற்றும் ஆன்மீக உணர்வுடன் சேவையாற்றி வருகின்றனர்.
மலையக மக்கள் தற்போது பாதிக்கப்பட்டதற்கு உடனடியாக வெளி இடங்களிலும் இருந்து முதல் தடவையாக தங்களுக்கு இவ்வுதவி வழங்கி இருந்ததாகவும், இது தங்களுக்கு அவசியமாக தேவைப்படும் உதவியெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjt6.html
என்னை அரசாங்கத்தில் இருந்து விரட்டும் தேவை சிலருக்கு உள்ளது: அமைச்சர் துமிந்த திஸாநாயக்க
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 05:55.16 AM GMT ]
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து என்னை வெளியேற்றும் தேவை சிலருக்கு இருப்பதை நான் புரிந்து கொண்டிருக்கின்றேன்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒருவரின் இணையத்தளத்தில் நான் உட்பட 4 பேர் அரசாங்கத்தில் இருந்து வெளியேற போவதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து செல்லும் எந்த எண்ணமும் எனக்கில்லை.
அத்துடன் துமிந்தவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விரட்டுவது சுலபமான காரியமும் அல்ல எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjt7.html
Geen opmerkingen:
Een reactie posten