தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 november 2014

மீண்டும் ஜெயலலிதா மீது வழக்கு தொடருகிறார் சாமி: மோதல் ஆரம்பம்!

கனிமொழி, ராசாவிற்கு எதிராக மோசடி குற்றச்சாட்டு பதிவு!
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 07:31.13 AM GMT +05:30 ]
திமுக எம்.பி கனிமொழி, திமுக தலைவர் மனைவி தயாளு அம்மாள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா ஆகியோர் மீது மோசடி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆ.ராசா மத்திய அமைச்சராக இருந்த போது சட்ட விரோதமாக தொலைதொடர்பு உரிமங்களை அளித்ததாகவும், இதனால் திமுக நடத்தும் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி லஞ்சமாக கிடைத்தது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து இந்த குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக அமலாக்க பிரிவு இயக்குநரகம் கண்டறிந்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில் இன்று இந்திய தண்டனை சட்டம் 120-பி(குற்றச்சதி) பிரிவு, அன்னிய செலாவணி மோசடி தடுப்பு சட்டம் பிரிவு 4 உள்ளிட்டவற்றின்கீழ் இந்த குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
http://www.newindianews.com/view.php?22cMW402JOAce27mKdb2Y0Mad3o4Sec3ODh042AlJ2226AA3

ஜெயலலிதாவை தோற்கடித்த சாமி: ஒரு ப்ளாஷ்பேக்
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 11:13.25 AM GMT +05:30 ]
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பிய சுப்பிரமணிய சாமி, அவருக்கு அரசியல் ரீதியாகவும் நீதிமன்றம் மூலமாகவும் பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு முன்னேறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வருவதற்கு முன்னர், அவர் முதல்வராக இருந்தபோது சாமி மீது தமிழக அரசு சார்பில் 5 அவதூறு வழக்கு போடப்பட்டது.
மீனவர்கள் விவகாரம் மற்றும் இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட படகுகள் சசிக்கு சொந்தமானது என்ற கருத்தை வெளியிட்டமைக்கும் சுப்பிரமணிய சாமியின் மீது ஜெயலலிதா வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஆனால் இதனை எதிர்த்த சாமி கூறியதாவது, அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்த வழக்கு தகுதி இல்லாதது என்றும் அடிப்படை பேச்சுரிமைக்கும், கருத்துரிமைக்கும் பங்கம் ஏற்படும் விதமாக காரணமற்ற வகையில் இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளது எனவும் கூறி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சாமியின் வாதுரையை கேட்டு, ஜெயலலிதாவின் தரப்பில் தொடரப்பட்ட 5 அவதூறு வழக்கிற்கும் தடை விதித்தனர்.
மேலும் விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும், நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

http://www.newindianews.com/view.php?22400Ym2223eODDdceeKOOJdcce0M6AKeaddAcMWebbdbllAS304417mm2004c44oQ23
மீண்டும் ஜெயலலிதா மீது வழக்கு தொடருகிறார் சாமி: மோதல் ஆரம்பம்
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 06:26.16 AM GMT +05:30 ]
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது புதிய வழக்குப்போடப் போவதாக சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.
ஜெயலலிதா சிறைக்குப் போவதற்கு முன்பு சாமி மீது ஐந்து அவதூறு வழக்குகளைப் பதிவு செய்தது தமிழக அரசு.
ஆனால் அதன் மீதான விசாரணைக்கு நேற்று உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது.
இந்நிலையில் ஜெயலலிதா மீது புதிதாக ஒரு வழக்குப் பதிவு செய்யப் போவதாக சாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், ஜெயலலிதா மீது புதிதாக ஒரு வழக்குப் போடப் போகிறேன். தமிழக அரசுடன் வர்த்தகத் தொடர்பை மேற்கொண்டு வரும் 12 பினாமி நிறுவனங்கள் குறித்தது இது என்று அவர் கூறியுள்ளார்.
http://www.newindianews.com/view.php?24YAlT2bbcm0M242dAMea220Km14ed3hDA4c02o6AO2edCQ4S3c0cdOAe3

Geen opmerkingen:

Een reactie posten