தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 november 2014

நாம் தமிழர் கட்சி சார்பில் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்: மனைவியுடன், சீமான் கேக் வெட்டினார்!

அரசின் தீர்மானங்கள் மகிழ்ச்சியை தரவில்லை: அமரபுர மாநாயக்க தேரர்
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 06:28.05 AM GMT ]
வடக்கு மாகாண சபை ஸ்தாபித்தமை, கசினோ உட்பட திட்டமின்றி நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் கடந்த காலங்களில் எடுத்த முடிவுகள் தொடர்பில் மகிழ்ச்சியடைய முடியாது என அமரபுர மஹா நிக்காய பௌத்த பீடத்தின் மாநாயக்கர் தவுல்தென ஸ்ரீ ஞானேஸ்வர தேரர் தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் சம்பிக்க ரணவக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மாநாயக்க தேரர்களுக்கு அரசியல் முக்கியமானதல்ல.
எனினும் முழு நாட்டு மக்களின் வளர்ச்சிக்காகவும் பௌத்த கொள்கையுடன் கூடிய தேசிய முன்னுதாரணங்களை கொண்ட அரசியல்வாதிகளும் அரசியல் அணிகளும் நாட்டுக்கு இன்று தேவைப்படுகின்றனர் எனவும் ஞானேஸ்வர தேரர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYeu4.html
அமைச்சர் வீரவன்சவுக்கு முன் உள்ள சவால் செய் அல்லது செத்துமடி!– முன்னாள் அமைச்சர்
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 06:29.53 AM GMT ]
விமல் வீரவன்ச தனது கட்சி அங்கத்தவர்களின் வாழ்வாதாரத்திற்கே அவரின் அமைச்சை பயன்படுத்தி வருகின்றார்.
இக்காரணத்தினாலேயே அவர் பொது எதிரணி வேட்பாளருக்கு எதிரான சேறு பூசும் வகையில் பேசி தனது அமைச்சையும் அதிகாரத்தையும் பாதுகாக்க போராடிக் கொண்டு இருக்கின்றனர்.
இவரின் கட்சி முக்கியஸ்தர்களான 60க்கு மேட்பட்டோர் இவரின் அமைச்சில் பல்வேறு பதவிகளுக்கு நியமிக்கப்பட்டு பல அரச சலுகைகளுடன் உலா வருகின்றனர்.
இவருக்கு இன்று இருக்கும் சவால்கள் இவருடைய கட்சியின் மத்திய கமிட்டி அங்கத்தவர்களின் பதவிகளையும் இவரோடு சேர்த்து பாதுகாப்பதே இவ்வாறு அண்மையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர் கருத்து கூறினார்.
கீழ் கண்ட வீரவன்ச கட்சி முக்கிய நபர்கள் இவரின் அமைச்சில் பதவிகளை வகிக்கின்றார்கள்.
• சரத் வீரவன்ச (அமைச்சரின் சகோதரர்) அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர்.
• ஜயந்த சமரவீர தலைவர் – வீடமைப்பு அதிகார சபை மத்திய முக்கிய கமிட்டி அங்கத்தவர்
• தீபால் குணசேகர – இயக்குனர் கட்டிட நிர்மாணப்பணி மத்திய கமிட்டி அங்கத்தவர்
• M.F. முசாமில் – இயக்குனர் பொறியியல் பிரிவு மத்திய கட்சி கமிட்டி அங்கத்தவர்
• டாக்டர் – வசந்த பண்டார – அமைச்சின் ஆலோசகர் மத்திய கமிட்டி அங்கத்தவர்
• பத்மா உதயா சாந்த குணசேகர (மாகாணசபை உறுப்பினர் ஊவா) – இயக்குனர் வீடமைப்பு அதிகாரசபை (மத்திய கமிட்டி அங்கத்தவர்)
• சுஜித் முத்து குமாரண – விற்பனை அபிவிருத்தி அதிகாரி – மத்திய கமிட்டி அங்கத்தவர்
http://www.tamilwin.com/show-RUmszBRaKYeu5.html
அரசின் இடுப்பு எலும்பு முறிக்கப்பட்டு விட்டது!- நிர்மால் ரஞ்சித் தேவசிறி
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 06:48.46 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் இடுப்பு எலும்பு முறிக்கப்பட்டு விட்டதாக கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
இது தனிப்பட்ட நபருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதல்ல. நாட்டின் ஜனநாயக இருப்புக்கும், நல்லாட்சிக்கும், மக்களின் நலன்களுக்காகவும் எதிரணி அரசியல் கட்சிகள், பொது அமைப்பு, முற்போக்கான சமூக ஆர்வலர்கள் என அனைவராலும் இது மேற்கொள்ளப்பட்டது.
அரசாங்கம் வீழ்ந்து வரும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி உட்பட அவரது சகாக்கள் பகிரங்கமாக தெரிவித்து வரும் கருத்துக்கள் மூலம் அரசாங்கம் ஒன்றுக்கு இருக்க வேண்டிய ஒழுக்கம் மற்றும் நற்பண்புகள் பற்றி மக்கள் கேள்விகளை எழுப்ப வேண்டும்.

கடந்த காலங்களில் புலி, தேசத்துரோகி, என்.ஜி.ஓ காரர்கள் சதித்திட்டம் தீட்டுகின்றனர் என அரசாங்கம் விமர்சித்தது.
இவ்வாறான விமர்சனங்கள் எம்மீது மாத்திரமல்ல சம்பிக்க ரணவக்க மீது முன்வைக்கப்படுகிறது. அரசாங்கத்தில் இருந்த அவர்கள் தேசத்துரோகிகளா?.
அமைச்சர்களின் ஊழல்கள் பற்றிய கோப்புகள் தன்னிடம் இருப்பதாகவும் அவற்றை வெளியிடப் போவதில்லை எனவும் ஜனாதிபதி அண்மையில் கூறியிருந்தார்.
ஜனாதிபதி தனது சகாக்கள் பற்றி அறிந்துள்ளார். ஆனால் மக்களுக்கு இவை தெரியாது தெளிவாகியுள்ளது.
திருடர்களுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு சரியான முடிவை எடுக்க முடியும்.
அரிசி மாஃபியா, மீன் மாஃபியாக்கள் அரசாங்கத்தில் இருந்து எதிரணிக்கு சென்று விட்டதாக கூறுகின்றனர். அப்படியானால் மேலும் பல மாஃபியாக்கள் அரசாங்கத்திற்குள் இருக்கின்றன.
அந்த மாஃபியாக்க என்ன என்பதை தெளிவுபடுத்துமாறு மக்கள் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்ப வேண்டும்.
ஹெரோயின் மாஃபியாக எங்கிருக்கின்றது. தவறு செய்ய இடமளித்து விட்டு ஏன் தவறு செய்பவர்களை பாதுகாத்து வருகின்றீர்கள் என்று மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.
நாட்டின் சட்டம் தவிடு பொடியாக்கி மண்ணோடு மண்ணாக்கப்பட்டுள்ளது எனவும் தேவசிறி மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYeu6.html
அமைச்சர்கள் தப்பி ஓட ஆயத்தம்!
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 06:57.01 AM GMT ]
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் சில முக்கிய அமைச்சர்கள் நாட்டைவிட்டு வெளியேற முயற்சிப்பதாக தெரியவருகின்றது. 
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் தளம்பல் நிலையில் யார் பக்கமும் சாராமல் இருக்க இந்த பயணங்கள் உதவும் எனக் கூறப்படுகின்றது.
ஏற்கனவே அமைச்சர் நவீன் திசாநாயக்க நாட்டை விட்டு வெளியேறியிருப்பதால், நுவரேலிய மாவட்ட அமைப்பாளராக அமைச்சர் சி.பி ரட்நாயக்காவை ஆளும் கட்சி நியமித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYeu7.html
கட்சி தாவினார் வன்னி மாவட்ட எம்பி
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 07:03.00 AM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறுக், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டுள்ளார்.
சிறிகொத்தவில் நடைபெற்று வரும் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ள நிகழ்வில் உனைஸ் பாறுக் எதிரணியுடன் இணைந்துள்ளார்.
ஹுனைஸ் பாறுக் அமைச்சர் ரிசாட்பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதநிதித்துவப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்திலிருந்து இதுவரை 11 பேர் ஐக்கியதேசியக் கட்சிக்கு தாவியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYevy.html

நாம் தமிழர் கட்சி சார்பில் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்: மனைவியுடன், சீமான் கேக் வெட்டினார்
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 07:14.35 AM GMT ]
விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வைத்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மனைவி கயல் விழியுடன் கேக் வெட்டி, பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடினார்.
இதில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
பிரபாகரன் பிறந்தநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், வழங்கப்பட்டன.
26 இடங்களில் இரத்ததான முகாம் நடைபெற்றது. குருதிக் கொடை பாசறை ஒருங்கிணைப்பாளர் அரிமாநாதன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பல இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெற்றது. மரக்கன்றுகளும் நடப்பட்டன.
திருவொற்றியூர் ராஜா கடை கங்கா காவிரி திருமண அரங்கில் இன்று மாலை வரலாற்று ‘‘தலைவனுக்கு வாழ்த்துப்பா’’ என்ற மலர் வெளியீட்டு விழாவும், கூட்டமும் நடைபெறுகிறது. இதில் சீமான் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
ராயப்பேட்டை வி.எம். தெருவில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் வடக்கு மண்டல அமைப்பாளர் கரு. அண்ணாமலை, தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி மற்றும் பலர் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYevz.html

Geen opmerkingen:

Een reactie posten