தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 november 2014

தமிழக மீனவர்களுக்காக வாதாட மஹிந்தவின் ஆலோசகர்: தமிழிசை

வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த மாலக்க சில்வா
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 06:20.30 AM GMT ]
கொழும்பு பம்பலப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் ஸ்கொட்லாந்து நாட்டை சேர்ந்த காதல் ஜோடியை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவின் மெய்ப்பாதுகாவலர்கள் எனக் கூறப்படும் 7 பேர் தலைமறைவாகியுள்ளனர்.
அவர்களை கைது செய்ய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இரவு நேர களியாட்ட விடுதிக்குள் மதுபோதையில் சென்று தவறாக நடந்து கொண்டு, வெளிநாட்டை சேர்ந்த காதல் ஜோடியை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாலக்க சில்வாவை நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
ஸ்கொட்லாந்து பிரஜையான 43 வயதான ஜேம்ஸ் பிரேன்ஸிஸ் தனது காதலியான இங்கிலாந்தை சேர்ந்த 24 வயதான பொலின்டா மெகன்சியுடன் கடந்த 31 திகதி பம்பலப்பிட்டியில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு அழைத்து சென்றிருந்தார்.
காதலியின் பிறந்தநாள் கொண்டாடத்திற்கான களியாட்ட விடுதிக்கு சென்று நடனமாடிக் கொண்டிருந்த போது, மாலக்க சில்வா உட்பட 6 பேர் கொண்ட குழு வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு தொந்தரவு கொடுத்ததுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மதுபோதையில் இருந்த மாலக்க சில்வா, 24 வயதான பிரித்தானிய பெண்ணிடம் தகாதமுறையில் நடந்து கொள்ள முயற்சித்த போது அவரது காதலர் ஜேம்ஸ், மாலக்க சில்வாவை தாக்கியுள்ளார்.
ஆத்திரமடைந்த ஸ்கொட்லாந்து பிரஜை, மாலக்க சில்வாவின் முகத்தில் குத்தியுள்ளார். இதனையடுத்து மாலக்க சில்வா கீழே விழுந்ததுடன் அவரது மூக்கில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து மாலக்க சில்வாவின் பரிவாரங்கள் வெளிநாட்டுப் பிரஜைகளை தரையில் தள்ளி கடுமையாக தாக்கியுள்ளனர்.
சம்பவம் குறித்து வெளிநாட்டுப் பிரஜைகள் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாலக்க சில்வாவை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவர் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXiu0.html
முதல் முன்னணியிலும் பிளவு! வருண ராஜபக்ஷ விலகல்
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 06:30.02 AM GMT ]
ஜே.வி.பி.யிலிருந்து விலகியவர்கள் உருவாக்கிய முதல் முன்னணி அரசியல் அமைப்பிலிருந்து அதன் முக்கியஸ்தர் வருண ராஜபக்ஷ விலகியுள்ளார்.
இவர் ஜே.வி.பி.யின் முன்னாள் மாகாண சபை உறுப்பினராக இருந்த நிலையில் அதிலிருந்து விலகி, வேறு சிலருடன் சேர்ந்து இந்த அமைப்பைத் தோற்றுவித்திருந்தார்.
இதற்கிடையே தற்போது முதல் முன்னணி அமைப்பிற்குள் பொதுபல சேனா அமைப்பின் அசங்க மஹகெதர என்பவர் உள்வாங்கப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இவரது பிரசன்னம் நடைபெற்றுள்ளதுடன், தற்போது முதல் முன்னணியில் இவர் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
எனினும் பொதுபல சேனா அமைப்பைச் சோ்ந்தவர்களுடன் இணைந்து அரசியல் பயணம் மேற்கொள்ள வருண தீப்தி ராஜபக்ஷ மறுப்புத் தெரிவித்துள்ளார். தனக்கு அதில் விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளதுடன், முதல் முன்னணியின் பொறுப்புகளிலிருந்தும் விலகியுள்ளார்.
இந்நிலையில் வருண தீப்தி விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXiu1.html
தமிழக மீனவர்களுக்காக வாதாட மஹிந்தவின் ஆலோசகர்: தமிழிசை
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 06:40.49 AM GMT ]
ஐந்து தமிழக மீனவர்களின் அப்பீல் மனுவுக்காக ஆஜராக வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.
 ராஜபக்சவின் சட்ட ஆலோசகரான அனில் சில்வா என்பவரே வக்கீலாக ஆஜராகப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களின் தண்டனையை எதிர்த்து வாதாடுவதற்காக இலங்கை அதிபரின் உயர்மட்ட சட்ட ஆலோசகராக உள்ள வழக்கறிஞர் அனில் சில்வாவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறித்து இலங்கை வெளியுறவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் வழக்கு தொடர்பான தீர்ப்பின் நகல் நாளை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த நகல் கிடைத்தவுடன், நாளையே இலங்கை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும். எனவே, தற்போது தமிழகத்தில் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXiu2.html

Geen opmerkingen:

Een reactie posten