தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 november 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தாலோ இல்லாவிட்டாலோ தமிழ் மக்கள் எதிர்க்கட்சி வேட்பாளருக்கே வாக்களிப்பர்: சுரேஸ்

மட்டு. மக்களுக்கு வாழ்வாதார உதவி திட்டம்- கல்லூரிக்கு வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்தாத அதிபர்
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 03:56.15 AM GMT ]
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் மாகாண சபை வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் சுயதொழில் ஊக்குவிப்புக்கான வாழ்வாதார உதவி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் கலந்து கொண்டதுடன். ஆரையம்பதி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், சமூகசேவை உத்தியோகஸ்தர், பயனாளி உட்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிதியுதவி கோரப்பட்டவருக்கு தையல் இயந்திர உதவி அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கல்லூரி அபிவிருத்திக்கு வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்தாத அதிபர்: மீரா கல்லூரியின் அவல நிலை
கட்டுகாஸ்தோட்டை கல்வி வலயத்திற்குட்பட்ட உகுரஸ்ஸபிட்டிய மீரா மத்திய கல்லூரிக்கு இந்த வருடம் பழைய மாணவர் சங்கத்தின் முயற்சியால் அரசியல்வாதிகள் மூலம் அதிகளவு நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், கல்லூரியின் அதிபரின் அசமந்தப்போக்கினால் கிடைத்த நிதி பயன்படுத்தப்படாமல் மீண்டும் திறைசேரிக்கு திரும்பி  செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி சமூகத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறித்த கல்லூரியின் வளர்ச்சிக்கு இன்னும் பல அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதால் அதனை நிறைவேற்றுவதற்காக கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் அரசியல்வாதிகளிடம் பல தடவைகள் கோரிக்கைகள் முன்வைத்து நிதியைப் பெற்றுக் கொடுத்தும் கல்லூரியின் அதிபர் அதனை உரிய முறையில் பயன்படுத்தாமல் உள்ள காரணத்தினால் நிதி மீண்டும் திறைசேரிக்கு செல்லும் நிலையில் காணப்படுகின்றது.
 பல பாடசாலைகள் நிதி வளங்கள் இல்லாமல் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் மிகவும் நெருக்கடியான நிலையில் இயங்கி வருகின்றன.
 ஆனால், உகுரஸ்ஸபிட்டிய மீரா மத்திய கல்லூரிக்கு கிடைக்கப்பெற்ற நிதியைப் பயன்படுத்தி கல்லூரியின் கல்வி வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு குறித்த கல்லூரியின் அதிபர் அசமந்தப் போக்குடன் செயற்படும் நிர்வாகத் திறனற்ற செயலால் பாடசாலை சமூகத்தினர் கவலையடைந்துள்ளனர்.
 தங்களின் பாடசாலையின் அபிவிருத்திக்கு நிதி கிடைக்காதா? என பல பாடசாலைகள் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கிடைத்த நிதியை உரிய முறையில் பயன்படுத்தாத அதிபரின் நிலைப்பாடு மேற்படி பாடசாலை சமூகத்தினரிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிபரின் இந்த செயற்பாடு தங்களின் பிள்ளைகளின் கல்வியை பாதிப்பதாக அமைகிறது என பாடசாலையின் பெற்றோரும் கவலை தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYet1.html

ரணிலின் திட்டம் கசிந்தது: நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சிமாறலை தடுத்தார் மஹிந்த
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 04:32.15 AM GMT ]
ஐக்கிய தேசியகட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் திட்டமிட்டு மேற்கொண்ட நடவடிக்கை ஒன்று ஆளும் கட்சிக்கு கசிந்தமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
2015ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்ட மூன்றாம் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர் சுமார் 20 ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகிவருவதற்கான ஏற்பாடுகள் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் இந்த திட்டம் ஐக்கிய தேசியக்கட்சி தரப்பில் இருந்து ஆளும் கட்சிக்கு கசிந்துள்ளன.
இதனையடுத்து ஜனாதிபதி ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே தொடர்பு கொண்டு அவர்களின் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக கட்சிமாறவிருந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் தமது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமேதா ஜெயசேன மாத்திரம் வரவுசெலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பில பங்கேற்கவில்லை.
இந்தநிலையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான ஒருவரே ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கு வரப்போவதை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கட்சி மாறலாம் என்று சந்தேகிக்கப்படும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு 100 மில்லியன் ரூபாய்கள்!
ஆளும் கட்சியில் இருந்து விலகிச்செல்லலாம் என்று சந்தேகிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு தலா 100 மில்லியன் ரூபாய்களை வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளது என்று ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதனை தவிர குறித்த ஆளும் கட்சியினர் தொடர்பில் உள்ளக கண்காணிப்பு நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 20 வீதமானவர்களின் வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
2010ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்சவுக்கு 60 வீதமான சிங்கள் வாக்குகள் கிடைத்தன எனினும் தற்போதைய நிலையில் அதற்கு வாய்ப்பில்லை என்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் குறிப்பிட்டார்
http://www.tamilwin.com/show-RUmszBRaKYet2.html
பொதுவேட்பாளருக்கான ஆதரவை ஜாதிக ஹெல உறுமய நாளை வெளியிடும்
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 04:49.37 AM GMT ]
ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை நாளை வியாழக்கிழமையன்று ஜாதிக ஹெல உறுமய அறிவிக்கவுள்ளது
ஏற்கனவே பொதுவேட்பாளர் நிலைப்பாட்டில் அந்தக்கட்சி உத்தியோகப்பற்றற்ற ரீதியில் இணைந்துள்ளது.
இந்நிலையில் நாளை கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் அந்தக்கட்சி பொதுவேட்பாளருக்கான ஆதரவை பகிரங்கமாக அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனநாயகம் தொடர்பில் அறிவூட்டும் நிகழ்வுகளை தாம் ஏற்கனவே மக்கள் மத்தியில் முன்னெடுத்து செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmszBRaKYet3.html
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தாலோ இல்லாவிட்டாலோ தமிழ் மக்கள் எதிர்க்கட்சி வேட்பாளருக்கே வாக்களிப்பர்: சுரேஸ்
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 05:05.45 AM GMT ]
ஜனாதிபதி தேர்தல் பொதுவேட்பாளருக்கான தேர்தல் பிரச்சாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடாது. எனினும் ஜனநாயகம் மற்றும் நியாயமான தேர்தலுக்காக பொதுக்கூட்டமைப்புடன் தமிழ்க் கூட்டமைப்பு இணைந்து செயற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்காது. எனினும் தமிழ்க் கூட்டமைப்பு இருந்தாலோ இல்லாவிட்டாலோ பெரும்பான்மை தமிழர்கள் எதிர்க்கட்சி வேட்பாளருக்கே வாக்களிப்பர் என்று அவர் ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தமது கட்சி தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அவசரமாக வெளியிடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மைத்திரிபால ஜனாதிபதியாக தெரிவானால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பார் என்ற நம்பிக்கையை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அண்மையில் வெளியிட்டதாக ஆங்கில இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYet4.html

Geen opmerkingen:

Een reactie posten