தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 november 2014

சுதந்திரக்கட்சியின் செயலாளர் நானே! நடக்க வேண்டியவை உரிய நேரத்தில் நடைபெறும்!- மைத்திரிபால சிறிசேன!



மட்டக்களப்பில் இராணுவத்தின் மாபெரும் களியாட்ட நிகழ்வுகள்- கஞ்சா தோட்டங்கள் கண்டு பிடிப்பு
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 05:32.02 AM GMT ]
இலங்கை இராணுவத்தினரின் சாகச, களியாட்ட நிகழ்வு இம்மாதம் 29,30 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய  பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாக 23ஆவது படைப்பிரிவு கட்டளை தளபதி பிரிகேடியர் தர்சன ஹெட்டியாராய்ச்சி செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
இந்த  செய்தியாளர் மாநாட்டில், 231ஆவது படைப்பிரிவின் கட்டளை  தளபதி பிரிகேடியர் பாலித பெர்னாண்டோ, 232ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி கேணல் ரவீந்திர டயஸ், 233ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் நந்தன கத்துருசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இராணுவத்தினர் யுத்தத்தில் போரிடுவதற்கு மாத்திரமல்ல, இன்னும் பல விடயங்களும் அவர்களுக்கு உள்ளன.
இராணுவத்தினால் பல்வேறுபட்ட அபிவிருத்திகளும் மக்கள் நலன் சார்ந்த வேலைகளும் செய்யப்பட்டு வருகின்றன.
அத்துடன், இராணுவத்தின் ஏனைய விடயங்களையும் காண்பிப்பதற்காகவே இந்த சாகச நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெறும் இக்கண்காட்சியை முற்றிலும் இலவசமாக சகல மக்களும் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இக்கண்காட்சி இரண்டு தினங்களும் பிற்பகல் 2 மணிமுதல் இரவு 6 மணிவரையிலும், இரவு இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சாகச நிகழ்வுகளில் 2000 இராணுவ  சிப்பாய்களின் பங்குபற்றலுடன் இராணுவ அணிவகுப்பு, விமானத்திலிருந்து பறக்கும் பரசூட் குடை சாகசம், மோட்டார் சைக்கிள் சாகசம், நாயின் வேடிக்கை விளையாட்டு, இராணுவ வாகனங்கள், ஆட்லறி அணியினரின் காட்சி, தீப்பந்தத்துக்குள் பாய்தல், கலாச்சார இசை நிகழ்ச்சிகள் மற்றும் துணிச்சல் மிகு சாகச நிகழ்ச்சிகள் என பல நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்தாகவும் அவர் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்கள் பார்ப்பதற்கான போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
எனவே பார்வையாளர்கள் இச்சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
சிவில் சமூகத்திற்கு இராணுவம் பற்றிய அச்சம் இல்லாமல் செய்வதே எமது நோக்கமாகும். நாங்கள் மக்களுடன் நெருங்கி வருகின்றோம்.
அவர்களுக்கான தேவைகளை மனிதாபிமான நோக்கில் இனங்கண்டு செயலாற்ற காத்திருக்கின்றோம் எனவும் கூறியதுடன் இராணுவத்தில் தமிழ், முஸ்லிம்கள் இணைந்து கொள்ள வேண்டும்.
அதற்கான வாய்ப்புக்கள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு கொண்டுள்ளன.
இராணுவத்தின் வாகனப்பழுதுபார்த்தல், குழாய் போறுத்துதல், மேசன், வாகன ஓட்டுனர், மரவேலைகள் செய்தல், உள்ளிட்ட பல்வேறுபட்ட வேலைகளுக்கும் பிரிவுகளுக்கும் ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
அதே நேரத்தில் இராணுவத்தினரின் இசைக்குழுவிலும் இணைந்து கொள்ளமுடியும்.
இதற்கு விசேடமான தமிழ் பாரம்பரிய கலைகள், பாடல் திறமைகள் உள்ளவர்கள் இணைக்கப்படுகிறார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில், இங்கு இணைந்து கொள்பவர்கள் தங்களுடைய மாவட்டங்களிலேயே பணி செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
பெண்கள் காலையில் தொழிலுக்கு வந்து மாலையில் வீடு செல்லமுடியும்.
இதே போன்றதொரு வாய்ப்பு ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்தவருக்குக் கிடைப்பதில்லை எனவும் கேட்டுக் கொண்டார்.
இம்மாதம் 29,30 ஆம் திகதிகளில், மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசியப் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள இலங்கை இராணுவத்தினரின் சாகச, களியாட்ட நிகழ்வுகளில் முதல் நாள் நிகழ்வில், பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதியாக முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தனும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அத்துடன், அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதே நேரம், இரண்டாம் நாள் நிகழ்வில், உற்பத்திதிறன் ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவூத் பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதியாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரனும் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் கட்டளைத் தளபதி தெரிவித்தார்.
மட்டு.வவுணதீவுப்பகுதியில் கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிப்பு: இருவர் கைது
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தின் வயல் பகுதியில் கஞ்சா தோட்டங்கள் செய்துவந்த இருவரை கொக்கட்டிச்சோலை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சென்ற பொலிஸார் இவர்களை கைதுசெய்துள்ளனர்.
இதன்போது 66 கஞ்சா செடிகள் மீட்கப்பட்டதாகவும் வயல் பகுதியிலேயே இவை நடப்பட்டிருந்ததாகவும் கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.
கன்னங்குடாவில் உள்ள வயல்வெளியில் இருந்தே இந்த கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும்  இதன்போது கன்னங்குடாவை சேர்ந்த சின்னத்தம்பி வைரமுத்து என்பவரின் தோட்டத்தில் இருந்து 47 கஞ்சா செடிகளும் கந்தையா சித்திரவேல் என்பவரின் தோட்டத்தில் இருந்து 19 செடிகளும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் இருவரையும் எதிர்வரும் தை மாதம் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பிலான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYet7.html
முகாமில் துப்பாக்கி சூடு அதிரடிப்படை வீரர் மரணம்!
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 05:52.47 AM GMT ]
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தெனியாய – கொட்டபொல முகாமில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் அதிரடிப்படை வீரர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது.குறித்த முகாமில் பணியாற்றிய 24 வயதான பொலிஸ் கான்ஸ்டபள் ஒருவரே சம்பவத்தில் இறந்துள்ளார்.
முகாமின் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு அதிரடிப்படை வீரர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெனியாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYeu0.html
குழந்தைக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்ய முயற்சித்த தந்தை
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 05:55.56 AM GMT ]
மன்னார் மடு பிரதேசத்தில் குழந்தைக்கு விஷத்தை கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நபர் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஷம் கொடுக்கப்பட்ட குழந்தை பெரிய பண்டி விரிச்சான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளது.
ஒன்றரை வயதான குழந்தையே இவ்வாறு உயரிழந்துள்ளது. விஷம் அருந்தியவர் குழந்தையின் தந்தை எனவும் அவர் பெரிய பண்டிவிரிச்சான் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இறந்து போன குழந்தையின் தாய் சில மாதங்களுக்கு முன்னர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மரணத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தந்தை குழந்தைக்கு விஷத்தை கொடுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
சம்பவம் குறித்து மடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYeu1.html
மைத்திரிபால அரசியல் மனித வெடி குண்டு: தேசிய சுதந்திர முன்னணி
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 06:12.50 AM GMT ]
பொது வேட்பாளராக போட்டியிடுவதில் இருந்து மைத்திரிபால சிறிசேன உடனடியாக விலகிக்கொள்ள வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணி வலியுறுத்தியுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக போட்டியிடுவதில் இருந்து விலகி தனது சகோதரரின் அரிசி அலையில் அரிசி குத்திக்கொண்டோ அல்லது மண் அகழ்ந்து கொண்டு வாழ்வது நாட்டுக்கு மிகப் பெரிய நன்மையாக அமையும் என அந்த கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க கூறியுள்ளார்.
மேற்குலக சார்பு கொண்ட சதிகாரர்களுடன் கூட்டு சேர்ந்துள்ள சிறிசேன, இன்று நாட்டுக்கு அரசியல் மனித வெடி குண்டை கொண்டு வந்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் பயங்கரவாததத்தை முற்றாக ஒழித்த நாட்டில் உருவாகும் இவ்வாறான அரசியல் சதிகார மனித வெடி குண்டை வெடிக்க செய்து மீண்டும் நாட்டை அராஜக நிலைக்கு கொண்டு செல்ல நாட்டில் உள்ள முற்போக்கு சக்திகளும் தேசிய சக்திகளும் எந்த விதத்திலும் இடமளிக்க போவதில்லை எனவும் விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYeu2.html
சுதந்திரக்கட்சியின் செயலாளர் நானே! நடக்க வேண்டியவை உரிய நேரத்தில் நடைபெறும்!- மைத்திரிபால சிறிசேன
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 06:21.04 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் உறுப்­பி­ன­ரா­கவும் பொதுச் செய­லா­ள­ரா­கவும் நானே பதவி வகிக்­கின்றேன். கட்­சியின் உறுப்­பு­ரிமை மற்றும் பொதுச்செய­லாளர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­தாக அறி­விக்­கப்பட்டுள்ள­ போ­திலும் அவை சட்­ட­ரீ­தியில் நடை­பெ­ற­வில்லை என்று எதி­ர­ணியின் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். 
ஆளும்­ த­ரப்­பி­லி­ருந்து என்­னுடன் இணை­வ­தாகக் கூறிய அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எங்கே என்று சிலர் கேள்வி எழுப்பி வரு­கின்­றனர். விடி­யும்­ போது நல்ல நல்ல விளை­யாட்­டுக்­களை காணமுடியும் என்றே அவர்­க­ளுக்கு நான் பதில் சொல்­ல­ வேண்­டி­யுள்­ளது. நடக்க வேண்­டி­யவை சரி­யான நேரத்­துக்கு நடை­பெறும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.
ஹொர­கொல்­லை­யி­லுள்ள பண்­டா­ர­நா­யக்­காவின் சமா­திக்கு நேற்று விஜயம் செய்த எதி­ர­ணியின் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அங்கு மல­ரஞ்­சலி செலுத்­தினார். இதன்­போது முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க, முன்னாள் பிர­தி­ய­மைச்சர் எம்.கே.டி.எஸ். குண­வர்­தன உட்­பட பலரும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.
பண்­டா­ர­நா­யக்­காவின் சமா­திக்கு அஞ்­சலி செலுத்­திய மைத்­தி­ர­பால சிறி­சேன ஊட­க­வி­ய­லா­ள­ரிடம் கருத்து தெரி­விக்­கையில்,
எதிர்­வரும் நாட்­களில் ஜனா­தி­பதி தேர்­த­லுக்­காக வேட்­பு­ம­னு­வினை தாக்கல் செய்­ய­வுள்ளேன். பண்­டா­ர­நா­யக்­காவின் ஜனன தின­மான ஜன­வரி 8ம் திகதி நடை­பெறும் தேர்­தலில் வெற்­றி ­பெற்று பண்­டா­ர­நா­யக்க வழியில் செயற்­ப­டுவேன்.
சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க காலத்தில் 17 வயது இளை­ஞ­னாக வாக்குப் பலம் இன்­றி­யி­ருந்த காலத்­தி­லேயே எனக்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் உறுப்­பு­ரிமை கிடைத்­தது. கட்­சியில் எனக்கு 47 வரு­ட­கால அனு­பவம் உள்­ளது.
எதிர்க்­கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க உள்­ளிட்ட தலை­வர்கள் குழு­வினர் விடுத்த அழைப்­பின்­ பேரில் பொது வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கி­யுள்ளேன். நாட்டின் தேசிய எதிர்­பார்ப்­புக்­களை ஈடு­செய்­வ­தற்­கா­கவே இந்த முடி­வினை எடுத்­துள்ளேன்.
நான் ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­டனோ அல்­லது வேறு கட்­சி­யு­டனோ இணை­ய­வில்லை. பொது வேட்­பா­ள­ராக பொது எதி­ர­ணியில் போட்­டி­யி­டு­கின்றேன். கூட்­டணி அர­சியல் எனக்கு புதிய விட­ய­மல்ல.
என்­னோடு இணை­வ­தாகக் கூறிய அமைச்­சர்கள், எம்­பிக்கள் எங்கே என்று சிலர் கேள்வி எழுப்பி வரு­கின்­றனர். விடி­யும்­ போது நல்ல நல்ல விளை­யாட்­டுக்­களை காண முடியும் என்றே அவர்­க­ளுக்கு நான் பதில் சொல்ல வேண்­டி­யுள்­ளது. நடக்க வேண்டியவை உரிய நேரத்தில் நடைபெறும்.
நான் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவும் பொதுச் செயலாளராகவும் இருக்கின்றேன். என்னை கட்சி உறுப்புரிமை மற்றும் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக கூறிய போதும் அவை சட்டரீதியில் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYeu3.html

Geen opmerkingen:

Een reactie posten