தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 november 2014

மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை நேரில் சந்தித்தார் உயர்ஸ்தானிகர் சிங்ஹா

எம்.பி.க்களுக்கு உள்நாட்டு விமானப் பயண வசதி! அமைச்சர் தினேஷ் கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 01:11.52 PM GMT ]
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவச உள்நாட்டு விமானப் பயண வசதி செய்து கொடுக்கப்பட வேண்டுமென்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வரவு -செலவுத்திட்ட உரையின் மீது நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது சபாநாயகரிடம் அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரவர் தொகுதிக்குச் சென்று வருவதற்கும், ஏனைய தேவைகளுக்கும் இலவசமாக உள்நாட்டு விமானப் பயண வசதி வழங்கப்பட வேண்டும்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களது பணியாட்களுக்கும் இலவச ரயில் பயண வசதியும் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் தினேஷ் குணவர்த்தன கோரிக்கை வைத்துள்ளார்.
அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் கோரிக்கைக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலத்த ஆதரவு தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhs6.html

நிவாரணப் பொருட்களுடன் பாக். விமானம் இலங்கை வந்தடைந்தது!
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 01:19.09 PM GMT ]
கொஸ்லாந்த மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் பாகிஸ்தானின் முதல் கொள்கல விமானம் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
பாகிஸ்தானில் இருந்து 100 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை எடுத்து வந்த மேற்படி விமானத்துக்குப் புறம்பாக, பாகிஸ்தான் நாளைய தினமும் நிவாரணப் பொருட்களோடு தனது இரண்டாவது விமானத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜெனரேட்டர்கள், பிளாஸ்ரிக் கொட்டகைகள், புகலிட துணிகள், மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களையே பாகிஸ்தான் இவ்விமானத்தில் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், கடந்த 31ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவைத் தொடர்பு கொண்டு உதவி செய்யக் காத்திருப்பதாக வழங்கிய உறுதி மொழியின் பிரகாரமே இந்நிவாரணப் பொருட்கள் இங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்த பாகிஸ்தான் இராணுவத் தளபதி ராஹில் ஷெரீபும், தாம் வேண்டிய உதவிகளை இலங்கைக்கு வழங்குவதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆசியப் பிராந்திய நட்பு நாடு என்கிற அடிப்படையில், இவ்வனர்த்தம் தொடர்பில் பாகிஸ்தானே முதல்  மனித நேய நிவாரண உதவியைச் செய்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhs7.html
மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை நேரில் சந்தித்தார் உயர்ஸ்தானிகர் சிங்ஹா
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 12:55.37 PM GMT ]
போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 இந்திய மீனவர்களை, இந்திய உயர்ஸ்தானிகர் வை. கே. சிங்ஹா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
கொழும்பு வெலிக்கடை சிறைக்கு சென்று இந்திய உயர்ஸ்தானிகர் அவர்களை சந்தித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் செய்யத் அக்பர்ருதீன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த இந்த மீனவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்ய போவதாக இந்திய அறிவித்துள்ளது.
போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சுமத்தி 2011 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் இந்த 5 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுடன் மேலும் மூன்று இலங்கை பிரஜைகளுக்கு இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhs5.html

Geen opmerkingen:

Een reactie posten