முஸ்லிம் நிர்வாக மாவட்டத்தை ஏற்படுத்த முடியாது! அரசாங்கம் திட்டவட்டம்
நீதிமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை கரையோரை பிரதேசங்களை இணைந்து தனியான நிர்வாக மாவட்டம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைத்திருந்தது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் டி. எம் ஜயரத்ன, இலங்கையில் வாழும் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் நாட்டில் ஐக்கியமானவே வாழ விருப்புவதாகவும் நாட்டை பிளவுப்படுத்தி வாழ விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.
கிழக்கில் மாத்திரமல்ல மத்திய மாகாணத்திலும் பெரும்பாலான முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.
நாட்டை பிளவுப்படுத்த சென்றால், அது நாட்டிற்குள் பதட்டமான சூழ்நிலைகளை உருவாக்கும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவும் முஸ்லிம் காங்கிரஸின் தனியான நிர்வாக மாவட்ட கோரிக்கையை நிராகரித்திருந்ததுடன் முஸ்லிம் காங்கிரஸ் நாட்டை பிரிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் வாக்குகளுக்காக ஏமாற வேண்டாம்- அரசாங்கத்திடம் ஹெல உறுமய கோரிக்கை
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் மக்களின் ஆதரவை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுக்க நிபந்தனையாக கல்முனை மாவட்டத்தை தனியான முஸ்லிம் நிர்வாக மாவட்டமாக ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கடுமையாக நிராகரிப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
நாட்டின் மாவட்டங்களை இவ்வாறு இன ரீதியாகவும், மத அடிப்படையிலும் பிரித்து வேறுப்படுத்தும் யோசனைகளை கண்டிப்பதாக அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளரான மேல் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் நிபந்தனைகளின் அடிப்படையில் முஸ்லிம் வாக்குகளுக்காக ஏமாற வேண்டாம் என எமது கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தேர்தல் தொகுதிகளை இணைத்து தனியான முஸ்லிம் நிர்வாக மாவட்டம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த யோசனைகளை வன்மையாக கண்டிக்கின்றோம். அதேவேளை இது தேசிய பாதுகாப்புக்கும் இனங்களுக்கு இடையிலான இணக்கப்பாடுகளுக்கும் பாரதுரமான அச்சுறுத்தலை விடுக்கும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
முஸ்லிம் மாவட்டத்தை கோருவதானது முஸ்லிம் மக்களை ஏனைய மக்களிடம் இருந்து பிரிக்க திட்டமிடும் துஷ்ட இனவாத மற்றும் அடிப்படைவாதத்திற்கு ஆதரவு வழங்கும் செயல்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த காலங்களில் இருந்தே முஸ்லிம் பிராந்தியம் குறித்து குரல் கொடுத்து வருவதுடன் ஒலுவில் பிரகடனம் மூலம் முஸ்லிம் மக்களின் அடிப்படைவாத கோரிக்கை முன்வைத்தது எனவும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhs3.html
அரசாங்கத்திடம் பணப் பிரச்சினையில்லை! அமைச்சர் எஸ்.பி.
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 12:44.40 PM GMT ]
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
உலகில் எந்த நாட்டின் புள்ளிவிபரங்களிலும் பொய்களை செய்து விட முடியாது. இந்த புள்ளிவிபரங்களை உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச நிதி நிறுவனங்கள் கவனம் செலுத்தும்.
இதனால், பொய்களை புள்ளிவிபரங்களாக கூறினால், பல பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும்.
நிதி தொடர்பான எந்த பிரச்சினையும் அரசாங்கத்திற்கு இல்லை. வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகை 521 பில்லியன் மட்டுமே.
9.2 வீத அந்நிய செலவாணி கையிருப்பில் இருப்பதுடன், 2000 ஆம் ஆண்டு வங்கிகளின் நிதி பலம் 3 ஆயிரம் பில்லியனாக இருந்ததோடு தற்போது அது 11 ஆயிரம் பில்லியனாக அதிகரித்துள்ளது.
நாட்டின் பொருளாதார வலுவான நிலையில் இருக்கின்றது. இதனால், மிஹின் லங்கா போன்ற நிறுவனங்களுக்கு நிதியை வழங்கி அவற்றை மேம்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 7.08 வீதமாகும் எனவும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhs4.html
ஜனாதிபதி மகிந்தவுக்கு கடிதம் எழுதிய சுப்பிரமணியன் சுவாமி
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 11:33.31 AM GMT ]
சுப்பிரமணியன் சுவாமி எதிர்வரும் 25 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திக்க உள்ளார்.
முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் ஞாபகார்த்த பேருரையில் கலந்து கொள்ளும் நோக்கில் சுவாமி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இலங்கையில் அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு எதிரான வழக்கை இந்தியாவுக்கு மாற்றி மீண்டும் விசாரணைக்கு எடுப்பது குறித்து பேசுவதும் சுப்பிரமணியன் சுவாமியின் இலங்கை விஜயத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhs1.html
Geen opmerkingen:
Een reactie posten