தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 november 2014

முன்னாள் புலி உறுப்பினரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

அதிஷ்டத்தை நம்பி 60 ஆயிரம் ரூபாயை இழந்த யாழ்.இளைஞன்
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 01:36.33 PM GMT ]
தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபரொருவர் எழு லட்சம் ரூபா பரிசுத் தொகை விழுந்துள்ளது எனவும் அதனை விடுவிப்பதனால் 60 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டுமென கூறியதை நம்பிய யாழ்ப்பாணத்தைச் சேரந்த இளைஞர் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் கரவெட்டி கிழக்கில் வசிக்கும் குறித்த இளைஞனின் தொலைபேசிக்கு டயலொக் இலக்கத்திலிருந்து அழைப்பொன்று வந்துள்ளது.
இளைஞனிற்கு ஏழு இலட்சம் ரூபா அதிஷ்டம் அடித்துள்ளது என்றும் அதனை விடுவிக்க 60 ஆயிரம் ரூபாவை செலுத்தவேண்டுமென்றும் மறுமுனையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஈ-சற் முறையில் பணத்தை செலுத்துமாறும் மறுமுனையிலிருந்து கூறப்பட்டுள்ளது.
இதனை நம்பிய குறித்த இளைஞன் பணத்தை செலுத்தியதுடன், 7 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையைப் பெற நெல்லியடியிலுள்ள கடையொன்றிற்கு முன்னால் காத்திருந்துள்ளார்.
வெகுநேரமாகியும் ஒருவரையும் காணாததால், தான் ஏமாற்றப்பட்டதை இளைஞன் உணர்ந்துள்ளார்.
அதன்பின்னர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் இது குறித்து முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhty.html
முன்னாள் புலி உறுப்பினரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 01:55.14 PM GMT ]
அநுராதபுரம் இராணுவப் படைமுகாம் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் விமானப்படை உறுப்பினர் ஒருவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அநுராதபுரம் விசேட நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் மீது குற்றப்ப த்திரிகையை தாக்கல் செய்யும் முகமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த குற்றச்சாட்டின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மற்றும் ஒருவரின் விளக்கமறியல் காலத்தையும் நீதிமன்றம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை இன்று நீடித்தது.
2007ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் திகதி அநுராதபுரம் இராணுவ முகாம் மீது தரை மற்றும் வான் வழியாக நடத்தப்பட்ட தாக்குதலில் 14 படையினர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhtz.html

Geen opmerkingen:

Een reactie posten