இலங்கையில் எனது நீர் மூழ்கி தரித்து நிற்பது ஒரு வழமையான விடையம்: சீனா பதிலடி !
ஏடென் வளைகுடாவிற்க்கு சோமாலியாவிற்க்கும் செல்லும் சீனா கப்களுக்கு, பாதுகாப்பு வழங்குவதற்காக செல்லும் வழியிலேயே நீர்மூழ்கிகள் சீனா வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவளை இலங்கைக்கு என்ன காரணத்திற்காக நீர்மூழ்கிகள் சென்றுள்ளன, என்பதை சீனா இந்தியாவிற்க்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா கடந்த வாரம் வெளியிட்ட கரிசனைகளையும் மீறி சீனாவின் கடற்கலங்கள் மீண்டும் வந்துள்ளமை இராஜதந்திர வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை துறைமுகம்வந்துள்ள சீனாவின் கடற்கலங்கள் 6ம் திகதி வரை இலங்கையில் தரித்து நிற்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகள் இருந்தால் இதுபோல சீன நீர் மூழ்கி கொழும்பில் வந்து நிம்மதியாக தரித்து நிற்குமா ? புலிகளை சேர்ந்து அழிக்க முன்னர் இந்தியா யோசித்து இருந்திருக்கவேண்டும் !
http://www.athirvu.com/newsdetail/1372.htmlஅனுரா பாராளுமன்றில் போட்ட குண்டால் சபை ஒத்திவைக்கபப்ட்டுள்ளது: காரசாரமான வாதம் !
ஜேவி.பி தலைவர்அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்த வேளை, அமைச்சர் மேர்வின் சில்வா குறுக்கிட்டு அவரது உரையை குழப்பினார். இதனை தொடர்ந்து ஜே.வி.பி தலைவர் மேர்வின் சில்வா மீது தனது கவனத்தை திருப்பியதுடன், அவர் தனது மகனுக்கு பிணை வழங்கப்படுவதற்காக முயல்வதாக குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து இரு தரப்பிற்க்கும் இடையில் வாக்குவாதம் தீவிரமடைந்தது- அரச தரப்பில் சஜின் வாஸ் குணவர்த்தனா உட்பட பலர் மேர்வின் சில்வாவிற்க்கு ஆதரவாக இணைந்துகொண்டனர். இதன்போது ஜே.விபி தலைவர் சஜின் வாசை பக்கம் தன் கவனத்தை திருப்பி, கிறிஸ்நோனிஸ் விவகாரத்தை குறிப்பிட்டதுடன் சிலர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிழையாகவழி நடத்தப்பார்ப்பதாக குற்றம்சாட்டினார்.
இதனை தொடர்ந்து எழுந்த அமளியால் சபை ஒத்திவைக்கப்பட்டது.
http://www.athirvu.com/newsdetail/1373.htmlமாட்டிக்கொண்ட கோட்டபாய : மயூரி இனோகா கடத்தப்பட்டு எச்சரிக்கை செய்தி வெளியானது !
காணமற்போன தனது கணவரை மீட்டுத்தருமாறு தொடர்போராட்டங்களை நடத்திவரும் மயூரி இனோகா என்ற பெண்மணியை இனந்தெரியாதவர்கள் கடத்தி கணவரை தேடும் முயற்சியை கைவிடுமாறு எச்சரித்த பின்னர் வீதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இப்படிச் செய்தால், மயூரி பயந்துவிடுவார் என்று கோட்டபாய போட்ட கணக்கு தப்பாகிவிட்டது. அவர் அடங்கி ஒடுங்கவில்லை. மாறாக நடந்த சம்பவத்தை ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார் !
இது தொடர்பாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளதாவது,
காணமற்போன மதுசிகா ஹரிஸ் டி சில்வாவின் மனைவி மயூரி நவம்பர் முதலாம் திகதி கடத்தப்பட்டார்.இவரது கணவர் செப்டம்பர் 2013 காணமற்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது. காணமற்போனவர்களுக்காக சீதுவ-ரத்தொழுவையில் நவம்பர் 27 ம் திகதி நடைபெற்ற நிகழ்வில் மயூரி கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார். இதன்பின்னரே அவர் கடத்தப்பட்டுள்ளார். தன்னுடைய இரட்டை குழந்தைகளுக்காக பால்மா வாங்குவதற்காக அனுராதபுரத்தில் கடையொன்றிற்கு சென்றுகொண்டிருந்த வேளையே அவர் கடத்தப்பட்டுள்ளார். தன்னை பின்தொடர்ந்து வந்த அவர்கள் பின்னர் தான் பயணித்த முச்சக்கரவண்டியையே பயன்படுத்தி தன்னை கடத்திச்சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர் ஒருவர் என்னை முச்சக்கர வண்டியில் கூட்டிச்சென்று, பின்னர் தன்னை வான் ஒன்றில் ஏற்றியதாகவும், குறிப்பிட்ட வான் ஒரு மணிநேரமாக பயணித்துக்கொண்டிருந்த வேளை தான் துற்பிரயோகத்திற்;கும், மிரட்டலிற்க்கும் உட்படுத்தப்பட்டதாகவும், காணமற்போனவர்கள் சார்பாக செயற்படும் அமைப்புகளின் நிகழ்வுகளில் பங்கெடுக்க வேண்டாமென தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னை கடத்தியவர்களில் ஒருவர் பல தடவை துப்பாக்கியை காட்டி தன்னை சுடப்போவதாக மிரட்டடியதாகவும்,தனது கணவர் இருக்கும் இடத்திற்;கு தன்னையும் அழைத்துப்போகபோவதாக தெரிவித்ததாகவும், குறிப்பிட்டுள்ள மயூரி,தான் மிகுந்த அச்சமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் அவர்கள் தன்னை நொச்சியகமவில் உள்ள வீதியொன்றில் வீசிவிட்டு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காணமற்போன தனது கணவர் எங்கிருக்கின்றார் என்ற விபரங்களை வெளியிடுமாறு கோரி மயூரி ஒவ்வொரு மாதமும் -அனுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்க்கு முன்பாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.அவரது கணவர் தொடர்பான விசாரணை இன்று அனுராதபுரம் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. மயூரி தனது கணவர் காணமற்போனதன் பிண்ணனியில் இருப்பதாக தான் கருதும் பொலிஸ்உத்தியோகத்தர்களின் பெயர்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்னரும் மயூரி மிரட்டல்களுக்குள்ளாகியுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1371.html
Geen opmerkingen:
Een reactie posten