தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 november 2014

18வது சட்டதிருத்தத்தை ரத்துச்செய்ய வேண்டும்! ஐ.நா. இலங்கையிடம் கோரிக்கை!

பொலன்னறுவை பறந்த வான்பரப்பில் மர்ம சிலந்தி வலை வேற்றுக்கிரகத்துக்குரியது?
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 02:10.31 PM GMT ]
அண்மையில் பொலன்னறுவை வான்பரப்பில் பறந்த மர்ம சிலந்தி வலை நூல்கள் வேற்றுக்கிரக பொருட்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் இந்தச் சம்பவம் நடைபெற்றிருந்தது. வான் பரப்பு பூராகவும் வெள்ளை நிறத்தில் மிதந்து கொண்டிருந்த இந்த மர்ம சிலந்தி வலை நூல்கள் அதன் பின் ஹம்பாந்தோட்டை பிரதேசத்திலும் ஓரிரு இடங்களில் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இங்கிலாந்து கார்டிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திரா விக்கிரமரசிங்க இது தொடர்பாக ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தார்.
அதன் மூலம் இந்த மர்ம நூல் பூமிக்கிரகத்துக்கு உரியது அல்ல என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் வேற்றுக்கிரகமொன்றுக்கு உரியதாக இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளதால், மேலதிக பரிசோதனைகளுக்காக இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது
http://www.tamilwin.com/show-RUmszBTYKXht0.html
18வது சட்டதிருத்தத்தை ரத்துச்செய்ய வேண்டும்! ஐ.நா. இலங்கையிடம் கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 02:20.06 PM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட 18வது திருத்தச்சட்டத்தை ரத்துச் செய்யுமாறு ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையொன்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இலங்கை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், 18வது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களின் சூத்திரதாரிகள் பாதுகாக்கப்படுவதற்கு இந்த சட்டதிருத்தமே வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
நீதித்துறை அலுவலர்கள் நிறைவேற்று அதிகாரம் அல்லது நாடாளுமன்றம் ஆகியவற்றின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் செயற்படும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக ஐ.நா. அமைப்புகள் தமது அறிக்கைகளில் இலங்கை தொடர்பாக பல விடயங்களை குறிப்பிடுகின்ற போதிலும் இலங்கை தரப்பில் இருந்து எதுவித மறுப்புகளும் வெளியிடப்படுவதில்லை என்பது கவனிக்கத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXht1.html

Geen opmerkingen:

Een reactie posten