தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 25 november 2014

படையினர் தடுத்தாலும் மாவீரர்களை அஞ்சலிப்போம்!- அனந்தி சசிதரன்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், செயலாளர் மலேசியா பயணம்
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 02:53.32 AM GMT ]
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹஸன் அலி ஆகியோர் இன்று நள்ளிரவு மலேசியா பயணமாகியுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.
மலேசியாவில்  நடைபெறவுள்ள மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காகவே இவர்கள் இருவரும் பயணமாகியதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் அரசியல் நிலைவரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவரும் செயலாளரும் திடீரென வெளிநாடு சென்றுள்ளமை அரசியல் மட்டத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYfw2.html
பொது வேட்பாளரின் கட்சி, சின்னம் அடுத்த இரு தினங்களில் அறிவிக்கப்படும்!– மைத்திரிபால
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 02:41.31 AM GMT ]
ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிடப் போகும் கட்சி மற்றும் சின்னம் என்பன பற்றிய தகவல்களை அடுத்துவரும் இரு நாட்களில் தெரிவிக்கவுள்ளதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இது தொடர்பாக பல தகவல்கள் வெளிவந்துள்ள போதிலும் ஜனாதிபதி தேர்தலுக்கான எதிரணி பொது வேட்டாளராக களமிறங்கவுள்ள மைத்திரிபதால சிறிசேன இவ்வாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYfw1.html
இந்தியாவின் பொம்மை ஆட்சி காலம் மாறுமா!!
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 02:15.27 AM GMT ]
இன்று இந்தியாவில் தமிழக அரசு புகைப்படம் வைத்து ஆட்சி நடக்கின்றமை ஒரு வேடிக்கையை உருவாக்கி உள்ளது .
அது போன்று ஒரு சிறந்த முதல்வர் வெற்றிடமும் உருவாகி உள்ளதை தெளிவாக உணர்த்துகின்றது.
எத்தனை ஆண்டுகள் இது போன்று பொம்மை ஆட்சி நடத்துவதற்கு மக்கள் இடம் அளிப்பார்கள் என்பது காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
இவை பற்றி சற்று பார்ப்போமானால்,
இந்தியாவில் இன்று நிலவும் முதல்வரின் ஆட்சிக்கு பலத்த எதிர்ப்புக்களும் பலவிதமான பிரசாரங்களுக்கு மத்தியிலும் அம்மாவின் புகைப்படம் வைத்து ஒரு பொம்மை ஆட்சி போன்றே நடக்கின்றது.
இன்றைய சூழலில் இந்தியாவில் பாரிய ஒரு வெற்றிடம் உருவாகி உள்ளதை அவதானிக்க முடிகின்றது.
கருணாநிதி தலைமையிலான கூட்டணியும் இந்தியாவில் மக்களின் பணத்தை கொள்ளை அடித்து சொத்து சேரத்தை தவிர எந்த விதமான நன்மைகளோ செய்ய வில்லை.
அது போன்று தனது குடும்ப ஆட்சியின் காரணமாக கடந்த கால தேர்தல்களில் தனது எதிர் கட்சி என்ற இடத்தையும் இழந்து உள்ளனர்.
இவர்கள் ஈழத் தமிழர்களுக்கும் செய்த துரோகமும் இதில் அடக்கிக் கொள்ளலாம்.
இன்று இந்திய அரசியலில் இந்த வெற்றிடத்தை நிரப்புவதாக இருந்தால் தற்போது இறுதியாக இருக்கின்ற சீமான், பழ. நெடுமாறன், வைகோ போன்றவர்கள் ஒரு கூட்டணி ஆட்சி அமைதல் ஒருவேளை இந்த வெற்றிடம் நிரப்புவதற்கு ஒரு வாய்ப்பு உருவாகலாம்.
காரணம் இந்திய அரசியலில் தற்போது உள்ளவர்கள் அனைவரும் மக்களை விட தாங்கள் சொத்து சேர்த்ததுதான் அதிகமாக உள்ளது.
இன்று கருணாநிதி குடும்பமாக இருக்கடடும், ஜெயலலிதா கூட்டணியாக இருக்கட்டும். இவர்கள் இது வரை காலமும் மக்கள் பணத்தையே கொள்ளை அடித்துள்ளனர்.
சிறந்த ஒரு எதிர்க்கட்சி உருவாகும் என்ற நிலையும் தற்போது மாறியுள்ளது.
விஜயகாந்த் போன்றவர்கள் படத்தில் அரசியல் நடத்துவது போன்று செயற்படும் போது அங்கு தற்போது சிறந்த ஒரு எதிர்க்கட்சி வெற்றிடமும் .உருவாகி உள்ளது.
தற்போது ரஜினிகாந்த் அரசியலில் வர வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அரசியலுக்கு வந்தாலும் அவர் ஒரு தமிழ்நாட்டில் பிறக்கவில்லை என்று ஒரு ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு போன்றவை உருவாகலாம்.
ஆனால் தமிழ்நாட்டில் பிறக்க விட்டாலும் வந்தேறிகள் என்ற முறையில் ஒருவேளை மக்களுக்கு நல்ல சேவைகள் செய்வதற்கான வாய்ப்புகள் சற்று இருப்பதாக புலனாகின்றது.
ஆனால் இவர்களை விட தற்போது சிறிதளவாவது ஈழத் தமிழர்கள் சார்பில் குரல் கொடுக்கும் இவர்கள் ஒன்று சேர்ந்தால் வருங்காலத்தில் நல்ல ஒரு முதல்வர் ஆட்சியை மக்களுக்கு வழங்க முடியும்.
இன்று இந்திய அரசியல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அனைவரும் எதோ ஒரு விதத்தில் மக்களை ஏமாற்றியவர்களாகவே இருக்கின்றன்றனர்.
அது போன்று மாணவர்கள் ஒன்று சேர்ந்துள்ள நிலையில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியவர்களாக மாற வேண்டும்.
மக்களை முட்டாளாக்கும் அரசியல் வாதிகளின் சொற்ப பணத்துக்காக தனது உயிரை மாய்க்கும் இந்த மக்கள் விழிப்படைய வேண்டும்.
இனிவரும் காலங்களில் மக்கள் ஏமாறாத மக்களாக மாறினால் எதிர்காலத்தில் சிறந்த ஒரு ஆட்சி அமைக்க நல்ல சிறந்த ஒரு கூட்டணி அரசை உருவாக்கும் சக்தி மக்களிடமே உள்ளது.
மக்கள் தேர்ந்தெடுப்பவர்கள், மக்களுக்கு சேவை செய்பவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இனி மேலும் ஏமாறாத சமூகமாக மாறி சிறந்த அரசை உருவாக்க வேண்டியது மக்களின் கைகளில்.
எஸ் கே
shashi.batti@gmail.com

http://www.tamilwin.com/show-RUmszBRZKYfw0.html

படையினர் தடுத்தாலும் மாவீரர்களை அஞ்சலிப்போம்!- அனந்தி சசிதரன்
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 02:57.48 AM GMT ]
தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடி வீர காவியமான போராளிகள் போற்றப்பட வேண்டியவர்கள். எல்லோருடைய மனதிலும் நீங்கா இடம்பிடித்திருக்கும் மாவீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவோம், இராணுவம் தடுத்தாலும் நாம் பூசிப்போம்.என வடக்கு மாகாண சபை உறுப்பினரான திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மரணித்த போராளிகளை நினைவுகூரும் தினமான மாவீரர் தினம் வரும் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்தத் தினத்தை தமிழர்கள் எவரும் அனுஷ்டிக்கக் கூடாது என இராணுவம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே திருமதி அனந்தி சசிதரன் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்:
நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது.
அரசாங்கமும் இராணுவமும் எங்கள் இனத்துக்காகப் போராடி தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தக் கூடாது என இந்த வருடமும் இரும்புக்கரம் கொண்டு தடுக்கின்றனர்.
ஆனால் என்றோ ஒரு நாள் இந்த நாளை எந்தத் தடங்கலும் இன்றிக் கொண்டாடும் நிலை வரும்.
மாவீரர் தினத்தைக் அனுஷ்டிக்க முற்பட்டவர்களை கைது செய்து இராணுவம் அச்சுறுத்தியது. அவர்கள் மீது தாக்குதலும் நடத்தியது.
ஆனால் இவற்றையெல்லாம் புறந்தள்ளி மக்கள் இராணுவத்தினரின் அச்சுறுத்தலைக் கண்டு அஞ்சாது 27ம் திகதி வீடுகளில் பிரார்த்தனை செலுத்தினர்.
இவற்றையும் இராணுவம் தடுக்க முனைந்தது, முனைகிறது. ஆனாலும் அவர்களால் இது முடியாது.
ஏனெனில் மக்களின் மனங்களில் வாழ்கின்ற மாவீரர்களை எவராலும் வெளியே தூக்கி எறியமுடியாது என்றார் அனந்தி.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYfw3.html

Geen opmerkingen:

Een reactie posten