[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 03:03.47 AM GMT ]
ஈராக்கின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 2000 தொடக்கம் 3000 வரையிலான இலங்கையர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழில் நடவடிக்கைகளுக்காக சென்றவர்களாவர்.
பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக அங்குள்ள மக்கள் பலர் இடம்பெயர்ந்துள்ளனர். இதன் காரணமாக இலங்கையர்களின் விபரங்கள் கோரப்படுகின்றன.
இலங்கைத் தூதரகத்தில் தற்போது 300 பேரின் விவரங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. எனவே ஈராக்கில் இருக்கும் தங்கள் உறவினர்கள் குறித்து உடனடியாக பதிவு செய்யுமாறு இலங்கைத் தூதரகம் கேட்டுள்ளது.
தங்கள் உறவினர்களின் விவரங்களை slembirq@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.
அல்லது 00-964-7704847685, 00-964-7703902467, 00-964-7704224809 தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYfw4.html
ஜனாதிபதி நேபாளம் பயணமானார்
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 03:15.08 AM GMT ]
சார்க் மாநாடு காத்மண்டுவில் இன்று முதல் 27ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
இந்தநிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை நடைபெறும் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.
இதனையடுத்து அவரும் பாரியாரும் லும்பினிக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதி இந்திய பிரதமருடனும் தனிப்பட்ட பேச்சுக்களை நடத்துவார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYfw5.html
பொதுவான எதிரியை தோற்கடிக்க அனைத்து தரப்பினரும் இணைந்துள்ளனர்: சுஜீவ சேனசிங்க
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 03:15.24 AM GMT ]
வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு விவாதத்தில் நேற்று பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் போர் வெற்றியை பயன்படுத்திப் பிரச்சாரம் செய்வதனை நிறுத்திக்கொள்ளவில்லை.
வாக்குகளைப் பெற்றுக்கொள்ள புலிகளுக்கு பணம் வழங்கியது இந்த அரசாங்கமேயாகும்.
கொழும்பு நகரம் அலங்காரப்படுத்தப்பட்டுள்ளது அதனை ஏற்றுக்கொள்கின்றோம். மீள்குடியேற்ற நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளன. நல்ல விடயங்கள் சிலவற்றை இந்த அரசாங்கம் செய்துள்ளது.
எனினும் அதிகளவில் தவறுகள் இழைத்துள்ளது. ஊழல் மோசடிகள் நாடு முழுவதிலும் வியாபித்துள்ளது.
மக்கள் எதிர்பார்த்த நிவாரணங்களை இந்த வரவு செலவுத் திட்டம் வழங்கவில்லை என சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYfw6.html
அரசாங்கம் பீதியடைந்துள்ளது!– ஆர்.யோகராஜன்
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 03:17.43 AM GMT ]
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சி உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டம் பற்றி இன்று பேசவில்லை.
எங்கள் மீது சேறு பூசுவதனையே இலக்காகக் கொண்டு செயற்படுகின்றனர்.
இன்று ஆளும் கட்சியின் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சமடைந்துள்ளனர்.
மக்கள் இன்று அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சியடையத் தொடங்கியுள்ளனர்.
ஒரு சில நபர்களை செல்வந்தராக்கும் நோக்கிலேயே அரசாங்கம் சகல கொள்கைகளையும் வகுத்து வருகின்றது.
நாட்டின் பொது மக்கள் குறித்து அரசாங்கம் சிந்திப்பதே இல்லை.
இந்தப் போக்கினை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என ஆர்.யோகராஜன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYfw7.html
சட்டன நிகழ்ச்சியை குழப்பியமை முட்டாள்தனமான செயல்: வாசுதேவ
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 03:33.23 AM GMT ]
இது அரசாங்கத்தின் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும் என்றும் அவர் கூறினார்.
கடந்த வார இறுதியில் ஒளிப்பரப்பான இந்த நிகழ்ச்சியின் அலைவரிசை தொடர்ந்தும் குழப்பப்பட்டது, இதன்காரணமாக கொழும்புக்கு வெளியில் உள்ளவர்களுக்கு நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போனது.
இதேவேளை இந்த செயல் தொடர்பில் அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்கும் என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு தலைவரை கடுமையாக கண்டித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Geen opmerkingen:
Een reactie posten