மலையக மக்களின் இந்த அனர்த்தத்துக்கு ஆறுமுகம் தொண்டமான் தான் முக்கிய காரணம் என்று தனது மொத்த குடும்ப உறுப்பினர்களையும் இழந்து துடிக்கும் ஒரு தந்தை சாபம் இட்டுள்ளார்.
அங்கு சென்று பார்வையிடும் அனைத்து மக்களையும் இவரின் சோகம் தங்கிய ஆதங்கம் ஈர்த்துள்ளது.
அவர் இட்ட சாபம் வருமாறு,
மலையக மக்கள் ஒரு காலமும் தொண்டமானை ஆதரிக்க வேண்டாம், தொண்டமான் தனது குடும்பத்துக்காக மட்டும்தான் அரசியல் செய்கின்றார்.
நாங்கள் பல போராட்டங்கள் நடத்தி, எந்த ஒரு உதவியும் அரசாலோ வேறு எவராலோ வந்தாலும் 90% கொள்ளை அடித்து 10% மட்டும்தான் எங்களுக்கு வழங்குகின்றனர்.
எமது மக்களை ஏமாற்றுவதற்கு ஒரு உத்தியை பாவிக்கின்றனர், அதுதான் மலையக மக்களின் குரல் வெளி வரவேண்டுமானால் மலையக மக்கள் சார்பில் ஒருவர் அரசியலில் வரவேண்டும் என்று ஏமாற்றுவது.
இன்று தொண்டமான் செய்த சேவை என்னெ? இன்று மண்ணுக்கு உரமான எமது உறவுகளை இன்று வரைக்கும் மீட்க முடியவில்லை, லயன்கள் எங்கே இருக்கிறது, பாதை தேடுகின்றார்கள். இதுதான் தொண்டமான் செய்த சேவை.
தொண்டமானிடம் கேட்டால் இந்தியாவின் உதவி கேட்கின்றாராம், எமக்கு இந்தியாவின் உதவி தேவை இல்லை. எமது நாட்டில் எமது மக்களை மீட்கக் கூடிய நல்ல மனிதர்கள் இருக்கின்றார்கள்.
இன்று நானும் எனது உறவுகளுடன் மண்ணுக்கு உரமாகி இருந்தால் இன்று தனிமையில் உங்கள் முன் இப்படி சாபம் இடவேண்டியதில்லை.
எமது குறைகளை தீர்க்க முடியாத ஆறுமுகம் தொண்டமான் எல்லாம் அரசியலில் இருக்க வேண்டுமா? இவன் மக்களுக்கு செய்த உதவி என்ன?
தொண்டமானை இந்தியாவுக்கு அனுப்புங்கள், இவர்கள் இந்தியாவில் கட்ட பஞ்சாயத்து நடத்தியவர்கள், இவர்களிடம் மனித நேயம் எதிர்பார்க்க முடியாது.
தேர்தல் காலங்களில் கூட்டங்கள் நடக்கும் போது தொண்டமான் பொலிஸாருக்கு பணம் கொடுத்து பொது மக்களை தாக்கச் சொல்லுவர். தாக்கிய பின் அந்த பொலிசாருக்கு தான் வந்து தாக்கி மக்களிடம் நல்ல பேர் எடுப்பதாகவும் நடிப்பவன் தொண்டமான்.
எமது மக்களும் இதை நம்பி இவனுக்கு வாக்களித்து மகா தவறினை செய்கின்றனர். இதன் விளைவை இன்று நாம் அனுபவிக்கின்றோம்.
இன்று எம்மை தனியாக வந்து பார்ப்பதற்கு தொண்டமானுக்கு வக்கில்லை, ஆனால் ஜனாதிபதியுடன் வந்து 5 நிமிடம் பார்த்து விட்டு சென்றான், இவன் எமக்கு தேவை இல்லை.
ஜனாதிபதி கூட வந்து உடனே சென்று விட்டார். பாதிக்கப்பட்ட எங்களுடன் ஒரு நாள் இருக்க முடியாத ஜனாதிபதி அவர்கள் எங்களை உழைப்புக்கு மட்டுமே பாவித்துள்ளனர்.
5 நிமிடம் குளிர் ஊட்டி இல்லாமல் ஜனாதிபதியால் இருக்க முடியவில்லை, இவர்கள் எங்களை எப்படி காப்பாற்றுவார்கள்.
1978ம் ஆண்டு தொடக்கம் இங்கு அரசியல் நடத்தும் தொண்டமான் குடும்பம் எமக்கு செய்தது என்ன?
உண்மையில் எமக்கு தலைவர் என்றால் சௌமியமூர்த்தி தொண்டமான் மட்டுமே எமக்கு சிறிய உதவிகளை வழங்கி உள்ளார். அவருக்கு நான் தலை வணங்குகின்றேன்.
இன்று மலையகத்தில் எத்தனையோ படித்தவர்கள் இருக்கின்றார்கள். ஏன் உங்களால் அரசியலுக்கு வரமுடியவில்லை, எமது குருதி அனைத்தும் தொண்டமான் குடும்பம் மட்டுமே அனுபவிக்கின்றது.
இறுதியில் தொண்டமானை நம்பாதீங்கள், இத்தனை உயிர்கள் பறிபோனதுக்கு தொண்டமான் தான் காரணம். இவன் ஒரு கொலையாளி, நம்பாதே, நம்பினால் எனக்கு வந்த நிலை ஒவ்வொரு மலையக மகனுக்கும் நடக்கும் என கண்ணீருடன் தொண்டமானுக்கு சாபம் இட்டார்.
இவரின் இந்த அழுகுரல் மலையக மக்கள் அனைவரது கண்களையும் சற்று அழ வைத்துள்ளது.
எமது மலையக உறவுகளே! நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள், இலங்கை அரசாங்கம் உங்களை இன்று வரைக்கும் அடிமை நிலைக்கு வைத்திருந்ததை இன்று உலகம் அறிந்துவிட்டது.
உங்களுக்கு எம்மால் இழந்த உறவுகளை திருப்பி தர முடியாது. இனிமேலும் சொற்ப அரசியல் லாபத்திற்காக விலை போக வேண்டாம்.
உங்கள் வாக்கு பலம் ஒரு தலை எழுத்தையே மாற்றும். படிப்பறிவு இல்லா விட்டாலும் பகுப்பறிவு போதும், உங்களின் கிராமங்களில் உங்களுக்கு உங்களோடு சேர்ந்து சேவை ஆற்றுபவர்களை தெரிவு செய்யுங்கள்.
இன்று உங்களது பலம் உங்களுக்கு புரிந்திருக்கும் இன்றும் உங்களின் உழைப்பில் தான் ஈனப் பிறவி அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்துகின்றனர்.
நீங்கள் அனுபவிக்க வேண்டிய அனைத்து சுகங்களையும் இவர்கள் அனுபவிக்கின்றனர். இவர்கள் உங்கள் சேவகர்கள், இவர்களை நீங்கள் பெரியவர்களாக ஆக்க வேண்டாம்.
இனிவரும் காலங்களில் மலையகம் என்றால் சற்று சிந்திக்க வைக்கக்கூடிய மக்களாக நீங்கள் மாற வேண்டும்.
உங்கள் பலம் உங்கள் கைகளில், தமிழன் கையோங்கும் காலம் மிக விரைவில், எமக்கான விடிவு காலம் உங்களின் ஒற்றுமையில் தான் தங்கி இருக்கின்றது.
எஸ் கே
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhv1.html
Geen opmerkingen:
Een reactie posten