[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 11:46.25 PM GMT ]
இரகசிய பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் குறித்த அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள போர்க் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளது.
போர்க் குற்றச் செயல்களில் இலங்கை ஈடுபட்டதாக விசாரணைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது என உலகத் தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது என சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், சனல்4 ஊடகவியலாளர் கெலும் மக்ரே உள்ளிட்ட பலர் இலங்கை போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் போலியான சாட்சியங்களை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், ஜெனீவாவில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்திய அரச சார்பற்ற நிறுவனத் தலைவரின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYer4.html
பிரதமர் பதவிக்கு யார் தான் ஆசை இல்லை: நிமால் சிறிபால டி சில்வா
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 02:14.50 AM GMT ]
பிரதமர் பதவிக்கு யார் தான் ஆசைப்பட மாட்டார்கள் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் பதவியை உரிய நேரத்தில் உரிய நபருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழங்குவார்.
பிரதமர் பதவிக்காக கட்சிக்குள் நாம் மோதிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. கிடைக்க வேண்டியிருந்தால் கிடைக்கும். கிடைக்கக் கூடாது என்றால் கிடைக்காது.
கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன். கிடைக்கவில்லை என்பதற்கான கவலைப்பட மாட்டேன்.
கட்சிகளை பாதுகாக்க செயற்படுபவர்கள் நாங்கள். எல்லா நேரங்களிலும் கட்சியை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்.
உண்மையிலேயே பிரதமர் பதவி குறித்த எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் இல்லை. யார்தான் பிரதமர் பதவியை வேண்டாம் என்பார்கள்.
பிரதேச சபை உறுப்பினர் கூட பிரதமராகவே விரும்புகின்றார். எனினும் எதிர்பார்ப்புக்கள் எல்லா நேரங்களிலும் வெற்றியடைவதில்லை.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை ஞாபகப்படுத்தியே நாம் மக்களிடம் வாக்கு கேட்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வெறும் பொருளாதார அபிவிருத்தியை மட்டும் ஏற்படுத்தவில்லை மனித வள மேம்பாடு, உட்கட்டுமான வசதிகளை விருத்தி செய்தல் என பல்வேறு துறைகளில் அபிவிருத்தியை ஏற்படுத்தியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYes4.html
அறுபதாவது அகவையில் பிரபாகரன்! பிறந்தநாள் கொண்டாடும் உலகத் தமிழர்கள்.
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 12:04.06 AM GMT ]
தலைவரின் பிறந்ததினத்தை புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் கேக் வெட்டி அமோகமாக கொண்டாடுகின்றனர்.
மேலும் தலைவரின் அறுபதாவது பிறந்தநாளுக்கான புதிய கவிதைகளையும், புதிய பாடல்களையும் உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYer6.html
Geen opmerkingen:
Een reactie posten