தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 november 2014

அகவை 60 காணும் ​மகா வீரனுக்கு வணக்கம்!!!

யாழ்.நல்லூர் பிள்ளையார் கோவில் வீதியில் இரவு வேளைகளில் தரித்து நிற்கும் மர்ம மோட்டார் சைக்கிள்
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 02:02.38 AM GMT ]
யாழ்.நல்லூர் தலங்காவல் பிள்ளையார் கோவில் பின் வீதியில் நீண்ட நாட்களாக இரவு வேளைகளில் தனியே நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள் தொடர்பாக அப்பகுதி மக்கள் கொடுத்த முறைப்பாட்டினடிப்படையில் கோப்பாய் பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிளை மீட்டுச் சென்றுள்ளனர்.
குறித்த ஆலயத்தின் பின் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தினசரி 7 மணி தொடக்கம் அதி காலை 3 மணிவரையில் தரித்து நிற்பதாகவும் 3மணிக்கு பின்னர் அதனை ஒருவர் எடுத்துச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த மோட்டார் சைக்கிளில் வரும் நபர் யார்? எங்கே செல்கிறார்?என்பது தொடர்பில் அறிய முடியாமலிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த மோட்டார் சைக்கிளை நேற்று இரவு 10மணியளவில் பொலிஸார் மீட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYes3.html
அகவை 60 காணும் ​மகா வீரனுக்கு வணக்கம்!!!
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 01:39.17 AM GMT ]
உலகெங்கும் எமது மாவீரர்களை நினைவு கூரும் முகமாக மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்வுகளை நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் இன்று தொடக்கி வைத்தபோது அதன் கலிபோர்னியா அங்கத்தவர் திரு விக்டர் இராஜலிங்கம் சபையில் வாசித்து வழங்கிய மடல்:-
மகா வீரனுக்கு வணக்கம்.
வேலைக்கை பிள்ளை வேலவன் உறையும் வல்வையம்பதியில்
வேலுப்பிள்ளையின் செல்லப்பிள்ளையாய் உதித்த வல்லவனே !
பார்வதி பெற்ற வீரத்திருமகனே ! பெரும் பராக்கிரமனே !
பார் போற்றும் புகழெல்லாம் உனதாக்கிய தலைவனே - வணக்கம் !

சின்னஞ்சிறு வயதினிலே ஒடி விளையாடும் பிள்ளையாக
அன்னையின் மடியினிலே துள்ளி விளையாடும் போதினிலே
என்னென்னவோ குறும்புகள் நீ செய்தபோது உன் பெற்றோர்
மன்னவனாய் நீ ஒரு நாள் வருவாயென கனாக்கண்டனரோ !

தமிழ்மொழி எம்மிடமிருந்து ஒதுக்கப்படுவதை உணர்ந்தபோது
தமிழர் தயவு தாட்ஷணியமின்றி தாக்கப்படுவதை பார்த்தபோது
தமிழ் பெண்களின் மானம் பறிபோனதை கேட்ட போது
தமிழா நீ வீ று கொண்டெழு என ஆணையிட்டாய் !

காளையர்கள் யாவரையும் போருக்கு ஒன்று சேர்த்திட்டாய் .
கன்னியர்கள் பலரையும் களத்தினிலே களமிறக்கினாய்.
கருணை உள்ளம் கொண்ட பல தமிழரிடம் நிதியும் திரட்டினாய்
சின்னாபின்னமாக்கினாய் எம் எதிரிகளை உன் திறமை கொண்டு !

போற்றிப்புகழ்ந்தனர் யாவரும் உன் வெற்றிமேல் வெற்றி கண்டு
மாற்றம் ஒன்று எம்மவர்க்கு வருமென எண்ணி மகிழ்ந்தனர்
தோற்றம் பெறுகிறது ஒரு தனி நாடு ஈழம் என்ற பெயரினிலே என
காற்றினிலே வரும் கீதங்களை பண்ணிசைத்து பாடி ஆடினார் !

பாட்டுப்பாடி மகிழ்ந்த நம் இளம் காளையரையும்
ஆட்டம் ஆடி நெகிழ்ந்த நம் இளம் கன்னியரையும்
காட்டிகொடுக்கும் நம் இனத்து கயவரின் வஞ்சனையால்
காட்டு மிருகங்கள் போல் வேட்டையாடினர் காடையர் கூட்டம்.!

காருண்யம் போதித்த காந்தியின் புண்ணிய பாரதமும்
கருணையின் வடிவாம் புத்தரின் பக்தர்கள் வாழும் சீனாவும்
அல்லாவே எல்லாம் எனத் துதி பாடும் பாகிஸ்தானும்
வல்லரசுகள் எத்தனையோ கல்மனம் கொண்டு எமைதாக்கி அழித்தனர்.!

கண்ணன் மகாபாரதத்தில் திரௌபதை கதறியபோது காத்தருளினானாம் !
கண்ணகியை துதிக்கும் மண்ணிலே தமிழ்பெண்கள் கதறி பதறித்துடித்தபோது
கண்ணனும் வரவில்லை! கண்ணகியும் வரவில்லை! கர்த்தரும் வரவில்லை!
எண்ணியபடி பந்தாடினர் கண்ணியமானோர் பலரும் கண் மூடியிருந்த்தினால்!

மறுபடியும் நீ வருவாய் சீறிக்கொண்டு எமைக்காக்க
வீறு கொண்டு எழ வைப்பாய் எழுச்சியின் திருவுருவாய்
மாறும் நம் எதிர்காலம் நம்மக்களுக்கிதமாகவே என
மாற்றுக்கருத்தின்றி உறுதியாய் கூறுகின்​றேன் ​எம் ஈழத்தமிழருக்கு !
http://www.tamilwin.com/show-RUmszBRaKYes2.html

Geen opmerkingen:

Een reactie posten