தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 november 2014

மைத்திரிபாலவை நேரில் கண்ட மகிந்த உரத்துக் கத்தினார்….

வீதிகளில் கார்த்திகைப் பூக்கள்! ஆமியின் கெடுபிடி அதிகரிப்பு!

இந்நிலையில் விடுதலைப் புலிகள் தேசிய மலராகப் பிரகடனப்படுத்திய கார்த்திகைப் பூக்கள் இன்று மதியம் நெடுந்தீவின் முதலாம்,இரண்டாம் வட்டாரப் பகுதிகளின் வீதிகள், பொது இடங்களில் பரவலாக வைக்கப்பட்டன. போத்தல்களில் வைக்கப்பட்டே கார்த்திகைப் பூக்கள் காணப்பட்டன. இதையடுத்து அங்கு வந்த கடற்படையினர் அவற்றை எடுததுச் சென்றனர். அத்துடன் அப்பகுதிகளில் பாதுகாப்புக் கெடுபிடிகளையும் அதிகரித்துள்ளனர். ரோந்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டன.
http://www.jvpnews.com/srilanka/88027.html

விடியும் காலங்களில் நல்ல விளையாட்டுக்களாம் மைத்திரி….

எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பண்டாரநாயக்க ஜனன தினமான டிசம்பர் 8ம் திகதி நடைபெறும் தேர்தலில் வெற்றிபெற்று பண்டாரநாயக்க வழியில் செயற்படவுள்ளதாகவும் சமாதிக்கு அருகில் நின்று மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்தார்.
சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் 17 வயது இளைஞனாக வாக்குபலம் இன்றி இருந்த காலத்திலேயே தனக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்புரிமை கிடைத்ததாகவும் கட்சியில் தனக்கு 47 வருடகால அனுபவம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்ட தலைவர்கள், குழுக்கள் விடுத்த அழைப்பின் பேரில் பொது வேட்பாளராக போட்டியிட தான் முன்வந்தமை நாட்டின் தேசிய எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்யவே என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
தான் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது வேறு கட்சியுடன் இணையவில்லை என்றும் பொது வேட்பாளராக பொது எதிரணியில் போட்டியிடுவதாகவும் கூட்டணி அரசியல் தனக்குப் புதிதல்ல எனவும் அவர் கூறினார்.
தன்னோடு இணைவதாகக் கூறிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கே என்று சிலர் கேள்வி எழுப்பி வருவதாகவும் ´விடியும் போது நல்ல நல்ல விளையாட்டுக்களை காண முடியும்´ என்றே அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளதெனவும் நடக்க வேண்டியவை சரியான நேரத்திற்கு நடைபெறும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/88033.html

மைத்திரிபாலவை நேரில் கண்ட மகிந்த உரத்துக் கத்தினார்….

மகிந்தர் நேபாளம் புறப்பட முன்னர் அவரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிததை முறைப்படி கொடுக்க மைத்திரிபால முனைந்துள்ளார். அவரைக் கண்டதும் மேசையில் அமர்ந்திருந்த ராஜபக்ஷ கோபமாக எழுந்து, வே…. மனனே என்னை அழிக்கவேண்டும் என்று புறப்பட்டாயா ? வாடா வந்து இங்கே ஒளிந்துகொள்ளு என்று காட்டக்கூடாத இடத்தைக் காட்டி திட்டியுள்ளார்.
இதனை பார்த்து மிரண்டுபோன மகிந்தரின் காவலாளிகள் , நீங்கள் இங்கே நின்றால் ஏதாவது விபரீதமாக ஆகிவிடும் என்று சொல்லி மைதிரிபாலவை வெளியே அழைத்துச் சென்றுள்ளார்கள். கடிதத்தை வாங்கி விட்டு, மைதிரிபாலவை அவர்கள் அனுப்பியுள்ளார்கள்.
கடிதத்தை கொண்டுபோய் காவலாளிகள் கொடுத்து அதனைப் பாராமல் அப்படியே குப்பை தொட்டியில் வீசியுள்ளார் மகிந்தர் என்ற செய்திகளும் சிங்கள இணையம் ஊடாக வெளியே கசிந்துள்ளது. அதன் பின்னரே அவர் நேபாளம் கிளம்பிச் சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/88030.html

Geen opmerkingen:

Een reactie posten