[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 11:31.28 AM GMT ]
முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள இந்த யோசனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைக்கு அமைய முன்வைக்கப்பட்ட யோசனை எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் அரசாங்கம் இப்படியான யோசனை தொடர்பில் எந்த விதத்திலும் இணங்க கூடாது எனவும் முஸ்ஸாமில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXgp0.html
மகிந்தவின் மூன்றாம் தவணை: சட்டத்தரணிகள் சங்கத்தின் வாதத்தை ஏற்க உயர்நீதிமன்றம் சம்மதம்
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 12:02.47 PM GMT ]
வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு முன்னர் சட்டத்தரணிகள் சங்கம் நீதிமன்ற பதிவாளரிடம் இதனை சமர்ப்பிக்கும் நீதிமன்றம் சங்கத்தின் உறுப்பினர்களிடம் கூறியுள்ளது.
மூன்றாவது முறையாக போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி உயர்நீதிமன்றத்தின் கருத்து கேட்டுள்ளதுடன் நீதிமன்றத்தின் கருத்து எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் தெரியப்படுத்தப்படும்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு முன்னர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த பிரச்சினை தொடர்பான எழுதப்பட்ட வாதத்தை சமர்பிக்க முடியும் என உயர்நீதிமன்ற பதிவாளர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXgp1.html
மலையக மக்களின் இறப்பு தமிழர்களை அரசாங்கம் பாரபட்சமாக நடத்தும் செய்தியை உலகிற்கு பறைசாற்றியுள்ளது
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 12:12.24 PM GMT ]
மலையக பதுளை மாவட்டத்தில் கொஸ்லாந்தை – மீரியத்த எனும் தோட்ட கிராமத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு, மக்கள் இறப்பு தியாகம் ஆனது மலையக மக்களின் வீடில்லாப் பிரச்சினையையும் அம்மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளையும் உலகிற்கு எடுத்துக்காட்டியதுடன், வடக்கு, கிழக்கு, மேலகம், மலையகம் என பிரதேச வாதம் பேசும் அரசியல்வாதிகளின் கனவை தவிடு பொடியாக்கியதுடன் எங்கு வாழ்ந்த தமிழர்களையும் அரசு அரவணைப்பதில்லை, கண்டு கொள்வதில்லை என்ற செய்தியையும் உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளதுடன் வாழும் மக்களுக்கான சுபீட்சத்திற்கான பாதையையும் திறந்துள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், வீடமைப்பு நிலையியல் குழுத் தலைவருமான சி. பாஸ்கரா தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இறந்த மக்களின் இழப்பு என்பது எவ்விதத்திலும் ஈடுசெய்ய முடியாதொன்றாகக் காணப்பட்டாலும் கூட சுமார் 200 வருடங்கள் மலையகத்தை வளமாக்கிய மக்கள் இன்றும் சொந்த வீடில்லாமலும், வளமற்றும் இருக்கும் இந்தச் செய்தியை இலங்கையில் வாழும் சகலருக்கும் புரியவைத்ததுடன் உலகிற்கும் இம்மலையக மக்களிற்கு வீடில்லா பாரிய பிரச்சினை ஒன்று உள்ளது என்ற செய்தியையும் உலகிற்கு தெளிவுபடுத்தியதுடன், உலக நாடுகளை மலையக பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இந்தவேளை சுமார் 200 வருடங்களாக வறுமையிலும் ஏழ்மையிலும் இலங்கை தேசிய வருமானத்திற்கு கடுமையாக உழைத்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் சொந்த இருப்பிடத்தை உறுதி செய்யவும் வேண்டிய நேரம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையினை பயன்படுத்தி கட்சி வேறுபாடுகள் இன்றியும் சொந்த அரசியல் இலாபத்தை புறந்தள்ளியும் உழைக்க வேண்டிய நேரம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதற்கு சகல அரசியல் பொதுநிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இந்த அனர்த்தத்தினால் வடக்கு கிழக்கு மேலகத்தைச் சார்ந்த சகல பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண, மாநகர சபை உறுப்பினர்களும் அதேவேளை அரசுடன் இணைந்திருக்கும் மலையகத்தைச் சார்ந்த மலையக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் தேசிய சங்க பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபட்டுச் சென்று பார்வையிட்டதுடன் அம்மக்கள் மீதான சுமைகள், வீடில்லாப் பிரச்சினை இலங்கையிலும் உலகிலும் எடுத்தியம்பப்படும் என்ற கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர்களின் கருத்தானது வடக்கு கிழக்கு மேலகம் மலையகம் என பிரதேச வாதம் பேசி அரசியல் நடத்துபவர்களுக்கு பேரடியாகவும் அவர்களின் கனவை தவிடு பொடியாகவும் ஆக்கியுள்ளது.
இதன் தாக்கம் தான் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறீதரன் ஆகியோர் மக்களிடம் நீங்கள் விரும்பி வடக்குக்கு வரும் இடத்து உங்களுக்கு நிலம் ஒதுக்கி தரப்படும் என்ற கருத்துக்கும், அமரர் மதிப்பிற்குரிய சௌமிய மூர்த்தி தொண்டமானின் தமிழர் ஒற்றுமை நிலைப்பாட்டிற்கும் எதிராக பேரன் மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமான் தெரிவித்த கருத்தான முதலில் வடக்கு மக்களுக்கு நிலத்தை பெற்றுக்கொடுக்கட்டும் என்ற சொற்பிரயோகம் ஆனது அரசுக்கு துதிபாடும் செய்தியாகவும் வடக்கு கிழக்கு நிலப்பிரச்சினையின் தெளிவின்மையையும் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் தமிழர் ஒற்றுமை நிலைப்பாட்டை புறந்தள்ளுவதாகவும் அமைந்துள்ளது.
ஏனெனில் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் வடக்கு கிழக்கு மெலகம் இணைந்த தமிழர் ஒற்றுமை நிலைப்பாட்டையும் தமிழருக்கு என்று ஒரு பிரச்சனை வரும் போது அப்பிரச்சனை சார்பாக தமிழர் ஒற்றுமையை நிலைநாட்டியவர் அமரர் அதேவேளை 1983 கலவரத்தின் பின் 1984ம் ஆண்டுப் பகுதியில் வடக்கில் குடியேற்றப்பட்ட மலையக மக்களின் இருப்புக்களை ஏற்றுக்கொண்டு தமிழர் ஒற்றுமையாக எங்கு என்றாலும் வாழவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவர். மேலும் வடக்கு கிழக்கு மக்களின் உரிமைப் போராட்டத்தின் பின் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட சொந்த மக்களின் சொந்த நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்துள்ளதை எதிர்த்து அந்த நிலத்தை மீளப்பெற வேண்டிய போராட்டமாகவே அங்கு காணப்படுகிறது.
அந்த நிலங்களில் இராணுவம் குடிகொண்டுள்ளது. எதிர்க் கட்சியாக இருந்து கொண்டு அகிம்சைப் போராட்டத்தினாலும் உலகிற்கு எடுத்தியம்பியும் மக்கள் சொந்த நிலங்கைளைப் பெற்றுக்கொடுக்க முயல்கின்றனர் கூட்டமைப்பினர். ஆனால் அரசுடன் அரியாசனத்தின் அமர்ந்திருக்கும் செந்தில் தொண்டமானின் கட்சியானது இன்று வரை வீட்டுப் பிரச்சனையை தீர்ப்பதற்கு முயற்சி எடுக்கவில்லை. இப்போதுதான் அதற்கான முயற்சி மேற்கொள்வதாக கூறுகின்றது.
இது மலையக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல் அவர்களின் வாக்கு வங்கியில் வாழ்ந்த அரசியல் வாழ்க்கைக்கு விழுந்த அடியின் பிரதிபலிப்பே செந்தில் தொண்டமானின் கருத்தாக காணமுயல்கின்றோம். எனிவரும் காலங்களில் அரசியல் பிறழ்வுகளை புறந்தள்ளி தமிழர் உரிமைக்காக தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையாக குரல்கொடுக்கும் சூழல் உருவாகவேண்டிய சூழ்நிலையை இந்த மண்சரி அணர்த்த இறந்த மக்களின் தியாகம் உருவாக்கி உள்ளது.
மேலும் தமிழர் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்கள் கவனிக்கப்படுவதில்லை தமிழர் வாழ்வாதாரம் மதிக்கப்படுவதில்லை என்ற செய்தியையும் இந்த மண்சரிவு மக்களின் இறப்புத் தியாகம் மூலம் வெளிக்கொண்டுவந்துள்ளது.
ஏனெனில் அரச அமைச்சர் ஒருவரின் கருத்தான 2012ம் ஆண்டு இந்த இடம் அபாய கரமான மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றாதானது இதன்பின்பு இந்த மக்களை இந்த இடத்தில் இருந்து அகற்ற முயற்சிக்காதது ஏன்? இவர்கள் இந்த நாட்டு மக்கள் இல்லையா? என்ற வினாவுக்கு வழிமைத்துள்ளது.
இதேபோல் சுனாமிக்குப் பின் சுனாமி எச்சரிக்கை வந்த நேரங்களில் இராணுவப் பொலிசாரின் உதவியுடன் தென்மாகாணமான காலி, அம்பாந்தோட்டைப் பகுதிகளில் மக்களை வெளியேற்றியமை நாம் அறிந்தது அது வரவேற்கக் கூடிய விடயம் இதேபோல் ஏன் இம் மலையக மக்களை வெளியேற்றவில்லை? என்ற கேள்வி மூலம் தமிழர் என்றால் அவர்கள் புறந்தள்ளப்பட்டவர்கள் என்ற அரசின் நிலைப்பாட்டை தெளிவாக்குகின்றது.
ஏனெனில் வடகிழக்கில் நடந்த போரின் போது சொந்த நாட்டு தமிழ் மக்களை லட்சக்கணக்கில் கொல்லப்பட்டதும் மண்சரிவு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டும் கூட இத் தமிழ் மக்களை கவனிக்காமல் விட்டு இறப்பதற்கு வழிசமைத்ததும் உலகிற்கு தமிழ் மக்கள் அரசால் பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்கள் என்ற செய்தி இம்மக்களின் தியாக இறப்பு வழிசமைத்துள்ளது என்றார் பாஸ்க்கரா.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXgp2.html
Geen opmerkingen:
Een reactie posten