தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 november 2014

நிலம் இல்லாத மக்களுக்கு அபிவிருத்தி எதற்காக? பாராளுமன்றில் அரியம் எம்.பி கேள்வி

நாட்டில் பயங்கரவாதத்திற்கு இனி இடமில்லை: ஜனாதிபதி மஹிந்த
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 03:30.49 AM GMT ]
நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்திற்கு இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் படைவீரர்களுக்கான வீடமைப்புத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வு ஆனமடுவ ரத்துஉஸ்வௌ ரதனபால மகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றது.
போர் வெற்றி ஈட்ட முயற்சித்த போது சிலர் அதனை நிறுத்தினர். எங்களுக்கும் அவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.
மக்களின் எதிர்காலமா? சிறுவர்களின் எதிர்காலமா? வாழ்வதற்கான உரிமையை வழங்குவதா? அல்லது அழுத்தங்களுக்கு அடிபணிந்து காலம் முழுவதிலும் மரண பீதியில் வாழ்வதா என்பதனை தீர்மானிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
நாட்டை துண்டு துண்டுகளாக பிளவடைய இடம் கொடுப்பதா இல்லையா என்பதனை தீர்மானிக்க நேரிட்டது.
நாம் அந்த தீர்மானத்தை எடுத்தோம்.
நாட்டை மீட்டுக்கொடுத்த படைவீரர்களின் சேவையை பாராட்டுவதற்கு எமக்கு சக்தியிருக்க வேண்டும்.
நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXio3.html

அதிருப்தி காரணமாக சோபித தேரர் வெளிநாடு சென்றாரா?
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 03:09.46 AM GMT ]
அதிருப்தி காரணமாக மாதுளுவாவே சோபித தேரர் வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆறு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சோபித தேரர் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சோபித தேரர் அண்மை காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.
இந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனவும் இதனால் சோபித தேரர் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய விஜயத்தின் பின்னர் சோபித தேரரர் கடுமையான அரசியல் தீர்மானங்களை எடுக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரம் 5ம் திகதி சோபித தேரர் இலங்கை திரும்பவுள்ளார். என்ன காரணத்திற்காக சோபித தேரர் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ரணில் விக்ரமசிங்கவை விடவும் வேறு ஓர் வேட்பாளரை பொது வேட்பாளராக களமிறக்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்கும் நோக்கில் சோபித தேரர் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXio2.html

நிலம் இல்லாத மக்களுக்கு அபிவிருத்தி எதற்காக? பாராளுமன்றில் அரியம் எம்.பி கேள்வி
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 02:24.14 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2011, 2012 ஆம் ஆண்டுகளில் பட்டம் முடித்த 350க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இற்றைவரைக்கும் தொழில் வாய்ப்பின்றி வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.
பாராளுமன்றில் வரவு- செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த நாட்டின் ஜனாதிபதி வேலையற்ற பட்டதாரிகள் 50000 பேருக்கு வேலை வழங்கியதாக பெருமிதமாக கூறுகின்றார். அதனை நாம் முழுதாக வரவேற்கின்றோம்.
ஆனால் இன்னும் வடகிழக்கு மாகாணத்தில் பல பட்டதாரிகள் இன்னும் வேலையற்று இருக்கின்றார்கள் என்பதனையும் ஜனாதிபதி கவனத்தில் கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டுகளில் உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளில் 120 பேர் விடுபட்டிருக்கின்றார்கள்.
பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட தொழிற்சங்க போராட்டத்தால் இவர்களது பரீட்சை பெறுபேறுகள் தாமதமாக வெளியிடப்பட்டமையே இதற்கான காரணம்.
பொது நிருவாக அமைச்சுக்கு வேலையற்ற பட்டதாரிகளினால் 12 தடவைகளுக்கு மேல் எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டும் இதுவரையும் எந்த விமான நடவடிக்கைகளும் அமைச்சினால் எடுக்கப்படவில்லை.
மாறாக நேர்முக பரீட்சைக்கான கடிதங்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் 2014.4.29 ஆம் திகதி அனுப்பப்பட்டு, நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
அங்கு சென்றவேளை அங்குள்ள விளம்பரப் பலகையில் நேர்முகப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மனமுடைந்த பட்டதாரி மாணவர்கள் மன உளச்சலுக்கும் ஆளாக்கப்பட்டு ஏமாற்றமும் அடைந்தார்கள்.
இதேபோன்று இந்த மாவட்டத்தில் 2012ஆம் ஆண்டு 2012.3.30 ஆம் திகதிக்குள் பட்டம் முடித்த பட்டதாரிகளுக்கும் இதுவரைக்கும் இன்னும் வேலை வழங்கப்படவில்லை.
ஆனால் அதே ஆண்டிற்குள் பட்டம் முடித்தவர்கள் இன்று வேலை செய்து கொண்டிருக்க 350 பேருக்கும் அதிகமானோர் வேலையற்று விரக்தியின் விளிம்பில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
இதன்காரணமாக 2 பேர் தற்கொலைக்கு முயற்சித்து இறுதியில் தெய்வாதீனமாக உயிர்தப்பிய வரலாறுகளும் உண்டு.
இவர்களினது வயது அதிகரித்துச் செல்வதன் காரணமாக எதிர்காலத்தில் எமது வாழ்க்கை எவ்வாறு அமையும் என்ற வினாவுடன் பட்டதாரிகள் இன்று மனக்கவலையுடன் வாழ்ந்து கொண்டிருக்கினறார்கள்.
இந்த நாட்டிலே பொருளாதார அபிவிருத்தி என்று மார்பு தட்டும் அரசாங்கம், மட்டக்களப்பு மாவட்டத்தில் படந்த 7 வருடங்களுக்குள் 70883 பில்லியன் நிதி அபிவிருத்திக்கென்று செலவிடப்பட்டதாக கூறுகின்றது.
ஆனால் 7 வருடங்களுக்குள் மட்டக்களப்பு மாட்டத்தில் மாத்திரம் 33600 மில்லியன் ரூபா மதுபானத்திற்கு மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு மே 19ஆம் திகதிக்குப்பின் இருந்து இற்றைவரைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மொத்தக் காணியில் இருந்து 145885 ஏக்கர் நிலம் அரசாங்கத்தினால் சூறையாடப்பட்டிருக்கின்றது.
இது எவ்வாறெனில் சிங்களக் குடியேற்றத்திற்கு 5030 ஏக்கர் காணியும், அத்துமீறிய பயிர்ச்செய்கைக்கு 8576 ஏக்கரும், புதிய விகாரை அமைப்பதற்கு 84 ஏக்கரும், கரும்புச் செய்கைக்கு 9920 ஏக்கரும், அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின் படி நன்கு திட்டமிட்ட முறையில் சுசில் பிறேமச்சந்திர அவர்களினால் 122263 ஏக்கர் புதிதாக 54 இராணுவ முகாங்கள் அமைப்பதற்கென 650 ஏக்கர் காணியும் மட்டக்களப்பில் இருந்து அரசாங்கத்தினால் அபகரிக்கப்பட்டிருக்கின்றது.
இதுதான் இவர்கள் கூறும் அபிவிருத்தியா? நிலம் இல்லாத மக்களுக்கு அபிவிருத்தி எதற்காக? நில ஆக்கிரமிப்பினை தடுத்து நிறுத்த அரசாங்கம் எதிர்காலத்தில் என்ன வகையான நடவடிக்கைகளை எடுக்கப் கோகின்றது எனவும் கேள்வி எழுப்பினார்.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXioz.html

Geen opmerkingen:

Een reactie posten