இன்று பல்வேறு பட்ட பணிகளில் தமிழர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் போர்க்குற்ற விசாரணை மற்றும் இலங்கை அரசிற்கு எதிராக அநீதி எல்லாம் இளைக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதியை சுவிஸ் வாழ் தமிழர் ஒருவர் சந்தித்தமை மிகவும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா கூட்டத் தொடர் காலத்திலும் இலங்கை அரசிற்காக பரப்புரையில் ஈடுபட்டு வரும் இவரின் செயல் கண்டு தமிழ் இனம் வெட்கித் தலை குணிந்துள்ளது.
பல்வேறுபட்ட சூழல்களில் இலங்கை அரசு தமிழ் இனத்தை அழித்து வரும் நிலை சர்வதேசத்தாலே உண்ணிப்பாக அவதானிக்கப் படும் நிலையில் இப்படிப்பட்டவர்கின் செயற்பாடு தமிழ் மக்கள் மத்தில் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் வெளிப்படையாக செயற்பட்டு வருகிறார் பல தமிழர்கள் இருட்டில் மகிந்தவுடன் சமரசம் யாரிடம் தமிழர் நிதி கேட்பது தமிழரின் பலத்திற்கும் பலவீனத்திற்கும் இது நல்ல உதாரணம்
கடந்த இருவாரங்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச இத்தாலிக்கு விஜயம் செய்திருந்தமை யாவரும் அறிந்திருந்தது. ஆனால் மஹிந்த ரோமில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த தமிழர் ஒருவரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டிருந்தமை வெளிவராத செய்தி.
புலிகளின் முன்னாள் தீவிர ஆதரவாளரும் அவ்வியக்கத்தின் சட்டவிரோத பணபரிமாற்ற ஆலோசகர் அல்லது கலையை கற்பித்த ஆசான் என அறியப்படுகின்ற நபர் ஒருவராலேயே மஹிந்த பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டிருக்கின்றார்.
ஈசன் என அழைக்கப்படுகின்ற தர்மலிங்கம் லோகேஸ்வரன் என்ற நபர் இந்து-பௌத்த சங்கம் எனும் அமைப்பு ஒன்றின் தலைவராவார். இவரே மஹிந்தவிற்கு ரோமில் பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளார்.
மஹிந்தவிற்கு பொன்னாடை போற்றக்கிடைத்தமையை பெரும்பாக்கியமாக கருகின்றார் ஈசன். இது தொடர்பில் ஈசன்; கூறுகையில் : புலிகளின் கொடும்பிடியில் இருந்து தமிழ் மக்களை மீட்டுத்தந்த ஜனாதிபதி என்றும் போற்றத்தக்கவர் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten