தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 november 2014

லண்டனில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் கூட்டம் 500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ...

லண்டனில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின், ஆசிரியர் பயிற்சிச் செயலமர்வில் 70 க்கு மேற்பட்ட பள்ளிகளிருந்து 500 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர் என அதிர்வு இணையம் அறிகிறது. இந்த ஆசிரியர் பயிற்சிப் பட்டறை இன்று (01.11.14 சனிக்கிழமை ) Canons high school Harrow இல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன் நிகழ்வில் சிங்கப்பூரில் இருந்து முனைவர் பேராசியர் சிவகுமாரனும் ஜெர்மனி , பிரான்ஸ் , பிரித்தானியாவிருந்து துறைசார் விரிவுரையாளர்களும் ஆசிரியர்களுக்கான பயிற்சியை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இப் பயிற்சிக்கான பாடத்திட்டத்தை 14 நாடுகளில் 40,000 க்கு மேற்பட்ட மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புகைப்படங்கள் இணைப்பு !
http://www.athirvu.com/newsdetail/1351.html

Geen opmerkingen:

Een reactie posten