மங்கள சமரவீர ஐ.தே.க.விலிருந்து விலகத் தீர்மானம்! அரசியலுக்கு முழுக்கு?- ஐ.தே.க முக்கிய தலைவர்கள் கட்சி மாற தீர்மானம்
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 04:14.56 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க.வின் ஆதரவோடு பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக அவர் கடுமையாக போராடியிருந்தார். அதன் ஊடாகவே மஹிந்த ராஜபக்ஷவின் அராஜகத்துக்கு முடிவு கட்ட முடியும் என்பது மங்களவின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.
எனினும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தானே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து பொது வேட்பாளர் விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.
எனினும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிட்டால் ஐ.தே.க.வின் தோல்வி உறுதி என்பது மாத்திரமன்றி கட்சியின் தலைமைப் பதவியும் ரணிலிடமிருந்து பறிபோய் விடும் என்று மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அவ்வாறான ஒரு நிலை ஏற்படும் பட்சத்தில் கட்சித் தலைமைப்பொறுப்புக்கு சஜித் பிரேமதாச வரும் வாய்ப்பிருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் மங்கள சமரவீர தான் தொடர்ந்தும் ஐ.தே.க.வில் இருப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகின்றது. இதனையடுத்து அவர் கட்சியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.
அதன் பின்னர் அவர் ஆளுங்கட்சியுடன் இணைவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மங்கள சமரவீரவை ஆளும் கட்சிக்கு இழுத்து வந்து முக்கிய அமைச்சுப் பதவியை வழங்கவும் ஆளுங்கட்சி தயாராக உள்ளது. எனினும் அவ்வாறு ஆளுங்கட்சியில் இணையும் பட்சத்திலும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பெடுப்பதில்லை என்று மங்கள சமரவீர முடிவெடுத்துள்ளார்.
அவ்வாறில்லாத பட்சத்தில் அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிடவும் அவர் முடிவெடுத்துள்ளார்.
அதே நேரத்தில் சர்வதேச அமைப்பொன்றின் முக்கிய பதவியொன்றும் மங்கள சமரவீரவுக்கு காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறாக இருந்தாலும் எதிர்வரும் நாட்களில் அவர் முக்கியமான முடிவொன்றை எடுப்பது உறுதி என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆளுங்கட்சிக்குத் தாவும் தீர்மானம்
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் ஆளுங்கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அரசாங்கத்தரப்புடன் அவர்கள் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கொழும்பு டுடே செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
லக்ஷமண் கிரியெல்ல, ரவி கருணாநாயக்க, விஜேதாச ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு கட்சி தாவும் தீர்மானத்தில் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது , சஜித் பிரேமதாசவின் ஆதிக்கம் கட்சியில் அதிகரித்து வருவது ஆகிய விடயங்களை முன்னிட்டு இவர்கள் கட்சியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் மேலும் தெரிய வந்துள்ளது.
எனினும் லக்ஷமண் கிரியெல்ல தான் கட்சி மாறப்போவதாக வெளியாகியுள்ள தகவல்களை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXhw4.html
இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் பட்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றது
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 04:06.03 AM GMT ]
பாடசாலைக்கல்வி முறையிலும் பெற்றோரிடமும் மாணவர்களிடமும் பணம் அறவிடப்படுவதாக அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் நஜித் இந்திக்க இது தொடர்பில் கருத்துரைக்கையில்,
றுகுணு பல்கலைக்கழகத்தில் பட்டங்கங்கள் 67ஆயிரம் ரூபாவுக் விற்பனை செய்யப்பட்டுள்ளன .
முகாமைத்துவ பட்டங்கள் 3லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ரஜரட்டையில் முகாமைத்துவ பட்டம் 150000 ரூபாவுக்கு,இசை நடன பட்டம் 81ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
களனியில் பட்டங்கள் 75ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் பட்டங்கள் 5லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
பேராதெனியவில் பட்டங்கள் 3லட்சத்துக்கு விற்பனை செய்யயப்படுகின்றன என்றும் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXhw3.html
Geen opmerkingen:
Een reactie posten