ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடித்தடை நடைமுறைப்படுத்தப்பட்டால், தாம் வருமானம் மற்றும் தொழில் என்பவற்றை இழக்க நேரிடும் என்று இலங்கை மீனவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்
வவுனியாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மீனவ சங்க பிரதிநிதிகள் இந்த கருத்தை வெளியிட்டனர்.
இந்த தடையினால் இலங்கைக்கு 13 பில்லியன் ரூபாய்கள் நஷ்டமேற்படும். அத்துடன் 30 ஆயிரம் பேர் தமது தொழில்களை இழப்பர் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
இந்தநிலையில் நிலைமையை சரி செய்வதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க தலைவர் ஹேர்மன் குமார குற்றம் சுமத்தினார்.
இலங்கையின் பாரிய கப்பல்கள் தற்போது இந்து சமுத்திரத்தில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி மீன்பிடியில் ஈடுபடுகின்றன.
இதன் காரணமாகவே இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மீன்பிடித்தடையை அறிவித்துள்ளது என்று ஐரோப்பிய சங்க பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXhw5.html
Geen opmerkingen:
Een reactie posten