வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வதாக கூறுவோரிடம் பணம் கொடுத்து இலங்கை அகதிகள் ஏமாற வேண்டாம் என்று தமிழக கடலோர காவற்படை அதிகாரி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். மதுரை அருகே உள்ள ஆனையூர் இலங்கை அகதிகள் முகாமிற்கு சென்று அங்குள்ள அகதிகளிடம் கலந்துரையாடிய போது அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறியதாவது,
தமிழகத்தில் 113 அகதிகள் முகாம்கள் உள்ளன. இங்கிருந்து கடல் வழியாக சட்டத்துக்கு புறம்பான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல சில அகதிகள் முயற்சி மேற்கொள்வதாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன. கடந்த 2012ஆ ம் ஆண்டில் இலங்கையில் இருந்து படகில் அவுஸ்திரேலியா சென்ற 40 பேரும் கடந்த ஆண்டு நாகை பகுதி வழியாக சென்ற 60 பேரும் கடலில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்டனர்.
தமிழக கடலோர காவற்படை பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால் கர்நாடகம் மங்களூரு மற்றும் ஆந்திர காக்கிநாடா ஆகிய பகுதிகளில் இருந்து அகதிகள் அவுஸ்திரேலிய பகுதியில் உள்ள தீவுக்கு செல்ல முயன்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
ஆகவே சட்டவிரோதமாக கடல் பயணத்தில் உள்ள ஆபத்தையும், வெளிநாடுகளுக்கு செல்லும் ஆசையில் ஏமாற்றுவோரிடம் பணத்தை இழந்து விடாதவாறும் அகதிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.
http://www.jvpnews.com/srilanka/85920.html
Geen opmerkingen:
Een reactie posten