தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 november 2014

மஹிந்தவுக்கு கடும் கண்டனம் - தமிழகத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!



அரசாங்கத்துக்கு எதிராக மும்முனைத் தாக்குதல்! அமைச்சர் விமல் வீரவன்ச
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 05:24.54 AM GMT ]
அரசாங்கத்துக்கு எதிராக மும்முனைத் தாக்குதலுக்கான தயார்படுத்தல்கள் நடைபெறுவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
வரவு-செலவுத்திட்டம் தொடர்பாக நேற்று கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக மும்முனைத் தாக்குதல் ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி ஒருபுறம், ஜே.வி.பி.யின் இடதுசாரித் தாக்குதல் ஒருபுறம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இனவாதத் தாக்குதல் ஒரு புறம் என்று மும்முனைத் தாக்குதல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால் இவை எல்லாவற்றையும் விட பொதுமக்கள் மத்தியிலிருந்து எழும் எதிர்ப்புச் சுனாமியில் ஐ.தே.க. விரைவில் அடித்துச் செல்லப்பட்டு விடும். எதிர்க்கட்சிகளின் அரசியல் பலவீனம் இந்த வரவு செலவுத்திட்டத்திலேயே வெளிப்பட்டு விட்டது.
ஜனாதிபதியின் அரசியல் ஆளுமைக்கு முன்னால் எதிர்க்கட்சிகள் இனியும் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியாது. வாக்குகளைக் குறிவைத்து அளிக்கப்பட்ட லஞ்சம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினாலும் வரவு செலவுத்திட்டத்தின் சாதகம் குறித்து பொதுமக்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXio5.html

பதுளை மக்களுக்கு சுவிஸ் முனைப்பு நிறுவனத்தின் ஊடாக மனித நேய உதவிகள்!
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 05:15.28 AM GMT ]
சுவிஸ் நாட்டை தளமாக கொண்டு இயங்கும் முனைப்பு நிறுவனம் அனர்த்த நேர உதவித் திட்டத்தின்கீழ் பதுளை மாவட்டத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு தேவையான ஒரு தொகுதி அத்தியாவசிய உலர் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை நேற்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ் எம்.சார்ள்ஸிடம் கைகயளித்தனர்.
முனைப்பு அமைப்பின் சார்பில் செங்கலடி மத்திய கல்லூரி அதிபர் கு.அருணாசலம், ஓய்வு பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் பா.இன்பராஐா ஆகியோர் பொருட்களை கையளித்தனர்.
மாவட்டச் செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில், பதுளை மாவட்டத்தில் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிக்கு வெள்ளிக்கிழமை முதல் பொது மக்கள், நலன் விரும்பிகள் மூலம் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அதே நேரம், மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களிலும் நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை பதுளை மாவட்டத்தில் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களில் தாய், தந்தையரை இழந்து தவிக்கும் பிள்ளைகளின் எதிர்கால வாழ்விற்கு சுபீட்சம் அளிக்கவும், அவர்களின் எதிர்கால வாழ்விற்கு பங்களிக்கவும் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தினால் குறித்த பிள்ளைகளுக்கான வங்கிச் சேமிப்புக் கணக்குகள் ஆரம்பித்து வழங்கப்படவிருக்கின்றது.
இந்த முயற்சியில் நீங்களும் பங்குதாரர்களாகி உங்கள் நற்கரத்தின் பங்களிப்புகளையும் அத்தகைய பிள்ளைகளுக்கு வழங்கிவைக்க நல்லிதயங்களாக எம்முடன் ஒன்றிணைய உங்களையும் பெருமையுடன் அழைக்கின்றோம்.
இப்பிள்ளைகளுக்காக எம்மால் வழங்கப்பட்ட சேமிப்புக் கணக்குகளின் இலக்கங்கள் மற்றும் வங்கிகளின் விபரங்கள் அடங்கலாக மாவட்ட உத்தியோகபூர்வ தளத்தில் வெகுவிரையில் வெளியிடப்படும் என்பதை தயவுடன் அறியத் தருகின்றோம் என்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXio4.html

மஹிந்தவுக்கு கடும் கண்டனம் - தமிழகத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 06:19.19 AM GMT ]
தமிழக மீனவர்கள் ஐவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழக மீனவர்கள் இன்று முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில், தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தமையை அடுத்து தமிழகம் எங்கும் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் மாத்திரம் 1500 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, இந்த 5 மாவட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நாகையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மீன் பிடிக்கச் சென்ற அப்பாவி மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்த இலங்கை அரசுக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும். மீனவர்கள் அச்சமின்றி தொழில் செய்ய உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது, மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவது.
இந்த போராட்டம் பயனளிக்காவிட்டால் அடுத்தடுத்து ரயில் மறியல் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்துவது என முடிவு செய்தனர்.
அதன்படி இன்று 5 மாவட்ட மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXio6.html

Geen opmerkingen:

Een reactie posten