[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 07:57.43 AM GMT ]
ஜனாதிபதியின் ஆலோசகரான பிக்கு ஒருவருக்கு இது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
புலனாய்வுப் பிரிவின் ஆய்வுக்கு அமைய ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு 44 லட்சம் முதல் 46 லட்சம் வாக்குகளே கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
எனினும் ஜனாதிபதிக்கு புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய இறுதியறிக்கையில் தேர்தலில் கிடைக்கும் வாக்கு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
எனினும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து சம்பந்தப்பட்ட பிக்குவிற்கு அறிய கிடைக்கவில்லை.
இதனிடையே வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் புலனாய்வுப் பிரிவினர் மற்றுமொரு அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதுடன் அந்த அறிக்கைக்கு அமையவே ஜனாதிபதித் தேர்தலை ஜனவரி மாதம் நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது பற்றி தீர்மானிக்கப்படும் என கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhr1.html
விக்னேஸ்வரன் கொஸ்லந்தைக்கு விஜயம் - மலையக அரசியல் தலைமைகள் மறுமலர்ச்சிக்கான பாதையை திறக்க முயல வேண்டும்: சிறீதரன் எம்பி
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 08:12.00 AM GMT ]
மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு அவர் விஜயம் செய்துள்ளார்.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் சந்தித்துள்ளார்.
குறுகிய அரசியல் நோக்குடன் செயற்படுவதனை அரசியல்வாதிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
சுயலாப அடிப்படையில் செயற்படாது மண்சரிவு எச்சரிக்கை தொடர்பில் முன்கூட்டியே அரசியல்வாதிகள் கவனம் செலுத்தியிருந்தால் இந்த நிலைமையை தவிர்த்திருக்கலாம்.
இந்த துயர் மிகுந்த தருணத்தில் வடக்கிற்கும் மலையகத்திற்கும் இடையில் புதிய பிணைப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கத் தயார். பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியருக்கு அடைக்கலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட முடியும்.
உதவிகள் கோரப்பட்டால் தேவையான உதவிகளை வழங்க வட மாகாணசபை நடவடிக்கை எடுக்கும் என விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
மலையக அரசியல் தலைமைகள் மறுமலர்ச்சிக்கான பாதையை திறக்க முயல வேண்டும்: சிறீதரன் எம்பி
மலையக மக்களின் பாதுகாப்பானதும் நிரந்தரமானதுமான வாழ்க்கை பற்றி இனி சிந்திக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாரிய மண்சரிவினால் புதையுண்டுபோன கொஸ்லாந்த, மீரியபெத்த போன்ற இடங்களில் ஏற்பட்ட பாதிப்புக்களையும் பாதிக்கப்பட்ட மக்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மலையகத்தை சேர்ந்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் அக்கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பிரதி அமைச்சர் ராதாகிருஸ்ணன் உட்பட பலர் சென்றிருந்தனர்.
இதன் போது கருத்து வெளியிட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன்,
மலையக சொந்தங்களின் வாழ்கையில் இந்த சம்பவம் ஒரு மாறுதலை தரவேண்டும்.
இந்த மக்கள் பற்றிய சிந்தனையில் அரசாங்கமும் மலையகத்தை நிர்வகிக்கும் அரசியல் தலைமைகளும் மறுமலர்ச்சிக்கான பாதையை திறப்பதற்கு முயலவேண்டும்.
காலதிகாலமாக கொத்தடிமைகளாகவே வாழுகின்ற இந்த மக்களுக்கு லயன் வாழ்க்கை மாறி அவர்களுக்கு நிரந்தரமானதும் பாதுகாப்புமான வீட்டுவசதிகள் வாழ்வு ஏற்படுத்தப்படுவது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.
இன்று மண்சரிவினால் ஏற்பட்ட ஏழை மக்களின் மரணம் தம் எதிர்கால சந்ததிக்கான தியாகமாக கருதப்பட்டு, அவர்களின் நினைவுகள் சுமந்து மலையக சொந்தங்களும் மலையக அரசியல் தலைமைகளும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் துரிதமாக ஒரு சுபீட்சமான மலையக வாழ்வு நோக்கி சிந்தித்து செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
பதுளை இடைதங்கள் முகாம் பாராமரிப்பு செயற்பாடுகள் பொருத்தமற்றது: யோகேஸ்வரன் எம்.பி
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடைத்தங்கள் முகாம்களில் மேற்கொள்ளப்படுகின்ற பராமரிப்புச் செயற்பாடு மிகவும் பொருத்தமற்றதாக காணப்படுகின்றது என த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,
உண்மையில் இது மிகவும் வேதனையான விடயம். நான் இரண்டு நாட்களுக்கு முன் இவ்விடத்திற்கு விஜயம் செய்து இம்மக்கள் பற்றிய தகவல்களை பெற்று அவர்களுக்கு உதவிகள் வழங்கினேன்.
குறிப்பாக இப்பகுதியில் 54 வீடுகள் முற்றுமுழுதாக சேதமாகியுள்ளது, அதே வேளையில் அதனைச் சூழ்ந்திருக்கின்ற மக்களும் பாதிப்பை எதிர்கொள்ளக் கூடிய சூழல் இருப்பதன் காரணமாக அந்த மக்களும் அங்கிருந்து இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை பொருத்தமட்டில் கொஸ்லாந்து கணேசா வித்தியாலயத்தில் 11 குடும்பங்களும், எஞ்சிய மக்கள் பூணாகலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் இருக்கின்றனர்.
அதே வேளை ஏனைய குடும்பங்கள் சார்பான தகவல்கள் எமக்கு கிடைக்கபெறவில்லை.
அங்கிருந்த குடும்பங்களை தவிர்த்து அவ்வழியால் வேலைக்குச் சென்றவர்களும் இதில் பாதிக்கப்ட்டிருக்கின்றார்கள.
எனினும் இந்த அரசாங்கமானது திட்டமிட்ட வகையில் இந்த மக்களுக்கான இடைத்தங்கள் முகாம் பராமரிப்பினை மேற்கொள்ளவில்லை.
குறிப்பாக பெரகல பகுதியில் இருந்து 17 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கின்ற பாதிப்புக்குள்ளான பிரதேசத்திற்கு அருகாமையில் இருக்கின்ற கணேசா வித்தியாலயத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஏற்படுத்தப்பட்டிருக்கும் முகாமில் அடிப்படை வசதிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை.
இதேவேளை பண்டாரவளையில் இருந்து 22 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கின்ற மிகவும் குளிரான பிரதேசமாகிய பூணாகலையில் அடுத்த முகாமினை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அங்கும் வசதிகள் செய்து கொடுப்பதில் தாமதிக்கின்றார்கள்.
எனவே இந்த அரசாங்கம் இரண்டு முகாமிலும் இருக்கின்ற மக்களை பண்டாரவளையில் ஒரு சிறந்த இடத்தினை தெரிவு செய்து அவர்களுக்கு தற்காலிக கொட்டிலை அமைத்து தனித்தனியாக அந்த குடும்பங்களை தங்கவைக்க வேண்டும்.
இங்கு பூரண உதவிகள் வந்து கிடைத்தாலும் கூட அதனைப் பராமரிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லை.
ஒரு அனர்த்தம் இடம்பெற்றால் எந்தளவிற்கு இந்த முகாம் பராமரிப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற பல அனர்த்தங்களில் ஏற்பாடுகள் செய்தவர்கள் என்ற ரீதியில் எமக்கு பல அனுபவம் இருக்கின்றது.
எனவே அந்தவகையில் இந்த மக்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற பராமரிப்புச் செயற்பாடு மிகவும் பொருத்தமற்றதாக இருப்பதனை நான் கூறவேண்டியவனாக இருக்கின்றேன்.
இந்த விடயத்தினை நான் பாராளுமன்றத்திலும் பேச இருக்கின்றேன். அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் உட்பட அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்து என்னால் இயன்ற அளவு முயற்சிகள் மேற்கொள்வேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhr2.html
இந்திய தலைநகரில் பிரபாகரனின் புகைப்படத்துடன் சீக்கியர்கள் போராட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 08:53.14 AM GMT ]
இந்தியத் தலைநகர் டெல்லியில் சீக்கியர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தினை ஏந்தியவாறு இன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
சீக்கிய இனப்படுகொலையின் 30வது ஆண்டு நினைவு தினத்தினை நினைவேந்தும் முகமாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், இனப்படுகொலைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட இந்தியாவின் பிரதான தேசிய இனங்களான சீக்கியர்கள், காஷ்மீரியர்கள், நாகர்கள், தமிழர்கள் பங்குபற்றியுள்ளனர்.
இதேவேளை, இந்தப் பேரணியில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணியில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்களுடன் சீக்கிய இன சகோதரர்களும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப் படத்தினை ஏந்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhr4.html
Geen opmerkingen:
Een reactie posten