தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 november 2014

முஸ்லிம் காங்கிரஸ் கோருவது ஈழம் அல்ல!– சபீக் ரஜாப்தீன்



மலையகத்தில் நிலச்சரிவு ஆபத்தால் அப்புறப்படுத்தப்பட்டவர்களுக்கு தகர அறைகள்!
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 08:58.43 AM GMT ]
நுவரெலியா மாவட்டத்தில் நிலச்சரிவு மற்றும் நிலச்சரிவு ஆபத்து காரணமாக தேயிலை தோட்டங்கள் ,ஏனைய இடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட மக்களுக்கு கூடாரங்களுக்கு பதிலாக தகரங்களினால் அமைக்கப்பட்ட தற்காலிக அறைகளை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் டி.பி.ஜி. குமாரசிறி தெரிவித்துள்ளார்.
20 அடி நீளம் மற்றும் 10 அடி அகலத்தில் இந்த அறைகள் நிர்மாணிக்கப்பட உள்ளன.
மாவட்டத்தில் நிலவும் அதிகமான குளிர் மற்றும் மழைக் காரணமாக கூடாரங்களில் தங்கியிருப்பதை தோட்டத் தொழிலாளர்கள் அசௌகரியமாக கருதுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் குமாரசிறி குறிப்பிட்டுள்ளார்.
நிலச்சரிவு ஆபத்து காரணமாக குடியிருப்புகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கான இந்த தற்காலிக அறைகளை அமைப்பதற்கான தகரங்களை அரசாங்கம் வழங்குவதுடன் ஏனைய செலவுகளை தோட்ட நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும்.
இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிரந்தர வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட பின்னர், தற்போது வழங்கப்படும் தகரங்கள் மீளபெறப்பட்டு, அவர்களுகாக நிர்மாணிக்கப்படும் வீடுகளுக்கு பயன்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொத்மலை டன்சினன் தோட்டத்தில் 89 அறைகளும், வெவன்டன் தோட்டத்தில் 58 அறைகளும், நுவரெலியாவில் 11 அறைகளும், இராகலை தியனில்லையில் 31 அறைகளும் நிர்மாணிக்கப்பட உள்ளன.
கொத்மலை டன்சினன் தோட்டத்தில் இந்த தற்காலிக அறைகளை அமைப்பதற்காக மூன்று பில்லியன் பெறுமதியான தகரங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
அறைகளை நிர்மாணிப்பதற்கு சிவில் பாதுகாப்பு படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் குமாரசிறி குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhr5.html

மண்சரிவுக்கு முன்னர் மீரியபெத்தையில் இடம்பெற்ற நிகழ்வு: பூசகருடன் புதையுண்ட கோயில்
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 09:35.40 AM GMT ]
கொஸ்லாந்த, மீரியபெத்த தோட்டத்தில் மண்சரிவு ஏற்படுவதற்கு முன்னர் அங்கு நடந்த நிகழ்வொன்றின் காணொளி கிடைக்கப் பெற்றுள்ளது.
கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது நடைபெற்ற அரசியல் கூட்டம் மற்றும் மதவழிபாட்டின் போது இக்காணொளி எடுக்கப்பட்டுள்ளது. 
அண்மையில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் இந்த சிலையும் அம்மன் கோவிலும், மகாமுனி சிலையும் புதையுண்டு போனதுடன் பூஜை செய்யும் பூசகரும் பலியாகியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhr7.html
கடத்தலில் ஈடுபட்ட அமைச்சர் கடவுளிடம் முறைப்பாடு?
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 10:18.33 AM GMT ]
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரும் ”லக்ஷமன் யாபா மன்றத்தின்” தலைவருமான லக்ஷமன் யாப்பா அபேவர்தன, தன் மீது அபாண்டமான பொய் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக தண்டனை வழங்குமாறு ”கெட்டபெறி” ”தேவேந்திர” ஆலயங்களில் வேண்டியதாக தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக தெரியவருவதாவது,
அமைச்சர், மன்றத்தின் ஊடாக ஏழை மக்களுக்கு வழங்கும் நோக்கில் ஜப்பான் நாட்டில் இருந்து பயன்படுத்தப்பட்ட பழமையான துவிச்சக்கர வண்டிகளை இறக்குமதி செய்துள்ளார்.
எனினும் தமது அரசியல் எதிரிகள் தான் மோட்டார் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்ததாகவும் பொய்ப் பிரச்சாரம் செய்வதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை இது சம்பந்தமாக சுங்க அதிகாரிகள் குறிப்பிடுகையில்,
40 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்ட இரண்டு கொள்கலன்கள் மீது சந்தேகம் கொண்டு ஆய்வு கருவிகளின் உதவியுடன் பரீட்சித்த போது அதன் உள்ளே மோட்டார் வாகன உதிரிபாகங்கள் இருந்ததாகவும், இதை சுங்க இலாக்காவிற்கு சமர்ப்பித்த ஆவணங்களில் குறிப்பிட்டது போல் பயன்படுத்தப்பட்ட 200 துவிச்சக்கர வண்டிகள் இல்லையென்பதை உறுதி செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு கொள்கலன்களையும் தடுத்து, மேலதிக பரிசீலனைக்கு தடுத்து வைத்திருந்த போதும் கடந்த வெள்ளி இரவு (பரீட்சித்து பார்க்கும் முன்பே) எடுத்து செல்லப்பட்டதாகவும் சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அரசியல் அவதானிகள், அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவிற்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களுக்கு எதிராக அவர் குற்றப்புலனாய்வு பிரிவு அல்லது பொலிஸ்மா அதிபரிடமே முறைபாடு செய்ய வேண்டும் அவர்கள் விசாரணையை மேற்கொள்வார்கள்.
ஆனால் அமைச்சரோ ஆண்டவனிடம் முறைப்பாடு செய்கின்றார் என குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhsz.html
முஸ்லிம் காங்கிரஸ் கோருவது ஈழம் அல்ல!– சபீக் ரஜாப்தீன்
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 11:03.55 AM GMT ]
பொத்துவிலில் இருந்து சம்மாந்துறை, சாய்ந்தமருது வரையான பிரதேசங்களில் உள்ள மீனவர்களுக்கு தனியான நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.
இது தனி ஈழத்திற்காக விடுக்கும் கோரிக்கையல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் சுனாமி அனர்த்தத்திற்கு பின்னர் இந்த பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மீனவர்கள் மீண்டும் அங்கு மீள்குடியேற்றப்படவில்லை.
மீனவர்களுக்காக தனியான நிர்வாகம் ஒன்றை கோரினாலும் அது கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்டதாகவே இருக்கும் எனவும் ரஜாப்தீன் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhs0.html

Geen opmerkingen:

Een reactie posten