[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 05:00.55 PM GMT ]
யாழ்ப்பாண மாவட்டத்தில் நான்கு பயனாளிகளுக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் கண் பார்வையை முற்றாக இழந்த குடும்பத் தலைவரை கொண்ட ஒருவருக்கும் சிறு வியாபாரத்தை மேற்கொள்வதற்காக குளிரூட்டிகள் முதலமைச்சின் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXjr6.html
தொடரும் தங்கக்கடத்தல்! மாட்டிக்கொண்டு முழிக்கும் ஆசாமிகள்
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 05:01.22 PM GMT ]
இதன் தொடர்ச்சியாக இன்று இந்தியாவுக்கு செல்லவிருந்த இரண்டு பயணிகளை சோதனையிட்ட போது அவர்கள் தங்கள் காற்சட்டையின் பெல்ட் போடும் பகுதியில் அதன் பின்னால் மறைத்து தங்கத்தை கடத்திச் செல்ல முற்பட்டது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து சுங்கத்துறையினர் அவர்களிடமிருந்த தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். அதன் எடை சுமார் 550 கிராம் என்றும் மதிப்பு 26 லட்சம் ரூபா என்றும் தெரிய வந்துள்ளது.
பின்னர் தங்கத்தைக் கடத்திய பயணிகள் இருவரும் கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இருவரும் கண்டி, அக்குறணை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXjr7.html
ஜனாதிபதி தேர்தல்! வேட்பாளர் ஒருவரை நிறுத்த முன்னணி சோசலிச கட்சி தீர்மானம்
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 12:53.09 AM GMT ]
ஏனைய இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய சோசலிச கட்சி, மாவோவத கம்யூனிஸ்ட் கட்சி, பராக்ஸிக்ஸ் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்பினருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இரண்டு பிரதான கட்சிகள் மட்டுமே நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்ற கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டுமென முன்னணி சோசலிச கட்சியின் அரசியல்பீட உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
இடதுசாரி கட்சிகளும் நாட்டை ஆட்சி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாரை இடதுசாரி வேட்பாளராக களமிறக்குவது என்பது தீர்மானிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjsy.html
மீரியபெத்த நிவாரண சேவைகள் இராணுவத்திடம் ஒப்படைப்பு
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 01:08.36 AM GMT ]
மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மூன்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாம்களின் பராமரிப்பு பணிகளை இராணுவத்தினர் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர்.
கொஸ்லந்த ஸ்ரீ கணேசா வித்தியாலம், புனாகலை வித்தியாலயம் மற்றும் புனாகலை ஆரம்ப பாடசாலை ஆகியவற்றில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய முறையில் சேவைகள் வழங்கப்படவில்லை.
உணவு மற்றும் ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்படாத காரணத்தினால், பராமரிப்பு பணிகளை இராணுவத்தினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக பாதுகாப்புபடை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடாக முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjs0.html
Geen opmerkingen:
Een reactie posten