தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 25 november 2014

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து பிரிட்டனில் விவாதம் நடைபெற்றுள்ளது !

நாளை மறுநாள் யாழில் நடக்கப்போவது என்ன ? யார் தடுத்தாலும் சஞ்சலி நடந்தே தீரும் ஆனந்தி !

[ Nov 25, 2014 02:32:05 PM | வாசித்தோர் : 2925 ]
பொலிசார் இல்லையேல் ராணுவத்தினர், யார் தடுத்தாலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நடந்தே தீரும் என வடமாகாண சபையின் முக்கிய உறுப்பினர் ஆனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே திருமதி அனந்தி சசிதரன் மேற்கண்டவாறு கூறினார். அரசாங்கமும் இராணுவமும் எங்கள் இனத்துக்காகப் போராடி தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தக் கூடாது என இந்த வருடமும் இரும்புக்கரம் கொண்டு தடுக்கின்றனர். ஆனால் என்றோ ஒரு நாள் இந்த நாளை எந்தத் தடங்கலும் இன்றிக் கொண்டாடும் நிலை வரும்.
மாவீரர் தினத்தைக் அனுஷ்டிக்க முற்பட்டவர்களை கைது செய்து இராணுவம் அச்சுறுத்தியது. அவர்கள் மீது தாக்குதலும் நடத்தியது.ஆனால் இவற்றையெல்லாம் புறந்தள்ளி மக்கள் இராணுவத்தினரின் அச்சுறுத்தலைக் கண்டு அஞ்சாது 27ம் திகதி வீடுகளில் பிரார்த்தனை செலுத்தினர். இவற்றையும் இராணுவம் தடுக்க முனைந்தது, முனைகிறது. ஆனாலும் அவர்களால் இது முடியாது. என ஆனந்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1506.html

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து பிரிட்டனில் விவாதம் நடைபெற்றுள்ளது !

[ Nov 25, 2014 02:39:40 PM | வாசித்தோர் : 2855 ]
இலங்கையில் மிகச்சிறந்த முறையில் தேர்தல்களை கண்காணிப்பது எவ்வாறு என்பது குறித்து பிரிட்டனும் ஏனைய நாடுகளும் ஆராய்ந்துவருவதாக பிரிட்டனின் பிரபுக்கள் சபை தெரிவித்துள்ளது. இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம், உட்பட பல விடயங்கள் குறித்து பிரிட்டனின் பிரபுக்கள் சபை நேற்று(திங்கள்) விவாதித்துள்ளது. இந்த விவாதத்தின் போது பிரபுக்கள் சபை உறுப்பினர், எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள சபையின் அமைச்சரவை பேச்சாளர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பினால் உருவாக கூடிய தாக்கங்கள் குறித்து நாங்கள் ஆராய்ந்துவருகின்றோம், ஐரோப்பிய ஒன்றியத்தின் பட்டியலை தொடர்வது குறித்து பிரிட்டன் அர்ப்பணிப்புடன் உள்ளது. விடுதலை புலிகள் அமைப்பு தன்னை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க முடியாது என வாதிட்டதை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பிரிட்டன் விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பு என கண்டிக்கின்றது. அந்த அமைப்பு தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே தடையை நீக்குவது தொடர்பாக நாம் ஆராய்ந்து வருகிறோம் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
இதேவளை இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு முன்னெடுக்கும் விசாரணைகளில் தன்னுடன் போதியளவு ஒத்துழைக்கவில்லை என மனித உரிமை ஆணையாளர்,தெரிவித்தள்ளார், இது குறித்து நாங்கள் கவலையும் கரிசனையும் கொண்டுள்ளளோம் என அவர் தெரிவித்துள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/1507.html

Geen opmerkingen:

Een reactie posten