தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 25 november 2014

மைத்திரிபால போன்று பெரிய மீன் ஒன்று தேர்தலுக்கு சில நாட்களுக்குமுன்னர் எதிரணியின் வலையில்..

மகிந்தவிடம் காணியுரிமை கேட்க முடியாதவர்களே மக்களிடம் அவருக்காக வாக்கு கேட்கிறார்கள்

[ Nov 25, 2014 02:49:41 PM | வாசித்தோர் : 1050 ]
மலைநாட்டில் காணி-வீட்டு உரிமையையும், நுவரேலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச சபை ஆட்சியுரிமையையும் மகிந்த ராஜபக்சவிடம் பேரம் பேசி கேட்டு வாங்கி கொடுக்க முடியாதவர்கள்தான், இந்த முறையும் அவருக்காக மலைநாட்டு மக்களிடம் வந்து வாக்கு கேட்கிறார்கள். இதென்ன மலைநாட்டு கூத்து ? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடத்திய, மலையக சிந்தனையாளர் எம். வாமதேவனின் "மலையகம்-சமத்துவ அபிவிருத்தியை நோக்கி" என்ற நூல் வெளியீட்டு விழாவில் கருத்துரை வழங்கிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
அம்பகமுவை, நுவரேலியா ஆகிய இரண்டு நுவரேலியா மாவட்ட பிரதேச சபைகள்தான், பிரதேச செயலகங்கள்தான் இந்தநாட்டிலேயே மிகப்பெரிய பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள். ஒவ்வொன்றிலும் 150,000 பேர் வாழ்கிறார்கள். பொகவந்தலாவையில் இருந்து கினிகத்தேனை வரை, அம்பகமுவை பிரதேச சபை பரந்து விரிந்து இருக்கிறது. அதேபோல், ஹட்டனுக்கு மேலே இருந்து கந்தபொல எல்லை வரை நுவரேலியா பிரதேச சபை பரந்து விரிந்து இருக்கிறது. ஆனால் ஏன் இந்த பாரபட்சம் ?
இவற்றை பிரித்து ஒவ்வொன்றிலும் குறைந்த பட்சம் ஆறு பிரதேச சபைகளை உருவாக்கி தரும்படி நீண்ட காலமாக மலையகம் கோரி வருகிறது. ஆனால், ஒன்றும் நடக்க வில்லை. இதோ, அதோ என்கிறார்கள். வரும், ஆனால் வாராது என்பது போல் அது இதுவரையில் நடைபெறவில்லை. தமிழனுக்கு அங்கே மென்மேலும் பிரதேச சபைகளும், அவற்றில் மந்திரிகளும், அதன்மூலம் ஆட்சியுரிமையும் கிடைக்கக்கூடாது என பேரினவாதம் நினைக்கின்றது. அதுதான் உண்மை. ஒரு காணி உரிமையக் கூட பெற்றுத்தர வக்கில்லாத சில தமிழ் தலைவர்கள். இம்முறை மகிந்தருக்காக வோட்டுக்கேட்டு மலையகத்தில் அலைந்து திரிகிறார்கள் என்று மனோகணேசன் மேலும் தெரிவித்தார்.
http://www.athirvu.com/newsdetail/1508.html

மைத்திரிபால போன்று பெரிய மீன் ஒன்று தேர்தலுக்கு சில நாட்களுக்குமுன்னர் எதிரணியின் வலையில்..

[ Nov 25, 2014 02:57:18 PM | வாசித்தோர் : 2820 ]
மைத்திரிபால சிறிசேன போன்று பெரிய மீன் ஒன்று தேர்தல் வாக்களிப்பிற்கு சில நாட்களுக்கு முன்னர், எதிரணியினரின் வலையில் விழலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முக்கிய பதவியில் உள்ள அமைச்சர் ஒருவரே இந்த பெரிய மீன் என தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட அமைச்சரை மைத்திரிபாலவின் விலகலிற்கு பின்னர், செய்தியாளர் மாநாடுகளில் காணமுடிந்தாலும் அவரது உரையின் தொனியில் மாற்றங்கள் தெரிவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஆளும் குடும்பத்தை சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே, குறிப்பிட்ட அமைச்சர் அரசாங்கத்திலிருந்து விலகுவது குறித்து சிந்தித்துவருகின்றார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மகிந்த குடும்பத்தை சேர்ந்த அந்த நபர் தடையாகயிருப்பதாக அவர் கருதகின்றார். மேலும் அமைச்சரவை மாற்றத்திற்கு பின்னர் தனக்குவழங்கப்பட்ட அமைச்சு பதவி குறித்தும் அவர் ஏமாற்றமடைந்துள்ளார். தன்னுடைய அரசியல் வளர்ச்சி காரணமாக பொறாமை கொண்ட சிலர் தன்னை அவமானப்படுத்துவதற்காக மேற்கோண்ட நடவடிக்கை என அவர் கருதுகின்றார்.
தற்போது மகிந்த ராஜபக்ஷ சில அமைச்சர்களை மாற்றி வேறு துறைகளில் அமைச்சுப் பதவிகளில் போட்டுள்ளார். இதனால் பல அமைச்சர்கள் அதிருப்த்தியடைந்துள்ளார்கள். தேர்தல் நெருங்க நெருங்க மேலும் எத்தனை பேர் தாவப்போகிறார்களோ தெரியவில்லை.
http://www.athirvu.com/newsdetail/1509.html

Geen opmerkingen:

Een reactie posten