எதிரணியின் புதிய ஆட்சியில் சர்வதேச ரீதியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் முழுமையாக ஒழிக்கப்படுவார்கள். எனவே, இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்த முடியுமென்ற புலிகளின் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லையென உறுதியளிக்கின்றேன் என ஐ.தே.க. வின் பா.உ. சஜித் பிரேமதாஸ சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவு செலவு திட்டம் மீதான நிதியமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் வெற்றி நிச்சயிக்கப்பட்டது. அவ்வாறு வெற்றி பெற்றதன் பின்னர் நாட்டையோ அரசாங்கத்தையோ நிர்வகித்த தலைவர்களையோ அல்லது படையினரையோ ஒருபோதும் காட்டிக் கொடுக்கமாட்டோம்.
எதிரணி வெற்றி பெற்றவுடன் மீண்டும் சதி செய்து தனிநாட்டை உருவாக்கிக் கொள்ள முடியுமென்ற சர்வதேச புலிகள் கனவு காண்பார்களாயின் அது ஒரு போதும் நிறைவேறாது. அது மட்டுமல்ல எதிரணி ஆட்சியில் சர்வதேச ரீதியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால் அது தலைவர் மற்றும் படையினர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்ற பிரசாரம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நடைபெறவிருப்பது தேசிய தேர்தலொன்றே தவிர சர்வதேச தேர்தலொன்றல்ல. அதற்கும் சர்வதேச நீதிமன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி நிச்சயம் வெற்றி பெறும். அப்படி வெற்றி பெறும் போது நாட்டையோ அரசை நிர்வகித்த தலைவர்களையோ அல்லது படையினரையோ நாம் ஒரு போதும் காட்டிக் கொடுக்கமாட்டோம்.
நாட்டை விற்கும் கூட்டம் நாங்கள் அல்ல எதிர்க்கட்சியினர் வெற்றி பெறுவதானால் அரச தலைவர்களை படையினரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வோம் என்ற கனவை சர்வதேச புலிகள் காணலாம். அப்படியான கனவு ஒரு போதும் நிறைவேறப் போவதில்லை என்பதை ஐ.தே. கட்சியின் பிரதித்தலைவர் இங்கு உறுதியளிக்கின்றேன்.
ஐ.தே. கட்சி என்பது நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த கட்சியாகும். நாம் ஒரு போதும் நாட்டை காட்டிக் கொடுக்க மாட்டோம். அரச மற்றும் தேசிய தலைவர்களை காட்டிக் கொடுக்கமாட்டோம்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் எஞ்சியிருக்கும் சர்வதேச புலிகளையும் இல்லாதொழிக்க செயற்படுவோம்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் எஞ்சியிருக்கும் சர்வதேச புலிகளையும் இல்லாதொழிக்க செயற்படுவோம்.
ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி வெற்றி பெறுவதால் மீண்டுமொரு சதி செய்து தனி நாடொன்றை உருவாக்கிக் கொள்ள முடியுமென சர்வதேச புலிகள் நினைத்தால் அது ஒரு போதும் நிறைவேறாது.
எதிரணியின் பிரதான கட்சியான ஐ.தே. கட்சியின் பிரதித்தலைவர் என்ற ரீதியில் இதை நான் உறுதிபட தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYeoz.html
Geen opmerkingen:
Een reactie posten