[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 01:19.58 AM GMT ]
நாடாளுமன்ற விவாதத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் பற்றி இன்று பேசப்படுகின்றது. எனினும் அரசாங்கத்தின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டத்தை பின்பற்றுவதில்லை.
இவ்வாறான ஓர் நிலைமையில் மக்களை எவ்வாறு சட்டத்தை மதிப்பவர்களாக மாற்ற முடியும்?
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏன் இந்த சட்டத்தை ரத்து செய்ய முடியாது.
தமிழ் மக்களின் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்படுகின்றன.
சிறுபான்மை மக்களுக்கு ஒரு சட்டமும் பெரும்பான்மை மக்களுக்கு மற்றுமொரு சட்டமும் அமுல்படுத்தப்படுகின்றது.
இவ்வாறான இரட்டை நிலைப்பாடு நாட்டில் மீளவும் பிரச்சினைகளை கிளர்ச்சிகளை உருவாக்க வழியமைக்கும் என அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டடில் இரண்டு வகையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளது: அரியம் எம்.பி
இலங்கையில் இரண்டு விதமான சட்டங்கள் நடைமுறைப்படுத்தபடுவதாகவும், வடக்கு கிழக்கிற்கு உள்ளே ஒரு சட்டமும்,வடக்கு கிழக்கிற்கு வெளியே ஒரு சட்டமும் நடைமுறைபடுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் சட்டமும் ஒழுங்குகளும் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத்தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்தநாட்டிலே தற்போது அவசரகால தடைச்சட்டம் நீக்கப்பட்டிருந்தாலும் பயங்கரவாதச்தடைத்சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருந்து கொண்டே இருக்கின்றது. அதுவும் குறிப்பாக தமிழ்மக்களை இலக்கு வைத்தே வடகிழக்கு பிரதேசங்களிலே இச்சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
2009ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்டதற்குப் பின்னர் அந்தக்காலகட்டங்களில் போரினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களைக்கூட நினைவுகூற முடியாத நிலையிலே தமிழ்மக்கள் இன்று இந்த நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.இதற்கு இந்தச்சட்டங்கள் உறுதுணையாக இருந்துகொண்டிருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலே கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் சத்துரக்கொண்டான் படுகொலை, வந்தாறுமூலை படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை, மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு படுகொலை போன்ற படுகொலைகளில் மரணித்த தமது உறவுகளுக்குக்கூட அஞ்சலி செலுத்த முடியாத நிலையிலேயே தமிழ்மக்களும் த.தே.கூட்டமைப்பும் இருக்கின்றது.
இறந்தவர்களுக்கு எமது கட்சியினாலும்,உயிர் நீத்த உறவுகளாலும் அஞ்சலி செலுத்தப்படுகின்றதோ இங்கு பொலிசார் தடைஉத்தரவினை பிறப்பித்து எம்மையும் எமது மக்களையும் திருப்பி அனுப்பும் வரலாறே தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றது.
போராட்டத்தில் நூற்றுக்கணக்கில் இறந்த முஸ்லிம்களும், ஆயிரக்கணக்கில் இறந்த சிங்களவர்களும் சுதந்திரமாக அவர்களுடைய உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி கொடுக்கும் அரசாங்கம் இலட்சக்கணக்கில் தங்களது உயிர்களை தியாகம் செய்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையிலையே தமிழ்மக்கள் இருந்து கொண்டு இருக்கின்றார்கள்.
போருக்கு பின்னரான காலப்பகுதியில் இன்று 500க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் சிறைச்சாலைகளிலே சிறைவாசம் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
இவர்களை விடுதலை செய்வதனைப்பற்றியோ அல்லது அவர்களது வழக்குகளை துரிதமாக விசாரிப்பது பற்றியோ இந்த அரசாங்கம் கணக்கில் எடுப்பதில்லை.
மாறாக விடுதலைப்புலிகளாக செயற்பட்டவர்கள் பிரதி அமைச்சராகவும், முன்னால் முதலமைச்சராகவும்,அரசசார்பற்ற நிறுவனங்களை நடாத்துபவர்களாகவும் அரசாங்கத்தின் அனைத்து சலுகைகளையும் பெற்று மக்கள் மத்தியில் வலம்வந்து கொண்டிருக்க அப்பாவி இளைஞர்கள் இன்றும் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் இன்று சமூகத்துடன் இணைக்கப்பட்டு சந்தோசமாக வாழ்கின்றார்கள் என்று அரசாங்கம் பெருமையாக கூறுகின்றது ஆனால் நடப்பது என்ன புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்குப் பின்னால் பல புலனாய்வாளர்கள் அவர்களை நிம்மதியாக வாழ விடாமல் வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
இதுதான் இங்கு நடக்கும் சட்டம் எமது கட்சி சுதந்திரமாக ஒரு ஊர்வலத்தினைக்கூட வடகிழக்கில் நடத்தமுடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையிலேதான் அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றறோம். ஊர்வலம் நடத்துவதற்கான அனுமதியினை பொலிசாரிடம் இருந்து பெற்றுக்கொண்டாலும் அதனை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தும் நிகழ்வுகள்தான் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றது.
நாங்கள் எங்களது மக்களின் நிலைமைகள் பற்றி இந்த பாராளுமன்றத்திலே பேசுவதற்குக்கூட முடியாத நிலையில்தான் இருக்கின்றோம்.
அவ்வாறு எங்கள் மக்களின் பிரச்சனைகளை இங்கு முன்வைத்து பேசுகின்றபோது உடனடியாக புலி முத்திரையினை குத்தும் செயற்பாடுதான் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இதுவரைக்கும் எங்களது மக்கள் தொடர்பாக நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு அரசாங்கம் இன்றும் பதில்தராமல் மௌனித்துக்கொண்டுதான் வருகின்றது.
எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவிருப்பதனால் தற்போது புலிமுத்திரையை மீண்டும் எங்கள் பக்கம் குத்தத்தொடங்கியுள்ளார்கள் காரணம் புலிகள் பெயரை வைத்துத்தான் இவர்கள் தென்பகுதியில் அரசியல் நடத்தமுடியும்.
அதன்காரணமாக எங்களை பார்த்து புலி முத்திரை குத்தி வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
நாங்கள் பாராளுமன்றம் சென்றது அரசாங்கத்திற்கு புகழ்மாலை பாடுவதற்கல்ல மாறாக எங்களது வடகிழக்கில் உள்ள தமிழ்மக்களின் உண்மையான நிலையினை எடுத்துக்கூறுவதற்காகவே நாங்கள் இங்கு வந்தோம் எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXhv6.html
பிரதேச சபைத் தலைவர்களுக்கும் அஞ்ச வேண்டிய நிர்ப்பந்தம் பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது: ஜே.வி.பி.
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 01:28.00 AM GMT ]
அரசியல் சக்திகள் இன்று பொலிஸாரை அடிமைப்படுத்தியுள்ளனர்.
சுயாதீனமான முறையில் சட்டத்தை அமுல்படுத்த பொலிஸாருக்கு முடியாத நிலைமை நாட்டில் காணப்படுகின்றது.
பொலிஸ் திணைக்களத்தின் கடை நிலை உத்தியோகத்தர்களுக்கு உரிய வசதிகள் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளங்கள் போதுமானதல்ல.
பொலிஸ் உதவி உத்தியோகத்தர்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படுவதில்லை.
இன்று நாட்டின் சட்டம் முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலைமையானது மிகவும் வருந்தத்தக்கது என அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு குறித்த நாடாளுமன்ற வரவு செலவுத்திட்டம் தொடர்பாக நேற்று நடந்த விவாதத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாருக்கு புதிய சீருடைகள்
புதிதாக வடிவமைக்கப்பட்ட சீருடைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இவை, பொதுமக்களுக்கு நட்புடன் செயற்படும் வகையிலான தோற்றத்தை கொண்டிருப்பதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று நேற்று உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.
இதேவேளை பொலிஸ் தொடர்பான சட்டமும் விரைவில் திருத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள், பொலிஸ் பொலிட்டிஸைஸ் (பொலிஸ் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது) என்று குற்றம் சுமத்தினர்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXhv7.html
நாம் புலிகளைப் பற்றி பேசவில்லை! மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை பற்றியே பேசுகிறோம்: சம்பந்தன்
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 01:37.53 AM GMT ]
வட மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. எனினும், மாகாணசபையின் அரசியல்வாதிகளுக்கு எவ்வித அதிகாரங்களும் வழங்கப்படவில்லை.
இடம்பெயர் மக்கள் தங்களது சொந்த இடங்களுக்கு செல்ல சந்தர்ப்பம் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.
இராணுவத்தினர் வடக்கு தமிழ் மக்களின் காணிகளை கைப்பற்றியுள்ளனர். இந்தக் காணிகளை மீளவும் மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவினர் இலங்கைக்கு வர அனுமதிக்காமை காரணமாக அவர்களுக்கு உண்மைத் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் புரிந்தமை குறித்து நாம் பேசவில்லை. சிவில் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றியே நாம் குறிப்பிடுகின்றோம்.
போரின் பின்னர் இலங்கையில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படாமை காரணமாகவே ஐக்கிய நாடுகள் அமைப்பு சர்வதேச விசாரணைகளை நடத்துகின்றன.
சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டம் இதுவரையில் அமுல்படுத்தப்படவில்லை என சம்பந்தன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXhwy.html
Geen opmerkingen:
Een reactie posten