இராணுவத்தினரை அவமரியாதை செய்த நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொஸ்லந்தை மிரியாபெத்த மண் சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் இராணுவத்தினரை கடுமையாக விமர்சனம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இராணுவத்திற்கு இழிவு ஏற்படும் வகையில் இராணுவ அதிகாரிகளையும் படைவீரர்களையும் திட்டிய நாடாளுமன்ற உறுப்பினரின் நடவடிக்கை குறித்து அறிக்கையொன்று இராணுவத் தளபதியிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இதனை மத்திய மாகாண பாதுகாப்பு படைப் பிரதானி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா உறுதி செய்துள்ளார்.
அனுமதியின்றி எவரையும் பிரதேசத்திற்குள் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்ற எனது உத்தரவினையே படையினர் பின்பற்றியிருந்தனர்.
கடந்த 1ம் திகதி அங்கு சென்ற குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் படையதிகாரிகளை திட்டி அச்சுறுத்தியதுடன் இராணுவத்தையும் இழிவாக பேசியுள்ளார்.
பொதுவாக இவ்வாறு அனர்த்தம் இடம்பெற்ற பிரதேசத்திற்கு எவரையும் அனுமதிக்காமல் இருக்க படையினர் எடுக்கும் தீர்மானம், அனைவரினதும் பாதுகாப்பு கருதியேயாகும்.
அனுமதி கோரியிருந்தால் அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்க முடியும்.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் படையினரின் சீருடைகளை கழற்றுவதாகவும், உயர் அதிகாரிகளுக்கு அவதூறு ஏற்படும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என மனோ பெரேரா சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
எனினும், இராணுவத்திற்கு அவமரியாதை செய்த நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரை அவர் நேரடியாக வெளியிடவில்லை.
அண்மையில் மண்சரிவு அர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த மக்களை பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சிறிரங்கா சென்றிருந்த போது இராணுவத்தினர் அனுமதி மறுத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இராணுவத்தினருடன் அவர் வாக்குவாதம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXhv5.html
Geen opmerkingen:
Een reactie posten